திருமண தடை நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்
இரு வீட்டாரின் சம்மதத்துடன் இரு மணங்கள் இணையும் வைபவமே திருமணமாகும். அந்த திருமணம் சரியான காலத்திலும் சரியான வயதிலும் நடைபெறுவது முக்கியமானதாகும். சிலரது ஜாதகத்தில் இருக்கும் தோஷம் காரணமாக திருமண யோகம் வர கால தாமதம் ஏற்படலாம்.
திருமண தோஷம் இருப்பவர்களுக்கு என்ன செய்தாலும் திருமணம் தடை பட்டுக்கொண்டே போகும். இவர்கள் என்ன பரிகாரம் செய்தால் தோஷம் நிவர்த்தியாகி வாழ்க்கையும் சிறப்பானதாக அமையும் என்று பார்க்கலாம்.
ஒரு சிலருக்கு திருமண தோஷம் இருந்தாலும், மனதில் திருமண ஆசை இருக்கும். ஆனால் பெண் அமையாமல் அல்லது கிடைக்காமல் அவதிப்பட நேரிடும். திருமண வயது கடந்த பிறகும் கூட திருமணம் நடைபெறாமல் இருப்பதும் ஒரு வகையில் தோஷம்தான்.
இதுபோன்ற நிலையில் இருப்பவர்கள், ஏற்கனவே மணம் முடித்துப் பிரிந்தவர்கள், விதவைகளைத் திருமணம் செய்து கொள்ளலாம். அப்படிச் செய்யும் போது தோஷம் நிவர்த்தியாகி வாழ்க்கையும் சிறப்பானதாக அமையும் என சில ஜோதிட நூல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
திருமண தோஷம் நீங்க செய்ய வேண்டிய பரிகாரம்
திருமண தோஷம் உள்ள ஆணோ அல்லது பெண்ணோ உங்கள் ஊரிலுள்ள துர்க்கை அம்மன் கோவில் அல்லது சந்நிதியில், வெள்ளிக்கிழமைகளில் ராகு காலத்தில் நெய் விளக்கேற்றி, வழிபட்டு வர வேண்டும். இது போன்று 27 வெள்ளிக்கிழமைகள் செய்து வர திருமண தோஷம் நீங்கி விரைவிலேயே நல்ல வரன் மற்றும் வது அமையும்.
கும்பகோணத்திற்கு அருகே இருக்கும் “திருமணஞ்சேரி” என்ற கோவிலுக்கு சென்று அக்கோவிலின் மூலவரான சுந்தரேஸ்வரர் மற்றும் அம்பாளை வணங்கி, அக்கோயிலை 9 முறை வலம் வந்து வேண்டுதலை முடிக்க, 90 நாட்களுக்குள் திருமணம் தோஷம் கொண்ட ஆண்களுக்கும், பெண்களும் அத்தோஷங்கள் நீங்கி சிறப்பான திருமணம் அமையும்.
திருவிடந்தையில் உள்ள “ நித்திய கல்யாண பெருமாள் “ கோவிலுக்கு சென்று மனமுருகி வேண்டி பெருமாளுக்கு மாலை சாற்றி வழிபட்டால் விரைவில் திருமண தடை நீங்கி திருமண வைபவம் நடைபெறும். வேண்டுதல் நிறைவேறி திருமணம் நடந்த பின் தம்பதிகளாக இருவரும் கோவிலுக்கு சென்று மாலை சாற்றி வழிபட வேண்டும்.
திருமண தோஷம் இருப்பவர்கள் செவ்வாய் கிழமை தோரும் ராகு கால நேரத்தில் துர்கை அம்மனுக்கு எலுமிச்சை விளக்கேற்றி அம்மனை வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும்.
திருமண வயதை கடந்து திருமணம் ஆகாமல் இருப்பவர்கள் சீதா ராமர் கல்யாண வைபவத்தை காண வேண்டும், இவ்வாறு செய்வதால் சீக்கிரம் திருமணம் நிச்சயமாகும்.
மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.