Home ஆரோக்கியம் உடல்நலம் உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்க உதவும் சில உணவுகள்

உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்க உதவும் சில உணவுகள்

உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைக்க உதவும் சில உணவுகள்

உடலை ஆரோக்கியமாகவும் உடல் எடையை சரியான முறையில் வைத்திருக்கவும் உணவு முறை ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. நாம் எந்த வகையான உணவுகளை தேர்வு செய்து சாப்பிடுகிறோம், எந்த நேரத்தில் சாப்பிடுகிறோம், எந்த அளவில் சாப்பிடுகிறோம் என்பதை பொறுத்தே நம் ஆரோக்கியம் அமைகிறது. எனவே நாம் உண்ணக்கூடிய சத்துள்ளதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருப்பது மிகவும் அவசியமாகும்.

how to reduce belly fat

உடல் பருமன், தொப்பையை குறைக்க நாம் கொழுப்பு சத்து மிகுந்த உணவுகளை முதலில் தவிர்க்க வேண்டும். தொப்பையை குறைக்க உணவு கட்டுப்பாடோடு உடற்பயிற்சியும் மிகவும் அவசியம் ஆகும்.

உடல் பருமனை ஒரு பிரச்சனையை நினைக்க ஆரம்பித்துவிட்டால் அதுவே ஒரு நோயாக மாறிவிடும். உடல் பருமனை தொடர்ந்து இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால், மாரடைப்பு போன்ற பல பிரச்சனைகள் தானாக வந்துவிடும். உடல் எடை, தொப்பை, தேவையற்ற கொழுப்பை தவிர்க்க நம் உணவு முறைகளில் சில மாற்றங்களை நம் கடைபிடிக்க வேண்டும். குறிப்பாக தொப்பையை குறைக்க சில உணவுகளை நாம் சாப்பிடுவதின் மூலம் தொப்பையை வெகுவாக குறைக்கலாம்.

தொப்பையை குறைக்க உதவும் சில உணவுகள்

  1. காளிப்ளவர் மற்றும் முட்டைகோஸ் போன்றவற்றில் அதிக அளவு கால்சியம் மற்றும் வைட்டமின் சி உள்ளது. இவை கொழுப்புகளை குறைக்க உதவும். எனவே தொப்பையை எளிதாக குறைக்கலாம்.
  2. பூண்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். வயிற்று பகுதியில் உள்ள கொழுப்பை குறைத்து சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருக்க உதவுகிறது.
  3. தினமும் ஆப்பிள் சாப்பிட்டு வந்தால் கொழுப்பு கரைந்து படிப்படியாக தொப்பையை குறைக்கலாம்.
  4. பட்டை என்பது மசாலாப் பொருட்களில் ஒன்றாகும். பட்டைப் பொடியை நாம் உணவில் சேர்த்துக் கொண்டால் நமது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளைக் குறைத்து தொப்பையை குறைக்கலாம்.
  5. முட்டை நமது உடலில் உள்ள அதிகப்படியான கலோரிகளைக் கரைக்கும். எனவே, முட்டையை நமது உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது. தினமும் காலையில் ஒரு முட்டை சாப்பிடுவது நல்லது. முட்டை தொப்பையைக் குறைக்க பெரிதும் பயன்படுகிறது. முட்டையில் உள்ள மஞ்சள் கருவை தவிர்த்து வெள்ளைக் கருவை சாப்பிடுவது சிறந்தது.
  6. நீர்ச்சத்துள்ள பழங்களான பேரிக்காய் மற்றும் தர்பூசணியை பசி ஏற்படும் போது சாப்பிட்டால், உடலில் கொழுப்புக்கள் சேராமல் இருப்பதோடு, தொப்பையும் குறையும்.
  7. நார்ச்சத்து மிகுந்த பழங்களை எடுத்துக் கொள்வதின் மூலம் தொப்பையை எளிதில் குறைக்கலாம். உதாரணமாக ஸ்ட்ரா பெர்ரி மற்றும் ப்ளாக் பெர்ரி போன்ற பெர்ரி பழங்களில் நார்ச்சத்துக்கள் அதிக அளவில் இருப்பதால் தொப்பையை குறைக்க பெரிதும் உதவுகிறது.
  8. உடல் பருமன் மற்றும் தொப்பையை குறைப்பதில் தயிர் ஒரு சிறந்த உணவாக விளங்குகிறது. தயிரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் தேவையற்ற கொழுப்பு குறைந்து விடும்.
  9. நார்ச்சத்து மிகுந்த காய்கறிகளான பீன்ஸ். அவரைக்காய் போன்றவற்றை அதிக அளவில் எடுத்துக் கொள்வது சிறந்தது.
  10. இஞ்சியானது அதிகப்படியான கலோரிகளை எரித்து, அதிகப்படியான கொழுப்புக்களை கரைய செய்யும்.
  11. கொண்டக்கடலையில் கொழுப்பு குறைவு, நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிக அளவில் நிறைந்துள்ளது.
  12. வெள்ளரிக்காயில் நீர்ச்சத்து அதிகம், கலோரிகள் குறைவு, நார்ச்சத்துக்கள் அதிகம்  வயிற்றில் சேரும் கொழுப்புக்களை கரைக்க மிகவும் சிறப்பான உணவுப் பொருள்.
  13. காலையில் காபி , டீ குடிக்கும் பழக்கம் உள்ளவர்கள் அதை தவிர்த்து  வெறும் வயிற்றில் பால் சேர்க்காத கிரீன் டீ எடுத்துக் கொள்வது சிறந்தது. கிரீன் டீயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் வயிற்று கொழுப்பை குறைக்க நிச்சயம் உதவும்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version