கத்திரிக்காய்
கத்தரிக்காய் செடியின் அறிவியல் பெயர் சொலனும் மெலோங்கெனா ஆகும். கத்தரிச் செடிகள் பூக்கும் செடி கொடிகளைச் சேர்ந்த சொலானனேசியே என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு செடிவகையாகும். சொலான்னேசியேக் குடும்பத்தில் தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற மற்ற காய்கறிகளும் அடங்கும். இது தென்னிந்தியாவிலும், இலங்கையிலும் அதிகம் விளைவிக்கபடுகிறது.
கத்திரிக்காய் வளரியல்பு
கத்திரிக்காய்ச் செடி 40 முதல் 150 செ.மீ வரை வளரும் இயல்பு கொண்டது. கத்திரிக்காய் ஊதா, வெள்ளை, மற்றும் பச்சை நிறங்களில் விளைகிறது. இதில் பல்வேறு ரகங்கள் உள்ளன. இக்காயைத் குழம்பிலோ, கறியாகவோ பொரித்தோ, வதக்கியோ, மசித்தோ சாப்பிடலாம்.
காய்கறிகளில் கத்தரிக்காய் நம் உடலை பாதுகாப்பதில் பெரும் பங்கை வகிக்கிறது. கத்தரிக்காயில் உள்ள நீர்ச்சத்து, சருமத்தை மென்மையாக வைத்துக் கொள்ள உதவுகிறது. கத்தரிக்காயில் உடலுக்கு ஊட்டம் தருகின்ற அனைத்து விட்டமின் சத்துக்களும் நிறைந்துள்ளன.
கத்திரிக்காய் நரம்பு மண்டலத்தை வலுவூட்டவும், சளி, இருமலைக் குறைக்கவும் பயன்படுகிறது. அப்படிப்பட்ட நன்மை தரக்கூடிய கத்தரிக்காயை பலரும் உணவில் சேர்த்து கொள்வதில்லை. அனால் கத்திரிக்காயில் ஏராளமான சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றது.
கத்திரிக்காயில் உள்ள சத்துக்கள்:-
கத்திரிக்காயில் கலோரி – 24%, புரத சத்து – 0 கிராம், நார்ச்சத்து – 3.40 கிராம், இரும்பு சத்து – 0.24 மில்லி கிராம், கால்சியம் – 9 மில்லி கிராம், சோடியம் – 2 மில்லி கிராம், பொட்டாசியம் – 229 மில்லி கிராம், சர்க்கரை – 3.5 கிராம், வைட்டமின் B6 போன்றவை அடங்கியுள்ளன. மேலும் கத்தரிக்காயில் வைட்டமின்கள் ஏ, சி, பி1, பி2, இரும்புச்சத்து, புரதம், நார்ச்சத்து கார்போஹைடிரேட், பாஸ்பரஸ், கால்சியம், போன்ற சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.
கத்திரிக்காய் நன்மைகள்:-
பல்வேறு நோய்களை குணபடுத்தும்
வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று. கத்தரிக்காயை பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது.
சருமத்தை மிளிரவைக்கும்
கத்தரிக்காயில் நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்து காணப்படுவதால் சருமத்தில் உள்ள நச்சுத்தன்மையை நீக்கி சருமத்தை ஒளிர வைக்கிறது. கத்தரிக்கையை தினமும் சாப்பிட்டு வந்தால் முடியின் வேர்கால்கள் வலுப்பட்டு முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
மூளையின் செயல்திறனை அதிகரிக்கும்
கத்தரிக்காயில் உள்ள கிலோரோஜினிக் என்ற அமிலம் சிறந்த ஆன்டி-ஆக்ஸிடன்டாக செயல்பட்டு உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது. மூளையின் செயல் திறனை அதிகரித்து நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது.
ஏராளமான சத்துக்கள் நிறைந்தது
முற்றிய பெரிய காய்களைச் சாப்பிட்டால் உடம்பில் அரிப்பு ஏற்படும். குறிப்பாக, வீட்டிலே வளர்த்துப் பிஞ்சாகப் பறித்துச் சாப்பிட வேண்டிய காய்களுள் இதுவும் ஒன்றாகும். தக்காளிக்கு இணையானது, இக்காய். தக்காளியைப் போலவே எடை, புரதம், கலோரி அளவு, தாது உப்புகள் முதலியன கத்தரிக்காயில் உள்ளன. ஆனால் வைட்டமின் ‘ஏ’யும், வைட்டமின் ‘சி’யும் குறைவாகவே உள்ளன.
ஆனால் இதை சரிசெய்யும் வகையில் வைட்டமின் ‘பி’ தக்க அளவில் உள்ளது. இதனால் நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் உடனடியாகச் சிதைந்து சத்தாக மாறக் கத்தரிக்காயில் உள்ள வைட்டமின் ‘பி’ பயன்படுகிறது. பாரிச வாயுநோய் தடுக்கப்படுகிறது. பசியின்மை அகற்றுகிறது. உடல் சோர்வடைவதை குறைக்கப்படுகிறது. மூச்சுவிடுதலில் சிரமம், தோல் மரத்துவிடுவது முதலியவையும் தடுக்கப்படுகிறது.
பார்வை திறனை அதிகரிக்கும்
முற்றிய காய்கள் உடல் வளர்ச்சிக்குப் பயன்படும். காரணம், இவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் இருக்கிறது. ஆனால், அளவாகத்தான் பயன்படுத்தவேண்டும். இதனால் கண்பார்வைத் திறனும் அதிகரிக்கும். உடலுக்கு சூடு தரும் காய்கறி இது. எனவே, மழை நேரத்தில் கூட இரவு நேரத்தில் உடல் கதகதப்பாய் இருக்கக் கத்தரிக்காய் குழம்பு சமைத்து உண்ணலாம்.
இரும்பு சத்து குறைபாட்டை தீர்க்கும்
நமது உடல் பலம் பெற, ரத்தத்தில் இரும்புச்சத்து சரியான அளவில் இருப்பதும் அவசியமாகும். தேவைக்கு அதிகமாக நமது உடலில் இரும்புச்சத்து இருந்தாலும் அது உடல் ஆரோக்கியத்தில் பல தொந்தரவுகளை நமக்கு ஏற்படுத்தும். கத்திரிக்காய் அடிக்கடி சாப்பிடுவதால் நமது உடலில் இருக்கும் அளவுக்கதிகமான இரும்புச்சத்தை உடலில் இருந்து நீக்கும்.
யாரெல்லாம் கத்திரிக்காய் சாப்பிடக்கூடாது
1. கத்திரிக்காயில் அதிகப்படியான புரொட்டின், சோலனைன், ஹிஸ்டமின் இருப்பதால், கத்திரிக்காய் சாப்பிடும் சிலர் உடம்பின் தன்மைக்கு ஒத்துப் போகாமல் அலர்ஜியை உண்டாக்குகிறது.
2. கத்திரிக்காய் அதிகமாக சாப்பிட்டால் அதில் உள்ள சோலனைன் என்ற புரோட்டின் ஜீரண மண்டலம் மற்றும் நரம்பு மண்டலத்திற்கு எதிராக இடையூறு விளைவிக்கும். இதனால் அலர்ஜி, வாந்தி, மயக்கம், வயிற்று வலி, தலை சுற்றல் மற்றும் காய்ச்சல் போன்றவை ஏற்பட காரணமாக உள்ளது.
3. கத்தரி வற்றலும் உடம்பில் சூட்டை ஏற்படுத்தும். நீர்க்கனத்தைக் குறைக்கும். உடல் பருமனைக் குறைக்கும். உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயைத் தவிர்ப்பது நல்லது. உடலுக்குச் சூடு தரும் காய் என்பதால் அரிப்பை உண்டு பண்ணிப் புண்கள் ஆற அதிக நாள் ஆகும்.