Home ஜோதிடம் ராசி பலன்கள் 4 வகை ராசிகளும், அதன் குணங்களும்

4 வகை ராசிகளும், அதன் குணங்களும்

ராசிகளின் வகைகள் மற்றும் அதன் குணங்களும்

நீரும், நெருப்பும் ஒன்றாக இணையாது. நிலத்தோடு காற்றும் இணையாது. ஆனால் நெருப்போடும் காற்றும், நிலத்தோடு நீரும் இணையும். அதுபோலத்தான் இணையாக உள்ள ராசிக்காரர்களை இணைத்தால் மட்டுமே இல்லறம் நல்லதாக அமையும்.

ராசிகளில் சர ராசிகள், ஸ்திர ராசிகள், உபய ராசிகள் என பிரித்து அவற்றிற்குறிய குணாதிசயங்களை நம் முன்னோர்கள் கூறி சென்றிருக்கிறார்கள். மேலும் மேஷம், மிதுனம், சிம்மம், துலாம், தனுசு, கும்பம் ஆகியவை ஆண் ராசிகள் எனவும், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், மகரம், மீனம் ஆகியவை பெண்ராசிகள் எனவும் கூறபடுகின்றன.

ஜோதிட ரீதியாக 12 ராசிகளில் சில ராசிகளை நெருப்பு ராசி என்றும், சில ராசிகளை நீர் ராசி என்றும், சில ராசிகளை நில ராசி என்றும், சில ராசிகளை காற்று ராசி என்றும் அழைப்பதுண்டு. அந்த வகையில் உங்கள் ராசி எந்த வகையை சேர்ந்தது. அதற்கான குணம் என்ன? என்பதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

ராசிகளின் வகைகள்

நெருப்பு ராசிகள் :

மேஷம், சிம்மம், தனுசு ஆகிய மூன்று ராசிகளையும் ‘நெருப்பு ராசிகள்” என்று அழைப்பார்கள்.

நெருப்பு ராசிக்காரர்களின் குணங்கள் :

இந்த நெருப்பு வகை ராசியை சேர்ந்தவர்களுக்கு கோபம் அளவுக்கு அதிகமாக வரும். நெருப்பு வகை ராசியை சேர்ந்தவர்கள் மிகுந்த கோபக்காரராகவும், முரட்டுத்தனம்மிக்கவராகவும், தைரியசாலியாகவும், தலைமைப் பதவிகளை வகிப்பவராகவும் இருப்பார்கள்.

நில ராசிகள் :

ரிஷபம், கன்னி, மகரம் ஆகிய மூன்று ராசிகளையும் ‘நில ராசிகள்” என்று அழைப்பார்கள்.

நில ராசிக்காரர்களின் குணங்கள்

இந்த நில ராசியை சேர்ந்தவர்கள் பெரும்பாலும் பொறுமையின் சிகரமாக இருப்பார்கள். நில ராசிக்காரர்கள் சாந்தமாக விட்டுக்கொடுக்கும் குணத்துடனும், அன்பு நிறைந்த மனதுடனும், ஒழுக்கத்துடனும், பாசத்துடனும் நல்வழியில் செல்பவர்களாகவும் இருப்பார்கள்.

காற்று ராசிகள் :

மிதுனம், துலாம், கும்பம் ஆகிய மூன்று ராசிகளையும் ‘காற்று ராசிகள்” என்று அழைப்பார்கள்.

காற்று ராசிக்காரர்களின் குணங்கள் :

இந்த காற்று வகை ராசியை சேர்ந்தவர்களின் மனம் எப்போதும் அலை பாய்ந்துக்கொண்டே இருக்கும். எதையாவது சிந்தித்து கொண்டே இருப்பார்கள். காற்று ராசியாக இருப்பவர்கள் தற்பெருமையுடன், உயர்ந்த ஆராய்ச்சியுடன் அறிவாளிகள் புடைசூழ சந்தோஷமாகவும், புத்துணர்ச்சியுடனும், எந்த நேரமும் ஆலோசனை செய்து கொண்டும் இருப்பார்கள். இவர்களுக்கு எதிலும் சிறிது சந்தேக குணம் உண்டு.

நீர் ராசிகள் :

கடகம், விருச்சிகம், மீனம் ஆகிய மூன்று ராசிகளையும் ‘நீர் ராசிகள்” என்று அழைக்கிறார்கள்.

நீர் ராசிக்காரர்களின் குணங்கள் :

இந்த நீர் ராசி வகையை சேர்ந்தவர்கள் இளகிய மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். நீர் ராசியாக இருப்பவர்கள் அமைதியாகவும், நல்ல ஞானத்துடன், தங்களை சுற்றி நடக்கும் சூழலுக்கு தகுந்தவாறு தன்னை மாற்றிக்கொண்டு சந்தோஷத்துடன் பிறருக்கு உதவும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version