Home ஆரோக்கியம் உடல்நலம் தினமும் சோம்பு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

தினமும் சோம்பு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

சோம்பு தண்ணீர் குடிப்பதால் உண்டாகும் நன்மைகள்

சித்த மருத்துவத்தில் சோம்பு ஒரு சிறந்த மூலிகையாக பயன்படுகிறது. சோம்பை தண்ணீரில் போட்டு கொதிக்கவைத்து குடித்து வந்தால் இரத்தில் இருக்கக்கூடிய அழுத்தத்தையும்,  இதயத்திற்கு செல்லக்கூடிய இரத்த நாளங்கள் மற்றும் பக்கவாட்டில் இருக்கக்கூடிய கொழுப்புகக்ளை குறைப்பதற்கு உதவுகிறது.

சோம்பு தண்ணீர் நன்மைகள் காலையில் ஒரு டம்ளர் சோம்பு தண்ணீரை உட்கொள்வது உங்கள் வயிற்றை நிறைவாக வைத்திருக்க உதவுகிறது. மேலும்,  பசி உணர்வை கட்டுபடுத்தும். ஏனெனில் ஒருவரின் உடல் எடை அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் அவர்கள் அளவுக்கு அதிகமாக உணவினை சாப்பிடுவது.

உடல் எடையை குறைக்க விரும்புவோருக்கு சோம்பு தண்ணீர் எந்தத்தளவுக்கு பயன் தரும்.  மேலும் அவற்றை பருகுவதற்கான சிறந்த வழிகள் என்ன என்பதை விரிவாக காண்போம்.

சோம்பை எப்படி பயன்படுத்துவது

சோம்பில் உடலை சுத்தப்படுத்தி, மெட்டாபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்கள் அதிக அளவில்  நிறைந்துள்ளன.

சோம்பு என்றழைக்கப்படும் பெருஞ்சீரக விதைகள் நார்ச்சத்து, ஆக்ஸிஜனேற்றிகள் மற்றும் தாதுக்கள் நிறைந்தவை ஆகும். இவை அனைத்தும் உடலில் சேர்ந்துள்ள கொழுப்பை எரிக்க உதவுகிறது.

சோம்பு எனப்படும் பெருஞ்சீரக விதைகள் செரிமானம் மற்றும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவுகின்றன. உணவில் இருந்து ஊட்டச்சத்துக்களை உறிஞ்சப்படுவதை உறுதி செய்கின்றன. இதனால் இவை குறைவான பசியின்மைக்கு வழிவகுக்கிறது.

சோம்பு பொதுவாக வாய் புத்துணர்ச்சி மற்றும் சாப்பிட்ட பிறகு செரிமாணத்திற்காக உட்கொள்ளப்படுகிறது. 

தினமும் காலையில் வெறும் வயிற்றில் சோம்பு தண்ணீர் குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை குறைக்கும். மாத்திரை சாப்பிடுபவர்கள் இதனுடன் சேர்த்து சோம்பு தண்ணீர் குடித்து வரலாம்.

அசைவ உணவுகள் செரிமானம் ஆவதற்கு கடினமாக இருக்கும். சிறிது சோம்பு சாப்பிட்டால் செரிமானம் சீராக நடப்பதற்கு உதவி செய்யும்.

சோம்பு தண்ணீர் குடித்து வந்தால், நம் உடலில் தேவையில்லாமல் தங்கி உள்ள கொழுப்புகளை வெளியேற்றும், குறிப்பாக வயிற்றை சுற்றியுள்ள கொழுப்புகளை குறைக்கும் தன்மை உள்ளது. இதனால் உடல் எடை குறையும்.

பாலூட்டும் தாய்மார்கள் தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்க சோம்பை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம்.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் சிறிது சோம்பை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டால் வயிற்றில் ஏற்படும் வீக்கங்கள், வயிறு உப்பசம் ஆகியவற்றிற்கு சோம்பு நல்ல தீர்வு தரும்.

சோம்பு தண்ணீர் இரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, இரத்தத்தை சுத்தப்படுத்தும். மேலும் உடலில் இருந்து டாக்ஸின்களை முற்றிலும் வெளியேற்றி சிறுநீரக கோளாறு ஏற்படுவதை தடுக்கும்.

தினமும் காலையில் காபி குடிப்பதற்கு பதிலாக சோம்பு தண்ணீரை குடித்து வந்தால் மூளை நன்கு சுறுசுறுப்புடனும், புத்துணர்ச்சியுடனும்  செயல்படும்.

மாதவிடாய்க் காலத்தில் ஏற்படும் அடிவயிற்றுவலிக்கு, சோம்பை நீரில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்துக் குடித்தால், வயிற்றுவலி நீங்கும்.

சோம்பு தண்ணீர் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பியால் சுரக்கப்படும் மெலடோனின் எனப்படும் நேச்சுரல் ஹார்மோனை சீராக உற்பத்தி  செய்து, நல்ல நிம்மதியான தூக்கத்தை பெற வழிவகுக்கும்.

சோம்பு உணவின் மணத்தையும், சுவையையும் அதிகரிப்பதுடன் உடல் ஆரோக்கியம் மற்றும் பல நோய்களையும் குணப்படுத்தும் மருத்துவ  பணிகளையும் செய்கின்றது.

மலச்சிக்கல் மற்றும் அஜீரண கோளாறுகளை சரி செய்கிறது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version