சேமியா கேசரி
தேவையான பொருட்கள்
- சேமியா – 1 கப்
- சர்க்கரை – 1/2 கப்
- நெய் – தேவையான அளவு
- முந்திரி – தேவையான அளவு
- திராட்சை – தேவையான அளவு
- ஏலக்காய் – சிறிதளவு
- கேசரி பவுடர் – தேவையான அளவு
- கண்டென்ஸ் மில்க் – 3 ஸ்பூன்
- தண்ணீர் – தேவையான அளவு
செய்முறை
- ஒரு அடி கனமான வாணலியை எடுத்துக் கொண்டு அதில் கொஞ்சம் நெய் சேர்த்துக் கொள்ளவும்.
- நெய் சூடானதும் முந்திரி, திராட்சை சேர்த்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- அதே வாணலியில் இன்னும் கொஞ்சம் நெய் சேர்த்து அதில் சேமியாவை சேர்த்து மிதமான தீயில் வைத்து நிறம் மாறாமல் வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- சேமிய வறுத்த பின் சேமிய மூழ்கும் அளவிற்கு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.
- தண்ணீர் சேர்த்த பின் கேசரி பவுடர் சேர்த்து கலந்து விடவும்.
- சேமியா வெந்து தண்ணீர் வற்றும் வரை மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விடவும்.
- தண்ணீர் ஓரளவிற்கு சுண்டியவுடன் சர்க்கரை சர்க்கரையை சேர்த்து கலந்து விடவும்.
- சர்க்கரை சேமியாவுடன் சேர்ந்து நன்கு கலக்கும் வரை கிளறி விடவும்.
- சர்க்கரை கரைந்தவுடன் சிறிதளவு நெய் சேர்த்து நன்றாக கலந்து விடவும்.
- இப்போது 3 ஸ்பூன் அளவிற்கு கண்டென்ஸ் மில்க் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- பின்னர் ஏலக்காய், வறுத்து வைத்துள்ள முந்திரி, திராட்சை சேர்த்து கலந்து விடவும்.
- இறக்கும் முன் சிறிதளவு நெய் சேர்த்து கலந்து இறக்கினால் அருமையான சேமியா கேசரி ரெடி.