அஷ்டமி திதி
அஷ்ட என்றால் எட்டு என்று அர்த்தம். இது ஒரு வடமொழி சொல்லாகும். அமாவாசை நாளிலிருந்து அல்லது பவுர்ணமி நாளிலிருந்து வரும் எட்டாவது நாள் அஷ்டமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் அஷ்டமியை சுக்கில பட்ச அஷ்டமி என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் அஷ்டமி தினம் கிருஷ்ண பட்ச அஷ்டமி என்றும் அழைக்கபடுகிறது.
அஷ்டமி திதியின் சிறப்புகள்
அஷ்டமி திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்
அஷ்டமி திதியில் பிறந்தவர்கள் சமர்தியசாளிகளாக இருப்பார்கள். புத்திர செல்வம் உடையவர்கள், இரக்க குணம் உள்ளவர்கள், ஆரோக்கியமான உடல் மற்றும் மனவலிமை உடையவர்கள். இவர்களுக்கு காம இச்சை அதிகம் இருக்கும். செல்வ வளம் உடையவர்களாக இருப்பார்கள்.
அஷ்டமி திதியில் என்னென்ன செய்யலாம்
அஷ்டமி திதியின் தெய்வம் மஹாருத்ரன் ஆவார். இந்த திதி வரும் நாளில் ஆயுதம் எடுத்தல், எதிரிகள் மீது வழக்கு தொடுக்க, அரண் அமைக்க, போர் மற்றும் தற்காப்பு கலைகளை கற்றுகொள்வது போன்றவற்றை செய்யலாம். மேலும் தெய்வ காரியங்களுக்கு தீட்சை பெறுவது, மந்திரங்கள் கற்பது, ஹோமங்கள் போன்றவற்றை செய்யலாம்.
அஷ்டமி திதியில் என்ன செய்ய கூடாது
அஷ்டமி திதியில் சுபகாரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். குறிப்பாக திருமணம், குடும்ப விழாக்கள், கிரஹ பிரவேசம் போன்றவை செய்ய கூடாது. வியாழன் அன்று வரும் அஷ்டமி திதியில் நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.
அஷ்டமி திதிக்கான பரிகாரம்
தேய்பிறை அஷ்டமி திதியில் தான் சிவபெருமான் பைரவர் அவதாரம் எடுத்து பூமிக்கு வந்தார். பைரவருக்கு பௌர்ணமிக்கு அடுத்து வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் வாழ்வில் ஏற்படும் சகல கஷ்டங்களும் நீங்கும். மேலும் இழந்த செல்வம் மீண்டும் கிடைக்கவும், தொழிலில் வளர்ச்சி பெறவும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலைக்கவும், செல்வ செழிப்புடன் வாழவும் தேய்பிறை அஷ்டமியில் பைரவர் வழிபாடு செய்ய வேண்டும்.
தேய்பிறை அஷ்டமியில் திதியில் தான் அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வணங்கி தங்களுக்கு தேவையான சக்தியை பெற்று மக்களுக்கு செல்வங்கள் வழங்கி வருகின்றனர் என்று சித்தர்களும் கூறியுள்ளனர். மேலும் ராகு காலத்தில் ஸ்ரீசொர்ண பைரவரின் சன்னதியில் அவரின் மந்திரத்தை 330 தடவை ஜெபித்தால் ஏழரைசனி, அஷ்டமசனி, கண்டகசனி காலங்களில் சனியால் ஏற்படும் பாதிப்புகள் அகலும்.
அஷ்டமி திதிக்கான திதி சூன்ய ராசிகள்
அஷ்டமி திதிக்கான திதி சூன்ய ராசிகள் மிதுனம் மற்றும் கன்னி ஆகும்.
அஷ்டமி திதிக்கான தெய்வங்கள்
அஷ்டமி வளர்பிறை திதிக்கான தெய்வங்கள் : பைரவர், மற்றும் மகாலட்சுமி
அஷ்டமி தேய்பிறை திதிக்கான தெய்வங்கள் : ருத்திரர், மற்றும் மகாலட்சுமி
திதி பலன்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.