27 நட்சத்திரங்கள் ஒரு பார்வை
ஜோதிடத்தில் மிக முக்கியமானது நட்சத்திரங்கள் ஆகும். கிரகங்களை விட நட்சத்திரங்களுக்கு வலிமை அதிகம். ஒருவருடைய பிறந்த ஜாதகம், அவர் பிறந்த நட்சத்திரத்தின் அடிப்படையில்தான் அமைகிறது.
ஒருவர் எந்த நட்சத்திரத்தில் பிறந்துள்ளாரோ அந்த நட்சத்திரம் எந்த ராசிக்கு உரியதோ அதுவே அவரது ஜென்ம ராசியாகும். ராசிகள் மொத்தம் 12 உள்ளன. நட்சத்திரங்கள் 27 உள்ளன. ஒவ்வொரு நட்சத்திரமும் 4 பாதங்களாகப் பிரிக்கப்பட்டு 1,2,3,4 பாதங்கள் என்று குறிக்கப்படுகின்றன.
ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் தனித்தனியேயான குணங்கள் உண்டு. ஒரு நட்சத்திரத்தின் ஒவ்வொரு பாதமும் வெவ்வேறு குணங்களைக் கொண்டவை. இந்த நட்சத்திரமானது, தன் குணங்களுடன் ராசியின் குணத்தையும் சேர்த்து உள்வாங்கிக் கொண்டு, அதற்கேற்ற பலன்களையும், செயல்களையும் ஒருவரிடம் வெளிப்படுத்துகின்றன.
நட்சத்திர பாதம் என்றால் என்ன?
ஒரு நட்சத்திரத்தின் ஒளிக்கற்றைகளை பிரிப்பதே பாதங்கள் ஆகும். ஒளிக்கற்றைகளை நான்கு பாகங்களாக பிரிப்பார்கள். அதனால்தான் ஒவ்வொரு நட்சத்திரதிற்க்கும் 4 பாதங்கள் வருகின்றன. அதை நாழிகை வைத்து பிரிகின்றனர். அதாவது ஒரு நட்சத்திரம் என்றால் 60 நாழிகை. அதை நான்காகப் பிரித்தால் 15 நிமிடங்கள். ஒரு நட்சத்திரத்தின் முதல் 15 நிமிடம் முதல் பாதம், அடுத்த 15 நிமிடம் இரண்டாம் பாதம். அதுபோல பிரித்துக் கொள்வார்கள்.
ஜோதிடத்தில் 27 நட்சத்திரங்கள் பின்வருமாறு:
1. அசுவினி
2. பரணி
3. கார்த்திகை
4. ரோகிணி
5. மிருகசீரிடம்
6. திருவாதிரை
7. புனர்பூசம்
8. பூசம்
9. ஆயில்யம்
10. மகம்
11. பூரம்
12. உத்திரம்
13. அஸ்தம்
14. சித்திரை
15. சுவாதி
16. விசாகம்
17. அனுஷம்
18. கேட்டை
19. மூலம்
20. பூராடம்
21. உத்திராடம்
22. திருவோணம்
23. அவிட்டம்
24. சதயம்
25. பூரட்டாதி
26. உத்திரட்டாதி
27. ரேவதி
இவையே 27 நட்சத்திரங்களாகும்
அசுவனி முதல் ரேவதி வரையான 27 நட்சத்திரங்களின் வடிவங்கள் புரவி, அடுப்பு, ஆரல், சக்கரம், மான்தலை, மூதிரை, கழை, காற்குளம், கட்செவி, கொடுநுகம், கணை, உத்தரம், கை, அறுவை, விளக்கு, முறம், பனை, துளங்கொளி, குருகு, உடைகுளம், கடைக்குளம், முக்கோல், காக்கை, செக்கு, நாழி, முரசு, தோணி போன்றவை ஆகும்.
நட்சத்திர இராசி மண்டலம்
ஒரு இராசி மண்டலம் என்பது 360 பாகைகளை (டிகிரி) கொண்டது. ராசி மண்டலத்தில் 30 டிகிரியை கொண்டது ஒரு ராசி ஆகும். மண்டலத்தில் உள்ள 27 நட்சத்திரங்கள் சமமாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ராசிக்கும் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளன.
இவ்வாறு பகிரப்பட்ட நட்சத்திரங்கள் பாதங்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பாதத்துக்கும் ஒரு குறிப்பிட்ட டிகிரிகள் 12 ராசிகளில் இடம் பெறுமாறு செய்யப்பட்டுள்ளது.
ஒரு ராசியின் பாகைகள் (டிகிரி) = 30 பாகைகள்
ஒரு நட்சத்திரம் = 13 பாகைகள் 20 கலைகள்
60 கலைகள் = 1 பாகை
இராசி மண்டலத்தில் இடம் பெற்றுள்ள இராசிகளும் அவற்றின் டிகிரிகள் மற்றும் இராசி ஒவ்வொன்றுக்கும் சரிசமமாக பிரித்து கொடுக்கப்பட்ட நட்சத்திர பாதங்கள் பின்வருமாறு.
1. மேஷ ராசி : 0 to 30 டிகிரி
மேஷ ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
அஸ்வினி : 1,2,3,4 பாதங்கள்
பரணி : 1,2,3,4 பாதங்கள்
கிருத்திகை : 1 பாதம்
2. ரிஷப ராசி : 30 to 60 டிகிரி
ரிஷப ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
கிருத்திகை : 2,3,4 பாதங்கள்
ரோகிணி : 1,2,3,4 பாதங்கள்
மிருகசீரிடம் : 1,2 பாதங்கள்
3. மிதுன ராசி : 60 to 90 டிகிரி
மிதுன ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
மிருகசீரிடம் : 3,4 பாதங்கள்
திருவாதிரை : 1,2,3,4 பாதங்கள்
புனர்பூசம் : 1,2,3 பாதங்கள்
4. கடக ராசி : 90 to 120 டிகிரி
கடக ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
புனர்பூசம் : 4 பாதம்
பூசம் : 1,2,3,4 பாதங்கள்
ஆயில்யம் : 1,2,3,4 பாதங்கள்
5. சிம்ம ராசி : 120 to 150 டிகிரி
சிம்ம ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
மகம் : 1,2,3,4 பாதங்கள்
பூரம் : 1,2,3,4 பாதங்கள்
உத்திரம் : 1 பாதம்
6. கன்னி ராசி : 150 to 180 டிகிரி
கன்னி ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
உத்திரம் : 2,3,4 பாதங்கள்
அஸ்தம் : 1,2,3,4 பாதங்கள்
சித்திரை : 1,2 பாதங்கள்
7. துலாம் ராசி : 180 to 210 டிகிரி
துலாம் ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
சித்திரை : 3,4 பாதங்கள்
சுவாதி : 1,2,3,4 பாதங்கள்
விசாகம் : 1,2,3 பாதங்கள்
8. விருச்சக ராசி : 210 to 240 டிகிரி
விருச்சிக ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
விசாகம் : 4 பாதம்
அனுஷம் : 1,2,3,4 பாதங்கள்
கேட்டை : 1,2,3,4 பாதங்கள்
9. தனுசு ராசி : 240 to 270 டிகிரி
தனுசு ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
மூலம் : 1,2,3,4 பாதங்கள்
பூராடம் : 1,2,3,4 பாதங்கள்
உத்திராடம் : 1 பாதம்
10. மகர ராசி : 270 to 300 டிகிரி
மகர ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
உத்திராடம் : 2,3,4 பாதங்கள்
திருவோணம் : 1,2,3,4 பாதங்கள்
அவிட்டம் : 1,2 பாதங்கள்
11. கும்ப ராசி : 300 to 330 டிகிரி
கும்ப ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
அவிட்டம் : 3,4 பாதங்கள்
சதயம் : 1,2,3,4 பாதங்கள்
பூரட்டாதி : 1,2,3 பாதங்கள்
12. மீன ராசி : 330 to 360 டிகிரி
மீன ராசியில் அடங்கியுள்ள நட்சத்திர பாதங்கள்
பூரட்டாதி : 4 பாதம்
உத்திரட்டாதி : 1,2,3,4 பாதங்கள்
ரேவதி : 1,2,3,4 பாதங்கள்