பாம்பு புற்றுக்கு பால், முட்டை
கோவில்கள், வயல்வெளிகள் ஆகியவற்றில் பாம்பு புற்று இருப்பதை பார்த்திருப்போம். பாம்பு புற்றுக்கு பால் மற்றும் முட்டை வைத்திருப்பதையும் பார்த்திருப்போம். நம் முன்னோர்கள் பாம்பிற்குப் பால் மற்றும் முட்டை வைப்பார்கள். இது எதற்காக என பல பேருக்கு தெரியாது. ஒரு சிலர் பாம்பிற்கு முட்டையும் பாலும் மிகவும் பிடித்த உணவு அதனால் வைக்கிறார்கள் என கூறுவார்கள். ஆனால், உண்மை என்னவெனில் முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது இது விஞ்ஞான ரீதியாக நிரூபிக்கபட்டுள்ளது.
எதற்குப் பாம்பு புற்றுக்கு பால் ஊற்றுகிறார்கள்?
பண்டைய காலங்களில் மனிதர்களின் வசிப்பிடங்கள் பெரும்பாலும் நீர் நிலைகளை ஒட்டியும், காடுகளை ஒட்டியும் இருந்தன. மனிதர்கள் உணவு தேவைக்காகவும், இன்ன பிற தேவைகளுக்கும் காடுகளை சார்ந்தே இருந்தார்கள். அப்போது மனிதர்களுக்கு அச்சுறுத்தலாக வனவிலங்குகளும், விஷபூச்சிகளும், பாம்புகளும் இருந்தன. அடர்ந்த காடுகளுக்கு மத்தியில் மனித நடமாட்டம் என்பது மிகவும். அப்போது மனிதனை விடப் பாம்புகளின் எண்ணிக்கை மிக மிக அதிகம். ஏனெனில் பாம்புகளின் இனபெருக்க விகிதம் அதிகம்.
அப்போது ஒரு உயிரை கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை. அக்காலங்களில் மக்கள் இயற்கை, விலங்குகள் அனைத்தையும் மதித்தார்கள். ஆகவே அவர்கள் பாம்புகளை கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடிவு செய்தனர்.
பாம்புகள் இனப்பெருக்கம் செய்வது மிகவும் வித்தியாசமான ஒன்றாகும். பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை (பரோமோன்ஸ்) அனுப்பும். அதனை நுகரும் ஆண் பாம்பு பெண் பாம்பைத் இனப்பெருக்கத்துக்காக தேடி வரும். இவ்வாறு பாம்புகளின் இனபெருக்கம் நடக்கிறது.
பெண் பாம்பில் இருந்து வெளிவரும் வாசனையைக் கட்டுப்படுத்தும் வேலையைப் பால், முட்டையிலிருந்து வெளிவரும் ஒருவித வாசனை தடுக்கிறது. ஆகவே பாம்புகளால் இனப்பெருக்கம் செய்ய முடியாது. இப்படியாக பாம்புகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தினார்கள்.
இதையே நாம் இன்றும் பின்பற்றி வருகிறோம். இதன் உண்மையான காரணத்தை சொன்னால் நிச்சயம் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள். அதனால்தான் ஆன்மீக ரீதியாக இப்படியொரு வழக்கத்தை ஏற்படுத்தினார்கள்.