உடல் எடையை குறைக்கும் ஒரு அருமையான டீ
உடல் எடை அதிகரிப்பு இன்று அனைவரும் எதிர்கொள்ளும் ஒரு பிரச்சனையாக உருவாகியுள்ளது. உடல் எடை அதிகரிப்பால் உடல் சோர்வு, மந்த நிலை, இரத்த அழுத்த்தம், சர்க்கரை நோய் போன்ற பல நோய்கள் உருவாக உடல் எடை அதிகரிப்பும் ஒரு காரணமாக உள்ளது.
அதிகப்படியான உடல் எடையை ஒரு டீ குடிப்பதன் மூலம் நாம் கட்டுக்குள் கொண்டு வரலாம். நாம் தினசரி குறைந்தபட்சம் இரண்டு முறையாவது பால், டீ, காபி போன்றவற்றை குடிக்கிறோம். மற்ற டீ, காபி போன்றவற்றை தவிர்த்து இந்த டீயினை நாம் அன்றாடம் எடுத்துக் கொண்டால் உடல் எடையை சம அளவில் வைத்துக் கொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் உடலையும் ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
ஓமம் மற்றும் சீரக தேநீர் குடிப்பதின் பயன்கள்
- சமையலில் சுவைக்காகவும், மனம் கிடைப்பதற்காகவும் சேர்க்கப்படும் மசாலா பொருட்கள் தான் சீரகம் மற்றும் ஓமம். இவை இரண்டும் நமது செரிமானத்திற்கு நன்னமை அளிக்கக் கூடியவை.
- சீரகம் மற்றும் ஓமம் கொண்டு தயாரிக்கப்படும் டீயில் இருக்கும் தைமோல் என்னும் ரசாயனம் இரைப்பையின் சுரப்பிற்கு உதவுகிறது.
- உடலில் நச்சுக்கள் உருவாவதை தடுக்கிறது. கெட்ட கொழுப்பு சேராமல் தடுக்கிறது. மேலும் உடல் எடையை குறைக்கவும் இவை உதவுகிறது.
- அஜீரணம் மற்றும் வயிற்றுவலிக்கு சரியான தீர்வாக சீரகம் உள்ளது. உடலில் நோய் எதிர்பாற்றலை அதிகப்படுத்துவதுடன் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைத்து சர்க்கரை நோயை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
- சீரகத்தில் உள்ள இரும்பு சத்து ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து உடலில் இரத்தசோகை ஏற்படாமல் தடுக்கிறது.
- சுவாசபாதையில் உள்ள நோய் கிருமிகளை அழித்து சளி மற்றும் இருமலில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்க காரணமாக உள்ளது.
- கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் செரிமானத்தை மேம்படுத்துவதுடன் பால் சுரப்பையும் அதிகரிக்கிறது.
- பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் சிறந்த வலி நிவாரணியாகவும் சீரகம் விளங்குகிறது.
ஓமம் மற்றும் சீராக தேநீர் தயாரிக்கும் முறை
தேவையான பொருட்கள்
சீரகம் – 1 ஸ்பூன்
ஓமம் – ½ ஸ்பூன்
தண்ணீர் – 1 டம்ளர்
செய்முறை
- சீரகம் , ஓமம் இரண்டையும் தேவையான அளவு தண்ணீரில் முதல் நாள் இரவே போட்டு ஊற வைத்துக் கொள்ளவும்.
- மறுநாள் காலையில் அந்த சீரகம் , ஓமம் சேர்த்து ஊற வைத்த தண்ணீரை சிறிது கொதிக்க வைக்கவும்.
- பின்னர் வடிகட்டி காலையில் வெறும் வயிற்றில் டீ, காபிக்கு பதிலாக குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். உடல் எடை குறைய தொடங்கும்.