அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்
அவிட்டம் நட்சத்திரத்தின் இராசி : மகரம் மற்றும் கும்பம்
அவிட்டம் நட்சத்திரத்தின் அதிபதி : செவ்வாய்
அவிட்டம் நட்சத்திரத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் பாதம் இராசி அதிபதி (மகரம்) : சனி
அவிட்டம் நட்சத்திரத்தின் மூன்றாம் மற்றும் நான்காம் பாதம் இராசி அதிபதி (கும்பம்) : சனி
அவிட்டம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : அஷ்ட வசுக்கள்
அவிட்டம் நட்சத்திரத்தின் பரிகார தெய்வம் : முருகன்
அவிட்டம் நட்சத்திரத்தின் நட்சத்திர கனம் : ராட்சஸ கனம்
அவிட்டம் நட்சத்திரத்தின் விருட்சம் : வன்னி (பாலில்லா மரம்)
அவிட்டம் நட்சத்திரத்தின் மிருகம் : பெண் சிங்கம்
அவிட்டம் நட்சத்திரத்தின் பட்சி : வண்டு
அவிட்டம் நட்சத்திரத்தின் கோத்திரம் : புலஸ்தியர்
அவிட்டம் நட்சத்திரத்தின் வடிவம்
அவிட்டம் நட்சத்திரம் நட்சத்திரங்களின் வரிசையில் 23வது இடத்தை பிடிக்கிறது. இதற்கு ‘காக்கை’ என்ற பெயரும் உண்டு. அவிட்டம் நட்சத்திரம் வான் மண்டலத்தில் மிருதங்கம், உடுக்கை போன்ற வடிவங்களில் காணப்படும்.
அவிட்டம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்
அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தவிட்டு பானையிலும் தங்கம் எடுப்பார்கள் என்று சொல்கிறது சாஸ்திரம். அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சுறுசுறுப்பான மனநிலையைக் கொண்டவர்களாய் இருப்பார்கள். பிரதிபலன் பாராமல் உதவும் எண்ணம் கொண்டவர்கள். தேக ஆரோக்கியத்தை பேணுவதில் மிகுந்த கவனம் செலுத்துவார்கள். அதிக எச்சரிக்கை உணர்வு கொண்டவர்கள். இவர்கள் இசையில் ஆழ்ந்த விருப்பம் கொண்டிருப்பார்கள். தாராள சிந்தையும், செல்வவளமும், நல்ல தீரமான உணர்வும் கொண்டவராக விளங்குவார்கள். பிறர் உங்களை மதித்து மரியாதை, தருவார்கள்.
இவர்களது கணவன் அல்லது மனைவி இவர்களை மிகவும் விரும்பி நேசிப்பார்கள். மனைவியின் பேச்சுக்கு மதிப்பளிக்கக்கூடியவர்கள். இவர்களின் சகோதர, சகோதரிகளை மிகவும் விரும்பி அன்பு காட்டுவார்கள். பிறரின் பொருட்கள் மேல் ஆசைபடமாட்டார்கள். செல்வமும், செல்வாக்கும் உடையவர்கள். கம்பீரமான தோற்றமும் வைராக்கியமான மனதையும் கொண்டவர்கள். கோபமும், நிதானமும் ஒரு சேர பெற்றவர்கள். பெற்றோர் மீது அன்பு கொண்டவர்கள். அழகான தோற்றம் உடையவர்கள். புத்திக்கூர்மை உடையவர்கள். தியாக மனப்பான்மை உடையவர்கள். ஊன் விரும்பி உண்பார்கள். யாருக்கும் பயப்படமாட்டார்கள்.
இவர்கள் சிறந்த அறிவாளி. எடுத்துக் கொள்ளும் வேலைகளை சிறப்பாக செய்து முடிக்கும் திறமைசாலியாக விளங்குவார்கள். மனம், வாக்கு, செய்கையால் யாருக்கும் தீங்கிழைக்க மாட்டார்கள். இவர்கள் தன் சுய முயற்சியால் வாழ்க்கையில் வெற்றி பெறுவார்கள். பிறருடைய கருத்துக்கள் தனக்கு ஒத்து வராவிட்டால் கடைசிவரை ஒத்துக்கொள்ள போவதில்லை. குடும்ப நிர்வாகத்தைப் பொறுத்தவரை தலைமை பொறுப்பில் இருப்பார்கள். கிரகபலம் நன்றாக இருந்தால் பிறப்பு வசதியான குடும்பத்தில் அமையும். நேர்மையான தொழிலை செய்பவர்கள்.
ஒரு விஷயத்தை எடுத்து கொண்டால் அதில் ஏற்படும் சாதக பாதகங்களை அலசி ஆராய்ந்து தீர்க்கமான முடிவு எடுப்பார்கள். சில நேரங்களில் அவசர முடிவுகளை எடுத்து விட்டு ஆபத்தில் மாட்டிக் கொள்வதும் உண்டு. மதியாதார் தலைவாசலை மிதிக்க மாட்டார்கள். சொல்லில் கோபமும், செயலில் நிதானமும் உடையவர்கள். சிக்கனத்தில் அதிக நாட்டம் கொண்டிருப்பார்கள். மற்றவர்கள் மதிக்கப்படும்படியான வாழ்க்கையை அமைத்துக் கொள்வார்கள். திருமண வாழ்க்கை திருப்திகரமாக அமையும். பக்தி மார்க்கத்தில் அதிகம் நாட்டம் கொண்டவர்கள். படிப்பதிலும், தன்னை அழகாக காட்டி கொள்வதிலும் அதிக நேரம் செலவழிப்பார்கள்.
அவிட்டம் நட்சத்திரம் முதல் பாதம் :
இவர்களிடம் அவிட்டம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்கள் ஆடம்பர செலவுகளை கூடிய மட்டும் தவிர்ப்பார்கள். பசியை தாங்க இயலாதவர்கள். இளகிய மனம் கொண்டவர்கள். பலமான மற்றும் கம்பீரமான தேகம் கொண்டவர்கள். செல்வம் உடையவர்கள். இளகிய மற்றும் லேசான மனம் உடையவர்கள். இவர்கள் சொல்லுக்கு செல்வாக்கு இருக்கும். செல்வம் அதிகம் உடையவர்கள்.
அவிட்டம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் :
இவர்களிடம் அவிட்டம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்கள் வஞ்சக எண்ணம் உடையவர்கள். சிந்தித்து செயல்படுவது இவர்களின் இயல்பாக இருக்கும். விடாமுயற்சி கொண்டவர்கள். பூஜை, மத சடங்குகளில் அதிக நம்பிக்கை உடையவர்கள். கொடுப்பதில் சிறந்தவர்கள். காத்திருந்து பழி வாங்க கூடியவர்கள். உண்மையை பேச கூடியவர்கள். பிறருக்கு தானம் கொடுப்பதில் சிறந்தவர்கள்.
அவிட்டம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் :
இவர்களிடம் அவிட்டம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்களிடம் நல்ல குணங்கள் இயல்பாகவே நிறைந்து இருக்கும். சற்று இளைத்த உடல் அமைப்பு கொண்டவர்கள். திடமான மனம் கொண்டவர்கள். நம்பிக்கை உடையவர்கள். சிவந்த நிறம் உடையவர்கள். போராடி வெற்றி பெற கூடியவர்கள்.
அவிட்டம் நட்சத்திரம் நான்காம் பாதம் :
இவர்களிடம் அவிட்டம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். அதிர்ஷ்டம் அதிகம் உடையவர்கள். எதையும் ஒருமுறைக்கு பல முறை ஆராய்ந்து செய்யக்கூடியவர்கள். சாத்தியமற்ற வித்தியாசமான எண்ணங்களை உடையவர்கள். எதையும் தன்நம்பிக்கையுடன் தைரியமாக செய்யக்கூடியவர்கள். வித்தியாசமான சிந்தனைகளை அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். கர்வம் அதிகம் உடையவர்கள்.
மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.