காட்டு விலங்குகளை கனவில் கண்டால்
கனவு என்பது ஆழ்ந்த தூக்கத்தில் நாம் இருக்கும்போது நம்மை அறியாமல் வருவதாகும். குறிப்பிட்ட சில சமயங்களில், நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது வரும் கனவுகளுக்கு நிச்சயம் பலன் உண்டு. நாம் காணும் கனவில் வரும் விலங்குகள் ஆகியவற்றுக்கேற்ப பலன்களும் மாறும். என்ன வகையான விலங்குகளுக்கு என்ன மாதிரியான பலன்கள் என்பது பற்றிப் பார்ப்போம்.
ஓநாய் மற்றும் நரி கனவில் வந்தால்
1. ஓநாய் கனவில் வந்தால் நல்லதல்ல, இதனால் உறவினர் பகை ஏற்படும் என்று அர்த்தம்.
2. ஓநாய் ஊளையிடுவது போல கனவு கண்டால் துக்க செய்திகள் வரும் என்று பொருள்.
3. ஓநாய் உங்களை விரட்டுவது போல கனவு கண்டால் உறவினர்களால் பகை ஏற்படும் என்று அர்த்தம்.
4. நரி கனவில் கண்டால் எடுக்கின்ற காரியங்கள் வெற்றி பெறும் என்று அர்த்தம்.
5. நரி ஊளையிடுவது போல கனவு கண்டால் நெருங்கிய உறவினர் இறந்து விடுவார் என்று பொருள்.
6. நரி கனவில் அழுவது போல கனவு கண்டால் நல்லதல்ல, அதனால் குடும்பத்தில் பிரச்சனைகள் உண்டாகும் என்று அர்த்தம்.
கரடி கனவில் வந்தால்
1. கரடி கனவில் தேன் குடிப்பது போல கனவு கண்டால் நல்ல செய்திகள் வரும் என்று அர்த்தம்.
2. கரடி உங்களை துரத்துவது போல கனவு கண்டால் நல்ல சகுனம் அல்ல.
3. கரடியை நீங்கள் கொல்வது போல் கனவு கண்டால் கெட்ட செய்திகள் வரும் என்று அர்த்தம்.
கீரி கனவில் வந்தால்
1. கீரிப்பிள்ளை கனவில் வந்தால் எதிர்பாராத இடத்தில் இருந்து எதிர்பாராத உதவிகள் கிடைக்கும் என்று அர்த்தம்.
2. கீரி பாம்பை கொல்வது போல கனவு வந்தால் உறவினர்களிடையே இருந்து வந்த பகை விலகும் என்று அர்த்தம்.
குரங்கு கனவில் வந்தால்
1. குரங்கு கனவில் வந்தால் விரோதிகளால் துன்பம் ஏற்படும் என்பதைக் பொருள்.
2. குரங்குகள் கூட்டமாக கனவில் வந்தால், வீட்டிலோ, அல்லது நண்பர்களிடமோ தேவையற்ற வாக்குவாதங்கள் தோன்றும்.
3. குரங்கு உங்களை துரத்துவது போல் கனவு வந்தால் பகைவரால் துன்பங்கள் ஏற்படும் என்று அர்த்தம்.
சிங்கம் கனவில் வந்தால்
1. சிங்கம் உங்களை துரத்தி கொண்டு வருவது போல கனவு வந்தால் அரசாங்க வழியில் பிரச்சனைகள் ஏற்படும் என்று அர்த்தம்.
2. சிங்கம் உங்கள் மேலே பாய்ந்து கடிப்பது போல கனவு கண்டால் எதிரிகளால் பிரச்னை வரும் என்று அர்த்தம்.
3. சிங்கம் உங்களை பார்த்து ஓடுவது போல கனவு வந்தால், உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சனைகள் தீரும் என்று அர்த்தம்.
புலி கனவில் வந்தால்
1. புலி கனவில் வந்தால் உறவினர் சந்திப்பு நிகழும் என்று அர்த்தம்.
2. புலி உங்களை துரத்துவது போல கனவு கண்டால் உறவினர்கள் மூலம் பிரச்சனை வரும் என்று அர்த்தம்.
3. புலி மீது நீங்கள் ஏறி அமர்ந்து வருவது போல கனவு கண்டால் எதிரிகளை வெற்றி கொள்வீர்கள் என்று அர்த்தம்.
யானை கனவில் வந்தால்
1. யானை உங்கள் கனவில் வந்தால் மகிழ்ச்சி உண்டாகும் என்று அர்த்தம்.
2. யானை மீது நீங்கள் உட்கார்ந்து வருவது போல கனவு வந்தால் எடுத்த முயற்சிகள் யாவும் வெற்றி அடையும் என்று அர்த்தம்.
3. யானை உங்களுக்கு மாலை போடுவது போல கனவு வந்தால் பெரிய பதவிகள் உங்களை தேடி வரும், செல்வாக்கு உயரும் என்று அர்த்தம்.
4. யானை உங்களை துரத்தி வருவது போல கனவு கண்டால் பழைய விஷயங்களால் மனச்சங்கடங்களும், புதிய பிரச்சனைகள் உண்டாகும் என்று அர்த்தம். மேலும் தெய்வ குற்றம் ஏற்பட்டுள்ளது என்றும் அர்த்தம்.
5. யானை உங்களை ஆசிர்வாதம் செய்வது போல கனவு வந்தால் மிகவும் நல்லது.
6. யானை உங்கள் வீட்டு வாசலில் வந்து நிற்பது போல கனவு வந்தாலும், நாம் யானைக்கு உணவு அளிப்பது போல கனவு வந்தாலும் நன்மைகள் நடக்கும் என்று பொருள்.
குதிரை கனவில் வந்தால்
1. குதிரையை கனவில் வந்தால் நீங்கள் முயற்சி செய்து வந்த அரசு வேலை கிடைக்கும் என்று பொருள்.
2. குதிரை பந்தயத்தில் ஓடி வெற்றி பெறுவது போல கனவு வந்தால் எதிலும் வெற்றி கிடைக்கும் என்று அர்த்தம்.
3. குதிரை வேகமாக ஓடுவது போல கனவு வந்தால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று பொருள்.
4. குதிரை உங்களை உதைப்பது போல கனவு வந்தால் உடல் ஆரோக்கியம் கெடும் என்று அர்த்தம்.
5. குதிரை உங்களை விரட்டுவது போல கனவு வந்தால் புதிய பிரச்சினைகள் ஏற்படும் என்று அர்த்தம்.
6. குதிரை அல்லது கழுதை கனவில் வந்தால் வழக்குகள் சாதகமாக முடியும் என்று பொருள்.
7. குதிரையில் இருந்து விழுவதை போல் கனவு வந்தால் வறுமை ஏற்படும், செல்வாக்கு சரியும் என்று அர்த்தம்.
மற்ற காட்டு விலங்குகள் கனவில் வந்தால்
1. மான் கனவில் வந்தால் எதிரிகளால் ஏற்பட்ட தொல்லை விலகும் என்று அர்த்தம்.
2. மானை வேட்டையாடுவது போல கனவு கண்டால் பொருள் சேதம் ஏற்படும் என்று அர்த்தம்.
3. ஒட்டகம் கனவில் வந்தால் நாம் மேற்கொள்ளும் பயணத்தில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என்று பொருள்.
4. காண்டாமிருகம் கனவில் வந்தால் சோர்வு நீங்கி உடல் பலம் பெரும்.