சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்
சுவாதி நட்சத்திரத்தின் இராசி : துலாம்
சுவாதி நட்சத்திரத்தின் அதிபதி : ராகு
சுவாதி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சுக்கிரன்
சுவாதி நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : வாயு பகவான்
சுவாதி நட்சத்திரத்தின் பரிகார தெய்வம் :- மஹாலக்ஷ்மி, துர்க்கை
சுவாதி நட்சத்திரத்தின் நட்சத்திர கணம் -: தேவ கணம்
சுவாதி நட்சத்திரத்தின் விருட்சம் :- மருதம் (பாலில்லா மரம்)
சுவாதி நட்சத்திரத்தின் மிருகம் :- ஆண் எருமை
சுவாதி நட்சத்திரத்தின் பட்சி :- தேனீ
சுவாதி நட்சத்திரத்தின் கோத்திரம் -: அகத்தியர்
சுவாதி நட்சத்திரத்தின் வடிவம்
சுவாதி நட்சத்திரம் நட்சத்திரங்களின் வரிசையில் 15வது இடத்தை பிடிக்கிறது. இதற்கு ‘விளக்கு’ என்ற பெயரும் உண்டு. சுவாதி நட்சத்திரம் வான் மண்டலத்தில் தேன்கூடு, தீபம் போன்ற வடிவங்களில் காணப்படும்.
சுவாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்
சுவாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் இறைநம்பிக்கை மிகுந்தவர்கள். சிறந்த அறிவு, ஞாபக சக்தி கொண்டவர்கள். கலைகளில் ஆர்வம் உடையவர்கள். இவர்கள் அழகிய தோற்றத்துடனும், மகிழ்ச்சியான சுபாவத்துடனும், இருப்பார்கள். தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர்கள். சுதந்திர மனப்பான்மையும் பிடிவாதத் தன்மையும், நிறைந்தவர்கள். பிறர் சொத்துக்களுக்கு ஆசைப் படாதவர்கள். இரக்கக்குணம் கொண்டவர்கள். அனாவசிய செலவுகளை தவிர்த்து சிக்கனத்தை கடைப்பிடிபவர்கள். எல்லோரிடத்திலும் நட்பாக பழகக்கூடியவர்கள்.
இவர்கள் தங்கள் உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் வித்தை தெரிந்தவர்கள். வியாபாரத்தில் நுணுக்கங்களை கையாள்வார்கள். வலிமையான உடல் அமைப்பு உடையவர்கள். நேர்மையாகப் பேசுபவர்கள். முன்யோசனையோடு செயல்படுபவர்கள். நம்பிக்கைக்கு உரியவர்கள். பழகுவதற்கும் இனிமையானவர்கள். தர்ம காரியங்களை விரும்பி செய்வார்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக அமையும். குடும்ப வாழ்க்கையில் கணவன் மனைவி இருவரும் ஒத்த மனதுடையவர்களாக இருப்பார்கள். ஒருவருக்கொருவர் அனுசரித்துப் போகும் குணமிக்கவர்கள். தங்களுக்கு எதிரில் இருப்பவர் படித்தவரா, படிக்காதவரா என்று பார்க்காமல் பழகும் குணம் பெற்றவர்கள்.
அமைதியை விரும்புகிறவர்கள். தாங்கள் ஈடுபடும் காரியத்தில் தப்பு சொல்வதையோ, குற்றம் காண்பதையோ விரும்பாதவர்கள். பொதுவாக விமர்சனத்திற்கு விரோதிகள். நண்பர்கள் மற்றும் உறவினர்களுடனும் நல்லுறவுகளைப் பராமரிப்பார்கள். பெற்றோர்களை கடைசி வரை பேணி காப்பவர்கள். பிறர் தனக்கு செய்த உதவியை மறக்காதவர்கள். இவர்களுக்கு முன்கோபம் அதிகமிருக்கும். சுற்றத்தார், மற்றும் நண்பர்களுக்கு அதிகம் உதவி செய்வார்கள். காந்தம் போல் அனைவரையும் தன் வசம் இழுத்து கொள்ள கூடிய ஆற்றல் கொண்டவர்கள். தான் சொல்வது தான் சரி என எண்ணம் கொண்டவர்கள்.
இவர்கள் மனம் அலைபாய்ந்து கொண்டே இருக்கும். பயந்த சுபாவம் உடையவர்கள். எப்பொழுதும் சுறுசுறுப்பாக காணப்படுவார்கள். பிறரை வசீகரிக்கும் தோற்றம் கொண்டவர்கள். சுதந்திரமாக இருக்க விரும்புவார்கள். இவர்களுக்கு விளையாட்டு குணம் அதிகமிருக்கும். தன் சுய மரியாதையை எந்த சூழ்நிலையிலும் இழக்க விரும்ப மாட்டார்கள். யார் என்ன சொன்னாலும் தனக்கு சரியெனப் பட்டதை மட்டுமே செய்வார்கள். அனைவரிடமும் அன்பாக பழகுவார்கள். இவர்களின் தோற்றத்தை கொண்டு வயதை எடை போட முடியாது.
சுவாதி நட்சத்திரம் முதல் பாதம் :
இவர்களிடம் சுவாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். எதிலும் திட்டமிட்டு செயல்பட்டு வெற்றியடைவார்கள். அறிவாளிகளாக இருப்பார்கள். தைரியசாலிகளாக இருப்பார்கள். இவர்கள பார்ப்பதற்கு சாது போல காட்சியளிப்பார்கள். நியாய தர்மத்தின்படி நடப்பார்கள். பேச்சுத்திறமை உடையவர்கள். பல மொழிகளை அறிந்தவர்கள். கற்பனைத் திறமை கொண்டவர்கள். இவர்கள் தைரியசாலிகள். பேச்சுதிறமை உள்ளவர்கள்.
சுவாதி நட்சத்திரம் இரண்டாம் பாதம் :
இவர்களிடம் சுவாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். சுயநலம் உடையவர்கள். சொத்து சேர்க்க விரும்புவர்கள். வாழ்க்கையில் எதையாதவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். நல்ல தோழர்களாக திகழ்வார்கள். மனோதைரியம் உடையவர்கள். வாய் ஜாலம் உடையவர்கள். இவர்கள் நல்ல மனதிடம் உள்ளவர்கள். காரியம் சாதித்து கொள்வதில் வல்லவர்கள். இவர்கள் கடும் உழைப்பாளிகள்.
சுவாதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் :
இவர்களிடம் சுவாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். மேலும் கர்வம் மிக்கவர்கள். அரக்க குணம் உடையவர்கள். பழிவாங்கும் எண்ணம் உடையவர்கள். அவசர முடிவினால் பிரச்சனைகளில் தானே மாட்டிக்கொள்வார்கள். கலகம் செய்வதில் வல்லவர்கள். இவர்கள் சுயநலம் அதிகம் கொண்டவர்கள். எளிதில் உணர்ச்சிவசபடகூடியவர்கள். ஆனால் கடமை உணார்ச்சி மிக்கவர்கள். கோபத்துடன் கூடிய முரட்டு சுபாவம் கொண்டவர்கள்.
சுவாதி நட்சத்திரம் நான்காம் பாதம் :
இவர்களிடம் சுவாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். தாய், தந்தை, மனைவி, பிள்ளைகளிடத்தில் அதிகம் பாசம் வைத்திருப்பார்கள். கலகத்தில் விருப்பம் உடையவர்கள். நல்லொழுக்கம் உடையவர்கள். ஆடம்பரத்தில் விருப்பம் உள்ளவர்கள். கடமையுணர்வு உடையவர்கள். இவர்கள் ஒழுக்கமாக இருக்க விரும்புவார்கள். வாக்கு வன்மை உள்ளவர்கள். கடவுள் பக்தி இவர்களுக்கு அதிகம்.
மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.