ஆப்பிள் பாயாசம்
ஆப்பிளில் உள்ள பொட்டாசியம் இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இதன் வழக்கமான நுகர்வு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவுகிறது மற்றும் இதயம் தொடர்பான நோய்களைக் குறைக்க உதவுகிறது. ஆப்பிளில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் சி உள்ளது. ஆப்பிளில் எளிதில் கரையக்கூடிய நார்ச்சத்து உள்ளதால் மலச்சிக்கலை சரி செய்ய உதவும்.
தேவையான பொருட்கள்
- பால் – 1 லிட்டர்
- சர்க்கரை – 250 கிராம்
- இனிப்பு இல்லாத கோவா – 1 கப்
- ஆப்பிள் – 4
- நெய் – 2 ஸ்பூன்
- கண்டென்ஸ்டு மில்க் – ¼ கப்
- ஏலக்காய் தூள் – சிறிதளவு
- முந்திரி, திராட்சை , பாதாம் – தேவையான அளவு
செய்முறை
- ஆப்பிள் பாயாசம் செய்வதற்கு ஆப்பிளை தோல் சீவி அதில் உள்ள விதைகளை நீக்கி விடவும்.
- பின்னர் ஆப்பிளை நன்கு துருவி எடுத்துக் கொள்ளவும்.
- அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் சிறிதளவு நெய் சேர்த்துக் கொள்ளவும்.
- நெய் சூடானதும் அதில் முந்திரி, திராட்சை, பாதாம், சேர்த்து பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- பின்னர் அதே பாத்திரத்தில் இன்னும் சிறிது நெய் சேர்த்து துருவி வைத்துள்ள ஆப்பிளை சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
- 1 லிட்டர் பாலை தண்ணீர் சேர்க்காமல் நன்கு காய்ச்சிக் கொள்ளவும்.
- பால் காய்ந்தவுடன் அதில் கோவாவை நன்கு கட்டிகள் இல்லாமல் உதிர்த்து சேர்த்துக் கொள்ளவும்.
- பின்னர் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து சில நிமிடங்களுக்கு கொதிக்க விடவும்.
- சிறிது நேரம் கொதித்ததும் சர்க்கரையை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
- சர்க்கரை நன்கு கரைந்ததும் நெய்யில் வதக்கி வைத்துள்ள ஆப்பிளை சேர்த்து கிளறி விடவும்.
- கடைசியாக சிறிதளவு ஏலக்காய் தூள் சேர்த்து இறக்கினால் சுவையான ஆப்பிள் பாயாசம் தயார்.