சிக்கன் பிரைடு ரைஸ் வீட்டில் செய்வது எப்படி

சிக்கன் பிரைடு ரைஸ்

சைனீஸ் உணவு வகைகள் மிகவும் விரைவாக செய்யக்கூடியவை மற்றும் ருசி மிகுந்தவை. இதற்கு உதாரணம் நம் ஊரில் தெருக்கு தெரு இருக்கும் துரித உணவு கடைகள் தான். அந்த வகையில் சைனீஸ் உணவில் ஒன்றான சிக்கன் பிரைடு ரைஸ் எவ்வாறு வீட்டிலேயே செய்வது என பார்ப்போம்.

சிக்கன் பிரைடு ரைஸ் செய்முறை

தேவையான பொருட்கள்

1. பாஸ்மதி அரிசி – 2 கப்
2. முட்டை – 1
3. எலும்பில்லாத சிக்கன் துண்டுகள் – 1/4 கிலோ
4. வெங்காயம் – 2
5. இஞ்சி பூண்டு விழுது – 1 மேஜைக்கரண்டி
6. சோயா சாஸ் – ½ மேஜைக்கரண்டி
7. வெங்காய தாள் – சிறிதளவு
8. முட்டை கோஸ் – சிறிதளவு
9. கேரட் – சிறிதளவு
10. பீன்ஸ் – சிறிதளவு
11. உப்பு – தேவையான அளவு
12. மிளகுத் தூள் – ½ மேஜைக்கரண்டி
13. கரம் மசாலா – 1 மேஜைக்கரண்டி

செய்முறை

1. காய்கறி வகைகளை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

2. பாஸ்மதி அரிசியை 15 நிமிடம் ஊற வைத்து, பின்பு சாதமாக வடித்து கொள்ளவும்.

3. வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி கொள்ளவும். பின்பு நறுக்கிய வெங்காயம் மற்றும் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கி கொள்ளவும்.

4. அதனுடன் நறுக்கி வைத்துள்ள கேரட், பீன்ஸ், முட்டைகோஸ் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.

5. அதனுடன் பொரித்து வைத்துள்ள சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு கிளறிக்கொள்ளவும்.

6. சிக்கன் நன்கு வெந்ததும் வடித்து வைத்த பாஸ்மதி அரிசியை அதனுடன் சேர்த்து கொள்ளவும்.

7. பின் மிளகுத்தூள், கரம் மசாலா, உப்பு, மிளகாய்த்தூள், சோயாசாஸ் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.

8. இவற்றை 5 நிமிடம் நன்றாக கிளறி கொள்ளவும்.

9. இப்போது நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தாளை அதில் தூவி பரிமாறினால் சுவையான சிக்கன் ப்ரைடு ரைஸ் தயார்.

10. இதனுடன் தக்காளி சாஸ், மிளகாய் சாஸ் சேர்த்து பரிமாறினால் சுவையாக இருக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

நட்சத்திர தோஷம்

நட்சத்திர தோஷங்களும், பரிகார முறைகளும்

நட்சத்திர தோஷங்களும், பரிகாரங்களும் ஜோதிடத்தில் 12 ராசிகளும், 27 நட்சத்திரங்களும், ஒரு நட்சத்திரத்துக்கு 4 பாதங்களும் உண்டு. இவ்வுலகில் பிறக்கும் எந்த ஒரு மனிதனும் இந்த மேற்கண்ட ராசி, நட்சத்திரம் மற்றும் நட்சத்திர பாதத்தில்...
தந்தூரி சிக்கன் செய்வது எப்படி

தந்தூரி சிக்கன் வீட்டிலேயே செய்வது எப்படி

தந்தூரி சிக்கன் தந்தூரி சிக்கன் நல்ல காரசாமான சுவையை கொண்டது. தந்தூரி சிக்கன் உணவகங்களில் மட்டுமே செய்ய முடியும் என பலரும் நினைத்திருப்போம். இந்த பதவில் தந்தூரி சிக்கன் எளிமையாக எப்படி வீட்டிலேயே செய்வது...
திருமணப்பெண் குத்துவிளக்கை ஏற்றுவது ஏன்?

திருமணப்பெண் புகுந்த வீட்டில் முதலில் குத்துவிளக்கு ஏற்றுவது ஏன்?

திருமணப்பெண் குத்துவிளக்கை ஏற்றுவது ஏன்? திருமணம் என்பது ஆயிரம் காலத்துப் பயிர் என்று முன்னோர்கள் கூறுவார்கள். அதை போகிறபோக்கில் சாதரணமாக சொல்லிவிடவில்லை, அதற்கு பொருள் நிறைந்த ஆர்த்தம் உள்ளது. உதாரணத்திற்கு நெல், சோளம், பருப்பு...
அதிரசம் செய்முறை

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் செய்வது எப்படி

தீபாவளி ஸ்பெஷல் அதிரசம் தீபாவளி அன்று நம் அனைவரது வீடுகளிலும் செய்யகூடிய பாரம்பரிய இனிப்பு வகையில் முக்கியமான ஒன்று அதிரசரமாகும். அதிரசத்தில் இரண்டு வகை உண்டு. ஒன்று வெல்ல அதிரசம் மற்றொன்று சர்க்கரை அதிரசம்....
pineapple kesari recipe

பைனாப்பிள்  கேசரி செய்முறை

பைனாப்பிள்  கேசரி செய்முறை  தேவையான பொருட்கள் ரவை – 1 கப் சர்க்கரை – ¾ கப் தண்ணீர் – 2 கப் கேசரி கலர் - சிறிதளவு அன்னாசிபழத் துண்டுகள் – ½...
கேரட் ஹேர் பேக்

தலை முடி மென்மையாகவும் அடர்த்தியாகவும் வளர கேரட் ஹேர் பேக்

தலை முடி மென்மையாகவும் அடர்த்தியாகவும் வளர கேரட் ஹேர் பேக் ஆண், பெண் இருவருக்குமே தலை முடி அடர்த்தியாக இருக்க வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும். குறிப்பாக பெண்களுக்கு தலைமுடிதான் அழகு. நீண்ட அடர்த்தியான...
நவராத்திரி வழிபாடு

நவராத்திரி வழிபாடும் அதன் சிறப்புகளும் 

நவராத்திரி வழிபாடும் அதன் சிறப்புகளும் ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதத்தில் வரும் மாகாளய அமாவாசைக்கு மறுநாள் பிரதமை திதியிலிருந்து நவமி திதி வரை வரக்கூடிய 9 நாட்களை தான் நாம் நவராத்திரி என்று அழைக்கிறோம். நாளை...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.