ஆனி மாதத்தில் பிறந்தவர்களின் குணங்கள்
தமிழ் மாதங்களில் மூன்றாவதாக வருவது ஆனி மாதமாகும். ஆனி மாதத்தில் பிறந்தவர்கள் மிகுந்த புத்திசாலிகள், மேலும் மிகுந்த பொறுமைசாலிகள். இவர்கள் சிறந்த நகைச்சுவை உணர்வு கொண்டவர்கள். இவர்களுக்கு சிந்திக்கும் ஆற்றல் அதிகம் இருக்கும். வாழ்வில் முன்னேற வேண்டும் என்னும் வேகம் கொண்டவர்கள். தன் குடும்பம், மனைவி மற்றும் குழந்தைகள் மீது அதிகம் பாசமாக கொண்டவர்கள். மற்றவர்களை இவர்கள் பேச்சிலேயே மயக்கி விடுவார்கள். ஞாபக சக்தி அதிகம் கொண்ட இவர்கள் அடிக்கடி தாம் எடுக்கும் முடிவுகளை மாற்றிக்கொண்டே இருப்பர். சந்தேகப்படும் குணம் கொண்டவர்கள். இவர்களின் மனம் ஒரு நிலையாக இருக்காது.
எந்த ஒரு விஷயத்தை எடுத்து கொண்டாலும் அதை எளிதில் புரிந்து கொள்ள கூடியவர்கள். இவர்களிடம் கொள்கை என்று எதுவும் கிடையாது. தங்கள் உள்ளத்தில் இருப்பதை மற்றவர்கள் அறியும் வண்ணம் வெளிப்படுத்த மாட்டார்கள். வாழ்க்கையில் சிறு கஷ்டம் ஏற்பட்டால் துவண்டு விடுவார்கள். கஷ்டத்தை தாங்கிக் கொள்ள முடியாதவர்கள். இவர்கள் அறிமுகமே இல்லாதவர்களிடம் கூட நீண்டநாள் பழகியவர் போல் நடந்து கொள்வார்கள்.
இவர்கள் சூழ்நிலைக்கு ஏற்றபடி தங்களின் கருத்தை மாற்றிக் கொண்டே இருப்பார்கள். தம்மைப் பாதிக்காமலிருக்கும் காரியங்களிலும் அதிகப் பொறுப்பு ஏற்படாமலிருக்கும் துறைகளிலும் இவர்கள் தைரியமாக இறங்குவர். இவர்கள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் புத்தி கூர்மை உடையவர்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள் தீர்க்க ஆயுளுடன் வாழ்வார்கள். இந்த மாதத்தில் பிறந்த பெண்களுக்கு அதிகமான குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்பு உண்டு.
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலனோர் பிறப்பிலேயே பெரிய செல்வம் நிறைந்த தொழிலதிபர் குடும்பத்தில் பிறந்தவர்களாக இருப்பார்கள். தான் பெரிய தொழிலதிபராக இருக்க வேண்டும் என்று விரும்புவார்களே தவிர, சிறு சிறு தொழில்களை செய்வதற்கு தயங்குவார்கள். இவர்களின் மனது நிலையாக இருக்காது. இவர்களிடம் பேச்சுத் திறமை அதிகம் இருக்கும். இவர்கள் ஒரு வேலை செய்து கொண்டிருக்கும்போதே அதை அப்படியே விட்டுவிட்டு மற்றொரு வேலையை செய்ய நினைத்து அதில் இறங்கி விடுவார்கள். அப்படி இல்லாமல் ஒரு வேலையை முடித்துவிட்டு அடுத்த வேலைக்கு செல்வது இவர்களுக்கு நல்லது.
இவர்கள் தொழில் காரணமாகவோ, கல்விக்காகவோ, வெளியூர் சென்று வேலைப் பார்க்கக்கூடிய சூழல் காரணமாகவோ, வீட்டில் உள்ளவர்களை பிரிய வேண்டி வந்தால், அதனால் ஏற்படும் கஷ்டத்தை தாங்கிக்கொள்ளும் சக்தி இல்லாதவர்கள்.. இவர்களைப் பொறுத்தவரை கிளார்க் தொழில் செய்யவே அதிகமாக விரும்புவார்கள். இவர்களுக்கு மூளைதான் மூலைதனம். இந்த ஆற்றலைப் பயன்படுத்தி இவர்கள் பல தொழில் துறைகளில் ஈடுபட்டு வாழ்வில் முன்னேற்றம் அடைவார்கள்.