Home ஆன்மிகம் சடங்குகள், சம்பிரதாயங்கள் அமாவாசை அன்று வீட்டில் ஏன் கோலம் போடக் கூடாது?

அமாவாசை அன்று வீட்டில் ஏன் கோலம் போடக் கூடாது?

அமாவாசையில்  வீட்டில் ஏன் கோலம் போடக் கூடாது?

தினசரி காலை, மாலை என இரண்டு வேளையும் கோலம் போடுவதை  நாம் வழக்கமாக கொண்டுள்ளோம். தினந்தோறும் கோலமிடுவதால் வீட்டில் தெய்வகடாட்சம்  நிறைந்திருக்கும் என்பது ஐதீகம். நமது முன்னோர்கள், வாழும் இல்லத்தை கடவுளின் இருப்பிடமாகக் கருதினர். இதன் காரணமாகவே குடும்பம் ஒரு கோயில் என்றனர்.

அமாவாசையில் ஏன் கோலம் போடக்கூடாதுஇதனால் வீட்டை புனிதமாக்கும் வகையில் தினமும் காலை, மாலையில் வாசலை சுத்தம் செய்து கோலம் போடுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். கோலம் போடுவதும் வழிபாட்டில் ஒன்றாகும். அதிகாலையில் வீட்டு வாசலில் சாணம் தெளித்து கோலமிட்டால் மகாலட்சுமி நம் இல்லம் தேடி வருவாள் என்பது ஐதீகமாகும். ஆனால் அமாவாசை அன்று மட்டும் நாம் கோலம் போடுவதில்லை. அது ஏன் என்பதை பார்க்கலாம்.

அமாவாசை அன்று ஏன் கோலம் போடக்கூடாது? அதற்கான காரணங்கள்

அமாவாசை அன்று கோலமிடாமல் இருத்தலும் தமிழர் பண்பாட்டில் ஒன்றுதான். இறை வழிபாடும், முன்னோர் வழிபாடும் ஒன்றாக ஒரே நேரத்தில் வந்தால் நாம் முன்னோர் வழிபாட்டிற்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும். இக்காரணத்தாலேயே, நாம் அமாவாசையன்று கோலமிடுவதை தவிர்க்கிறோம். இது, முன்னோர்களுக்கு நாம் அளிக்கும் முன்னுரிமையாகும்.

கோலங்கள் தெய்வ வழிபாட்டிற்கு உரியவை என்பதுடன் மகிழ்ச்சியின் வெளிப்பாடாகவும் இருக்கிறது. எனவே முன்னோர்களை இழந்து அவர்கள் பிரிவால் வாடும் நாம் கோலம் போடுவதை தவிர்ப்பது மரபாகும்.

அமாவாசை தினத்தில் வீட்டு வாசலில் கட்டாயம் கோலம் போடக் கூடாது. ஏன் என்றால் அன்றைய தினத்தில் தான் பித்ருக்கள் வீட்டிற்கு வருவதால் கோலம் போட்டு விசேஷமாக கொண்டாடக் கூடாது. எனவே அமாவாசை தினங்களில் முன்னோர்களை வழிபாடு செய்பவர்களும், முன்னோர்களுக்கு பிதுர் காரியங்கள் செய்பவர்களும் கோலமிடுவதை தவிர்க்க வேண்டும்.

அமாவாசை என்பது பித்ருக்களுக்கான தினம். அன்றைய நாளில் தர்ப்பணம் கொடுத்து முடித்ததும், வாசலில் கோலம் போடலாம். அன்றைய தினம் முழுவதுமே வாசலில் கோலம் போடாமல் இருந்தாலும் தவறில்லை.

மறைந்த நமது முன்னோர்களுக்கு உகந்த தினமாக அமாவாசை இருக்கின்றது. அதனால் தான் ஒவ்வொரு மனிதனும் தினமும் இல்லாவிட்டாலும், அமாவாசையன்று மட்டுமாவது தானம் தருமங்களைச் செய்ய வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லியிருக்கிறார்கள்.

அமாவாசையன்று செய்கின்ற தர்ப்பணத்தினால், நமது முன்னோர்களின் தாகமும், பசியும் நிவர்த்தியாகும் என்கிறது சாஸ்திரம். அதனால் தான் பிதுர் தர்ப்பணம் செய்யும் பொழுது எள்ளும், தண்ணீரும் இறைக்கிறோம்.

அமாவாசையன்று நம்மை ஆசிர்வதிக்க, நம் இருப்பிடத்தைத் தேடி நம் முன்னோர்கள் வருகிறார்கள். அவர்களின் பசி, தாகம் தீர எள்ளு கலந்த நீரினால் தர்ப்பணம், சிராத்தம் செய்யும் போது, அவர்கள் அதை ஏற்றுக்கொண்டு அவர்களின் பசியையும், தாகத்தையும் தணித்துக் கொண்டு நம்மை ஆசிர்வதிக்கிறார்கள்.

அமாவாசையன்று தர்ப்பணமும் கொடுத்து, பித்ருக்களுக்குப் பிடிக்காத சிலவற்றையும் செய்து வந்தால் பலன்கள் கிடையாது. அதனால் தான் அமாவாசையன்று சிலவற்றை  நாம் தவிர்க்க வேண்டும். அதாவது வாசலில் கோலம் போடுவது, மணி அடிக்கும் ஒலி போன்றவற்றையும் நாம் தவிர்க்க வேண்டும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version