எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பயன்?
நாம் எல்லோரும் தினமும் குளிக்கிறோம். வாரத்தில் இரு நாட்கள் தலைக்கு குளிக்க வேண்டும். விசேஷ நாட்களிலும், பூஜையில் கலந்து கொள்ளும் போதும் தலைக்கு குளிக்க வேண்டும். இது வயதானவர்களுக்கு, நோயாளிகளுக்கு, சிறு குழந்தைகளுக்கு பொருந்தாது. பலரும் எண்ணெய் தேய்த்து, தீபாவளி அன்று, அதிகாலையில் குளிப்பர். இது எல்லோருக்கும் பொதுவானது. அறிந்ததும் கூட. எனினும் தீபாவளி தவிர மற்ற நாட்களில் அல்லது மற்ற கிழமைகளில் எண்ணெய் ஸ்நானம் செய்தால் என்னென்ன பலன்கள் எற்படும் என்பதை நாம் இந்தக் கட்டுரை மூலமாகப் பார்ப்போம். வாருங்கள்.
கிழமைகளும் பலன்களும்
ஞாயிற்றுக்கிழமை எண்ணெய் ஸ்நானம் செய்தால் – அழகு போகும்.
திங்கட்கிழமை கிழமை எண்ணெய் ஸ்நானம் செய்தால் – பொருள் சேரும்.
செவ்வாய்க்கிழமை எண்ணெய் ஸ்நானம் செய்தால் – குடும்பத்திற்கு ஆகாது.
புதன்கிழமை எண்ணெய் ஸ்நானம் செய்தால் – கல்வி வளரும்.
வியாழக்கிழமை எண்ணெய் ஸ்நானம் செய்தால் – அறிவு அழியும்.
வெள்ளிக்கிழமை எண்ணெய் ஸ்நானம் செய்தால் – புகழ் உண்டாகும்.
சனிக்கிழமை எண்ணெய் ஸ்நானம் செய்தால் – சம்பத்து உண்டாகும்.
மேற்கண்ட இவை ஒரு புறம் இருக்க, அமாவாசை, பிறப்பு, இறப்பு காலங்களில் வெந்நீரில் குளிக்க கூடாது.
அதே போல, அது ஏன் நல்லெண்ணெயில் நீராட வேண்டும்? ஜோதிட சாஸ்திரப்படி நல்லெண்ணை குளியலால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன ?
நல்லெண்ணை குளியலின் நன்மைகள்
- சனி தோஷம் விலகும்.
- சனியினால் ஏற்படும் வாதம் மற்றும் எலும்பு நோய்கள் நீங்கும்
- புதனால் ஏற்படும் சரும நோய்கள் மற்றும் நரம்பு நோய்கள் நீங்கும்.
- சுக்கிரனின் காரகமான முடி கொட்டுவது நின்று நன்கு வளரும்.
- சூரியன் மற்றும் செவ்வாயால் ஏற்படும் உடல் உஷ்ணம் நீங்கும்.
வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்கு கொடு என கூறினார்கள் பெரியோர்கள். ஆரோக்கியமாக இருப்பவர்கள் உங்கள் ஆரோக்கியத்தை மேலும் காத்துக் கொள்ள வாரத்தில் இரண்டு நாட்களாவது எண்ணெய் ஸ்நானம் செய்யுங்கள்.