சாத்துக்குடி பழம்
சாத்துக்குடி பழம் சிட்ரஸ் வகை பழங்களில் ஒன்றாகும். தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவில், சாத்துக்குடி தோன்றியிருக்கலாம் என கருதப்படுகிறது. மேலும் மத்திய தரைக்கடல் பகுதியின் பிராந்தியங்களில் சாத்துக்குடி வளர்க்கப்பட்டது. இது மெக்ஸிகோ நாட்டின் எலும்பிச்சையும், இனிப்பு சிட்ரானின் கலவையாகும். சாத்துக்குடி எகிப்து, சிரியா, பாலஸ்தீனம் மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அதிகம் வளர்க்கபடுகிறது. இது ஆங்கிலத்தில் Mosambi மற்றும் Sweet Lime என அழைக்கபடுகிறது.
சாத்துக்குடியில் உள்ள சத்துக்கள்
சாத்துகுடியில் கலோரி – 43 %, வைட்டமின் ‘சி’- 45 மி.கி, புரதச்சத்து – 0.47 கி, நார்ச்சத்து – 0 கி, இரும்புச்சத்து – 0 மி.கி, கால்சியம் – 40 மி.கி,
பொட்டாசியம் – 490 மி.கி போன்றவை அடங்கியுள்ளன.
சத்துக்குடியின் மருத்துவ பயன்கள்
உடலுக்கு புத்துணர்ச்சி அளிக்கும்
நோயால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் சாத்துக்குடியை சாற்றைப் பருகி வந்தால் உடலுக்கு புத்துணர்ச்சி கிடைக்கும். உடல் வலு பெறும். சாத்துக்குடியானது இரத்தத்தில் எளிதில் கலப்பதால் உடல் வெகு விரைவில் தேறும்.
மலச்சிக்கல் தீரும்
மலச்சிக்கல்தான் அனைத்து நோய்களுக்கும் மூலகாரணம். மலச்சிக்கல் வராமல் தடுப்பதற்கு பழங்களே சிறந்த மருந்தாகும். மலச்சிக்கல் உள்ளவர்கள் தினமும் ஒரு சாத்துக்குடி பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
சாத்துக்குடி காய்ச்சல், அம்மை, பேதி, சளி, இருமல் என எல்லா நோய்க்கும் நல்ல பலத்தை கொடுக்கும். சாத்துக்குடியில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். எலும்புகளுக்கு பலம் தருவதுடன் இரத்தத்தை உறைய வைக்கும்.
குழந்தைகளின் வளர்ச்சியை அதிகரிக்கும்
சிறு குழந்தைகளுக்கு கால்சியம் சத்து அதிகம் தேவை. குழந்தைகளின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானது கல்சியம் சத்து ஆகும். சாத்துக்குடி பழத்தில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் குழந்தைகளுக்கு சாத்துக்குடியை பழமாகவோ, சாறாகவோ கொடுப்பது மிகவும் நல்லது.
ஜீரண சக்தியை அதிகரிக்கும்
சாத்துக்குடி பசியின்மை, வாந்தி, குமட்டலை விரட்டும். ஒரு டம்ளர் நீரில் இஞ்சி துண்டுகளை தட்டி போடவும். அதனுடன் சாத்துக்குடி சாற்றை சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். அதன்பின் அதை வடிகட்டி எடுத்து தேன் சேர்த்து குடித்து வர வேண்டும். இது வயிற்று புண்களை அகற்றும். செரிமானத்தை சீராக்கும். பசியை தூண்டி, வாந்தியை தடுக்கும். ருசியின்மையை போக்கும். வயிற்று வலியை குணமாகும்.
உடலுக்கு பலத்தை கொடுக்கும்
சாத்துக்குடியில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளதால் சிறுநீரக கோளாறுக்கு மருந்தாகிறது. குறைவான எரிசக்தி கொண்டதால், உடல் எடை கூடுவதை தடுக்கும். உடலுக்கு பலத்தை கொடுக்கும். ஈறுகளில் ஏற்படும் வீக்கம், பற்கள் ஆடுவது, வாய்ப்புண் போன்றவற்றிருக்கு சிறந்த மருந்து சாத்துக்குடியாகும்.
நினைவாற்றலை அதிகரிக்கும்
ஒவ்வொருவருடைய வளர்ச்சிக்கும் அவர்களுடைய நினைவாற்றலே முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே நினைவாற்றலை அதிகரிக்க சாத்துக்குடி பழம் சாப்பிடுவது நல்லது.
எலும்புகள் வலுவடையும்
ஒரு சிலருக்கு இலேசான அடிபட்டாலும் எலும்புகள் உடைந்துவிடும். மேலும் எலும்புகள் வலுவில்லாமல் காணப்படும். இதற்குக் காரணம் கால்சிய சத்து குறைவாக இருப்பதே காரணம் ஆகும். இவர்கள் சாத்துக்குடி அதிகளவு சாப்பிட்டு வந்தால் எலும்புகள் வலுவாகும். சாத்துக்குடி சாறு சாப்பிட்டு வர மூட்டுவாதம், எலும்பு பலவீனம் நீங்கும்.
பற்களை பாதுகாக்கும்
சாத்துக்குடி சாறு பயன்படுத்தி பல் வலி, ஈறுகளில் ஏற்படும் இரத்த கசிவுகளை நீக்கும் மருந்துகள் தயாரிக்கலாம். சாத்துக்குடி சாற்றில் நீர்விட்டு, அதனுடன் உப்பு சேர்த்து கலந்து அதை ஈறுகளில் வைக்கும்போது இரத்தகசிவு குணமாகும். சாத்துக்குடி சாற்றில் நீர்விட்டு வாய் கொப்பளித்தால், வாயில் துர்நாற்றம் ஏற்படுத்தும் கிருமிகள் வெளியேறும், ஈறு வீக்கம் தணியும் மற்றும் பற்களுக்கு பலத்தை கொடுக்கும்.
இரத்த விருத்தியை அதிகரிக்கும்
ஒரு சிலர் எப்போது பார்த்தாலும் சோர்வாகவே இருப்பார்கள். சிறிது நேரம் வேலை செய்தாலும், அதிக அசதி இருப்பதை போல உணர்வர். இவர்களுக்கு கை, கால் மூட்டுக்களில் வலி உண்டாகும். சில சமயங்களில் தலைச் சுற்றலுடன் இலேசான மயக்கம் ஏற்படும். இப்படியானவர்களுக்கு தினமும் இரண்டு சாத்துக்குடி சாறு கொடுத்து வந்தால் இரத்த சுரப்பு அதிகரிக்கும். உடல் அசதி நீங்கும்.
இரத்தச்சோகையை குணமாக்கும்
உடலில் உள்ள இரத்தத்தில் சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைவதால் இரத்தச்சோகை ஏற்பட வாய்ப்புள்ளது. இரத்தச் சோகையை விரட்டியடிக்க சாத்துக்குடி நல்ல மருந்தாகும்.
பசியை தூண்டும்
ஒரு சிலருக்கு வயிறு எப்போதும் நிரம்பியது போல இருக்கும், அவர்களுக்கு பசி எடுக்காது. சாப்பிட நினைத்தாலும் வயிறு ஏற்றுக்கொள்ளாது. அப்படியானவர்கள் சாத்துக்குடி பழத்தை சாறு எடுத்து தினமும் சாப்பிட்டு வந்தால் ஜீரண சக்தியைத் தூண்டி நன்கு பசியை ஏற்படுத்தும்.
பொடுகை போக்கும்
சாத்துக்குடி சாறுடன் தண்ணீர் சேர்த்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலைமுடிக்கு நல்ல ஊட்டம் கிடைக்கும். மேலும் தலையில் ஏற்படும் பொடுகை போக்கும். தலைமுடி உடையாமல் காக்கும்.
கரும்புள்ளிகளை போக்கும்
சாத்துக்குடி பழத்தை இரண்டாக வெட்டி கரும்புள்ளிகள் ஏற்பட்ட இடத்தில் தடவி வந்தால் முகத்திலுள்ள கரும்புள்ளிகள் குணமாகும். கண்களுக்கு கீழ் ஏற்பட்ட கருவளையங்கள் மறையும். கழுத்து, மற்றும் கைகளில் ஏற்பட்ட கருமை மாறும்.