ஆடிச் செவ்வாய் விரதம்
ஆடி மாதம் என்றாலே அம்மனுக்கு உகந்த மாதம் தான். மற்ற மாதங்களை காட்டிலும் ஆடி மாதத்தில் தான் அம்மனுக்கு வழிபாடுகள் அதிக அளவில் நடைபெறும். குறிப்பாக ஆடி மாதத்தில் வரும் செவ்வாய் கிழமை, வெள்ளி கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை மிகவும் சிறப்பு வாய்ந்த விசேஷ நாட்களாகும்.
இந்த மூன்று நாட்களில் இந்த மூன்று நாட்களில் ஆடிச் செவ்வாய் மிகவும் சிறப்பானதாகும். ஆடி செவ்வாய் தேடிக் குளி.. அரைத்த மஞ்சளை பூசிக்குளி’ என்பது பழஞ்சொல். இதில் இருந்தே ஆடிச் செவ்வாயன்று என்ணெய் தேய்த்து நீராடுதலின் முக்கியத்துவம் விளங்கும். அவ்வாறு செய்தால் வீட்டில் மங்கலம் தங்கும் என்பது மரபு.
ஆடி செவ்வாய்
ஆடி மாதம் வரும் செவ்வாய்க்கிழமை தோறும் சுமங்கலிப் பெண்கள் மஞ்சள் பூசிக் குளிப்பதால், மாங்கல்ய பலம் கூடும் என்பது காலம், காலமாக உள்ள நம்பிக்கையாகும். ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஔவையார் விரதம் கடைபிடிப்பதால், கணவனின் ஆயுள் அதிகரிக்கும், குழந்தை வரம் கிடைக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பெண்களுக்கு மிகவும் உகந்த ஆடி செவ்வாய் கிழமையன்று, அதிகாலையில் எழுந்து குளித்து பூஜையறையை கழுவி சுத்தம் செய்ய வேண்டும்.
பூஜையறையில் உள்ள இறைவன் படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து நெய்வேத்தியம் வைத்து வழிபட வேண்டும். ஆடி செவ்வாயில் அம்மன் பாடல்கள், லலிதா சகஸ்ரநாமம், சௌந்தர்ய லஹரி போன்ற பாடல்கள் படிப்பது நல்லது.
ஔவையார்
ஆடி மாதம் செவ்வாய் தோறும் ஔவையார் வழிபாடு செய்து விரதம் இருப்பது நல்லது.
நிவேதனமாக சர்க்கரைப் பொங்கல், பால் பாயாசம், கேசரி ஏதாவது ஒன்று செய்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பூஜை அறையில் தீபம் ஏற்றி வைத்துவிட்டு, தீபத்திற்கு அருகில் ஒரு சிறிய வாழை இலை அல்லது வெற்றிலையை வைத்து, அதில் குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும்.
பலன்கள்
ஆடி செவ்வாய் அன்று பெண்கள் விரதம் இருந்து வழிபாடு செய்வதால் வீட்டில் அனைத்து சௌகரியங்களும் கிடைக்கும்.
ஜாதகத்தில் செவ்வாய் தோஷம், நாக தோஷம், ராகு கேது தோஷம் என எந்த தோஷங்கள் இருந்தாலும் அத்தனை தோஷங்களும், கஷ்டங்களும் விலகும்.
திருமணம் மற்றும் குழந்தை பாக்கியம் விரைவில் கிடைக்கும்.
ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் பெண்கள் ஔவையார் விரதம் கடைபிடிப்பதால், கணவனின் ஆயுள் நீடிக்கும், குழந்தை வரம் கிடைக்கும், குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும், கன்னிப் பெண்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்.