திணை இட்லி
திணை அரிசியில் கால்சியம், புரோட்டீன், நார்ச்சத்துக்கள், இரும்புசத்து, ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ், மெக்னீசியம் போன்ற ஏரளமான சத்துக்கள் நிறைந்துள்ளது. சர்க்கரை நோயாளிகள் சாப்பிட மிகவும் சிறந்த உணவு திணையாகும். திணை இட்லி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.
தேவையான பொருள்கள்
- திணை அரிசி – 1 கப்
- உளுத்தம் பருப்பு – ½ கப்
- இட்லி அரிசி – 1 கப்
- வெந்தயம் – ¼ ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
- இஞ்சி – சிறிதளவு
- கடுகு – சிறிதளவு
- கருவேப்பில்லை – தேவையான அளவு
- துருவிய கேரட் – தேவையான அளவு
- கொத்தமல்லி – சிறிதளவு
- கடலைப் பருப்பு – சிறிதளவு
செய்முறை
- திணை அரிசி, உளுத்தம் பருப்பு,இட்லி அரிசி, வெந்தயம் இவை அனைத்தையும் நன்றாக சுத்தம் செய்து கழுவி தனித்தனியாக 3 மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
- 3 மணி நேரம் ஊறிய ஒன்றாக சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ளவும்.
- இப்போது அரைத்த மாவில் தேவையான அளவு உப்பு சேர்த்து இரவு முழுவதும் புளிக்க வைக்கவும்.
- புளித்த மாவினை நன்றாக கலந்து கொள்ளவும்.
- பின்னர் ஒரு வாணலியில் சிறிதளவு கடுகு, கடலை பருப்பு , இஞ்சி, கருவேப்பில்லை, கொத்தமல்லி, துருவிய கேரட் ஆகிய இவை அனைத்தையும் தாளித்து கலந்து வைத்துள்ள மாவில் சேர்த்துக் கொள்ளவும்.
- மாவில் சேர்த்து நன்றாக கலந்த பின் மாவினை இட்லி தட்டில் சேர்த்து வேக வைத்து எடுத்தால் சுவையான சத்தான திணை இட்லி ரெடி.