காலையில் சாப்பிடக்கூடாத உணவுகள்
காலையில் நாம் சாப்பிடக்கூடிய முதல் உணவு என்ன என்பதை தேர்வு செய்வதில் அலட்சியம் காட்டக் கூடாது. நாம் முதலில் சாப்பிடக் கூடிய உணவு நம் உடலுக்கும், உள்ளுறுப்புகளுக்கும் அந்த நாள் முழுவதும் ஆற்றலையும், புத்துணர்ச்சியையும் அளிக்கக் கூடியதாக இருக்க வேண்டும்.
இரவு உணவிற்கு பின் நீண்ட நேரம் கழித்து தான் நாம் காலை உணவை சாப்பிடுகிறோம். எனவே அந்த உணவு உடலுக்கு ஆரோக்கியமானதாக இருப்பது அவசியமாகும்.
காலை நேர உணவில் அதிக காரம், மசாலா இல்லாத உணவாக இருந்தால் மிகவும் நல்லது. அதிக காரமான உணவு இரைப்பையில் எரிச்சலை ஏற்படுத்தும். உணவு செரிமானம் ஆகாமல் செரிமான கோளாறு ஏற்படும். நட்ஸ் – பாதாம் போன்ற உலர் கொட்டைகளை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் சாப்பிடுவது உடலுக்கு நல்ல பலன் கொடுக்கும்.
காலையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்
- காலையில் எழுந்தவுடன் டீ , காபி அருந்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவற்றை அருந்துவதால் உடலுக்கு எந்த நன்மையையும் கிடைப்பதில்லை. இதற்கு பதிலாக இளம் சூடான நீரை அருந்தாலம். இது உடலுக்கு பல நன்மைகளை அள்ளித் தருகிறது.
- பொதுவாகவே புளிப்பான பழங்களில் அமிலத்தன்மை அதிகம் இருக்கும். அதை நாம் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் இரைப்பையில் அதிக அமிலத்தன்மையை ஏற்படுத்தி நெஞ்செரிச்சல், அல்சர் வர காரணமாக அமைந்துவிடும்.
- காலையில் இனிப்பான பண்டங்களை சாப்பிடுவதை அறவே தவிர்ப்பது நல்லது. இனிப்பு சாப்பிடுவதால் உங்கள் இரத்தத்தில் இன்சுலின் அளவு அதிகரித்து நீரழிவு நோய்க்கு வழி வகுக்கும்.
- தயிர் காலை வேளைகளில் சாப்பிடுவதை தவிர்க்கவும். தயிர் ஆரோக்கியமான உணவு தான், ஆனால் காலையில் சாப்பிடுவது உடல் எடையை அதிகரிக்கும். அளவாக சாப்பிடுவது நல்லதுதான். குளிர்பானங்கள் பருகுவதும் நல்லதல்ல. அதிலிருக்கும் அமிலங்கள் வயிற்றில் இருக்கும் அமிலங்களுடன் சேர்ந்து குமட்டல், வாயு தொல்லை போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். செரிமானத்தை தாமதப்படுத்திவிடும்.
- தக்காளியில் டேனிக் அமிலம் இருப்பதால் வயிற்றில் அமிலத்தை மேலும் அதிகரிக்கும் என்பதால் காலையில் வெறும் வயிற்றில் தக்காளி சாஸ், தக்காளி ஜூஸ் போன்றவற்றை சாப்பிடுவதை தவிர்க்கலாம்.
- காலையில் ஐஸ் காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும். அது உடலின் சுறுசுறுப்பை குறைத்து மந்தத்தன்மையை ஏற்படுத்தி விடும்.
- வெறும் வயிற்றில் வாழைப்பழத்தை உண்டால், வாழைப்பழத்தில் உள்ள மெக்னீசியம் ரத்தத்தில் அதிகமாக கலக்க நேரிடும். அது இதயத்திற்கு பாதிப்பை உண்டாக்கும்.
- பதப்படுத்தப்பட்ட இறைச்சி சாப்பிடுவது எப்போதும் நல்லதல்ல, காலையில் சாப்பிடுவதால் இதன் தாக்கம் மிக அதிகமாக இருக்கிறது. இவை புற்றுநோயை ஏற்படுத்த கூடியது.