வரகு நெல்லிக்காய் சாதம்
வரகரிசியில் மாவுச்சத்து குறைவாகவும் நார்ச்சத்து மிகுதியாகவும் உள்ளது. இதனால் மலச்சிக்கல் பிரச்சனையும் உண்டாவதில்லை. நார்ச்சத்தும் உடலில் இருக்கும் கெட்ட கொழுப்பை குறைக்கும் குறைக்கிறது. உடல் எடை குறையவும் அதிலும் ஆரோக்கியமான சத்தான உணவோடு உடல் எடை குறையவும் வரகு உணவு நல்ல தீர்வாக இருக்கும்
தேவையான பொருட்கள்
- வரகரிசி – 1 கப்
- பெரிய நெல்லிக்காய் – 5
- வர மிளகாய் – 1
- பச்சை மிளகாய் – 2
- கடுகு – ¼ ஸ்பூன்
- உளுத்தம்பருப்பு – ½ ஸ்பூன்
- பெருங்காயம் – சிறிதளவு
- மஞ்சள் தூள் – சிறிதளவு
- நல்லெண்ணெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- கறிவேப்பிலை – சிறிதளவு
- செய்முறை
- முதலில் வரகரிசியை நன்கு சுத்தம் செய்து களைந்து ½ மணி நேரத்திற்கு ஊறவைத்து வைத்துக் கொள்ளவும்.
- பின் ஒரு பாத்திரத்தில் இரண்டு கப் தண்ணீர்விட்டு நன்கு கொதிவந்ததும் வரகரிசியினை அதில் சேர்த்து ஐந்து முதல் எட்டு நிமிடம் வேகவிட வேண்டும்.
- வரகரிசி நன்கு வெந்ததும் அடுப்பை அணைத்து நீரினை நன்கு வடித்து விடவும். இப்பொழுது வரகு சாதம் தயார். இந்த வரகு சாதத்தினை ஒரு தட்டில் சேர்த்து நன்றாக ஆறவைத்துக் கொள்ளவேண்டும்.
- பெரிய நெல்லிக்காயை கழுவி கொட்டையை நீக்கி விட்டு பொடியாகத் துருவிக் கொள்ள வேண்டும்.
- அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் கடுகைப் போட்டு வெடித்ததும், உளுத்தம் பருப்பு சேர்த்து வறுத்து சிவந்ததும், கறிவேப்பிலை, வர மிளகாய், பச்சை மிளகாய், பெருங்காயம், மஞ்சள் பொடி போட்டு தாளிக்க வேண்டும்.
- பின்னர் அதனுடன் துருவி வைத்துள்ள நெல்லிக்காயைப் போட்டு நன்கு கிளற வேண்டும்.
- சிறிது நேரம் வதங்கியவுடன் அடுப்பிலிருந்து இறக்கி நெல்லிக்காய் கலவையை ஆற வைத்த வரகு சாதத்துடன் சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான வரகு நெல்லிக்காய் சாதம் ரெடி.