பட்டர் இறால் முட்டை மசாலா
தேவையான பொருட்கள்
- பட்டர் – 1 கப்
- இறால் – ½ கிலோ
- முட்டை – 4 ( வேக வைத்தது )
- வெங்காயம் – 2 ( பொடியாக நறுக்கியது )
- தக்காளி – 2 ( பொடியாக நறுக்கியது )
- பட்டை – 2 துண்டு
- கிராம்பு – 3
- பிரியாணி இலை – 2
- சோம்பு – 1 ஸ்பூன்
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- கொத்தமல்லி – சிறிதளவு
செய்முறை
- முதலில் இறாலை நன்கு சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
- வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் கொள்ளவும்.
- எண்ணெய் சூடானதும் அதில் பட்டை, கிராம்பு, சோம்பு, கறிவேப்பிலை மற்றும் பிரியாணி இலை சேர்த்து தாளிக்கவும்.
- பின்னர் பொடியாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தைச் சேர்த்து வதக்கவும்.
- வெங்காயம் பாதி அளவிற்கு வதங்கியதும், தக்காளியைச் சேர்த்து நன்கு வதக்கவும்.
- தக்காளி நன்கு குழைவாகும் வரை வதக்கவும்.
- வெங்காயம் , தக்காளி வதங்கியவுடன் இறாலைச் சேர்த்து வதக்கவும்.
- இறாலில் உள்ள தண்ணீர் வற்றும் வரை இறாலை நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- இறால் தண்ணீர் வற்றி வதங்கியவுடன் அதில் மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து மசாலாவின் பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
- இத்துடன் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி சிறிது தண்ணீர் விட்டு வேகவிடவும்.
- இறால் நன்கு வெந்ததும் அதில் 4 முட்டைகளை உடைத்து நன்கு கலந்து இறாலுடன் சேர்த்து கிளறி விடவும்.
- இறுதியாக பட்டர் கொஞ்சம் சேர்த்து கிளறி கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான இறால் பட்டர் மசாலா ரெடி.