ஏகாதசி திதி
ஏகாதசி என்ற வார்த்தையை ஏகம் – தசம் என இரண்டாக பிரிக்க வேண்டும். ஏகம் என்றால் ஒன்று, தசம் என்பது பத்து என்று அர்த்தம். இரண்டையும் கூட்டினால் 11. இது திதிகளின் வரிசையில் 11 வது இடத்தை பிடிக்கிறது. அமாவாசை மற்றும் பவுர்ணமியிலிருந்து வரும் 11வது நாள் ஏகதசியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் ஏகாதசியை சுக்கில பட்ச ஏகாதசி என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் ஏகாதசி தினம் கிருஷ்ண பட்ச ஏகாதசி என்றும் அழைக்கபடுகிறது. மற்ற விரதங்களை விட ஏகாதசி விரதம் சிறந்ததாகும்.
ஏகாதசி திதியின் சிறப்புகள்
ஏகாதசி திதியன்று ஏகாதசி விரதம் இருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். ஏகாதசி அன்று துளசி இலைகளை பறிக்கக் கூடாது. ஏகாதசிக்கு முதல் நாளே பறித்து வைத்து கொள்ளவேண்டும். ஏகாதசியன்று துளசி தீர்த்தம் மட்டும் அருந்துவது நல்லது.
இரவில் கண் விழித்து புராண நூல்களை படிப்பது, விஷ்ணு சகஸ்ரநாமம் விஷ்ணு பாடல்கள் பாடுவது போன்றவை செய்ய வேண்டும். இந்த விரதம் இருந்தால் பாவங்கள் நீங்கும், உடல் ஆரோக்கியமடையும், செல்வம் பெருகும், சந்ததி வளரும். இந்த விரதம் இருந்தால் பிறவி பயன் நீங்கி வைகுண்டம் அடைவார்கள்.
ஏகாதசி திதியில் பிறந்தவர்களின் குணநலன்கள்
ஏகாதசி திதியில் பிறந்தவர்கள் பொருள் ஈட்டுவதில் அதிக ஈடுபாடு கொண்டவர்கள். சூழ்நிலைக்கு ஏற்றார் போல செயல்பட கூடியவர்கள். நீதி நெறியுடன் இருக்க வேண்டும் என விரும்புபவர்கள், மனதிற்கு பிடித்ததை செய்பவர்கள். மனதில் பொறாமை எண்ணம் மிகுந்திருக்கும், வாழ்வில் கொள்கையோ இலக்கோ இல்லாதவர்கள். போட்டி போடும் குணம் கொண்டவர்கள்.
கல்வி, கேள்விகளில் ஆர்வம் உள்ளவர்கள், குரு மீது மிகுந்த மரியாதை இருக்கும், மற்றவர்கள் இவர்களை மதிக்கும் பொறுப்புகளில் இருக்ககூடியவர்கள். வித்தியாசமான செயல்களை செய்வதில் ஆர்வம் இருக்கும். எதிர்பாலினத்தின் மீது இவர்களுக்கு ஈர்ப்பு இருக்கும்.
ஏகாதசி திதியில் என்னென்ன செய்யலாம்
ஏகாதசி திதி தெய்வம் மஹாருத்ரர் ஆவார். இன்னாளில் விரதம் மேற்கொள்ளுதல் மற்றும் மகாவிஷ்ணுவை தியானிப்பது சிறந்த பலனை தரும். ஏகாதசி நாளில் திருமணம் செய்யலாம். சுபநிகழ்ச்சிகள் செய்யலாம், குழந்தைக்கு மொட்டை போடலாம், ஆபரணங்கள் வாங்கலாம், மற்றும் ஆன்மீக காரியங்களில் ஈடுபடலாம்.
ஏகாதசி திதியில் என்ன செய்யகூடாது
ஏகாதசியில் விருந்து கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. மற்ற திதிகளில் விருந்து கொடுக்கலாம்.
ஏகாதசி திதிக்கான திதி சூன்ய ராசிகள்
ஏகாதசி திதிக்கான திதி சூன்ய ராசிகள் தனுசு மற்றும் மீனம் ஆகும்.
ஏகாதசி திதிக்கான தெய்வங்கள்
ஏகாதசி வளர்பிறை திதிக்கான தெய்வங்கள் : மஹா விஷ்ணு, மற்றும் பராசக்தி
ஏகாதசி தேய்பிறை திதிக்கான தெய்வங்கள் : மஹா விஷ்ணு, மஹா ருத்திரர்
திதி பலன்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.