உணவு செரிமான கோளாறால் உண்டாகும் பாதிப்புகள்
சராசரி மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கும், மனநல வளர்ச்சிக்கும் நல்ல சீரான உணவு முறை அவசியமாகின்றது. உணவை சாப்பிடும்போது, அவசர, அவசரமாக சாப்பிடுகின்றோம். அதனால், உடலானது பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடுகிறது.
உணவை மென்று தின்றால் தேவையான உமிழ்நீர் உண்டாகி நமது உணவை நன்கு செரிக்கச் செய்கின்றது. இது அதீத பலத்தை தருவதோடு உணவில் இருக்கும் சத்துக்களை வீணாக்காமல் உடலுக்கு சேர்க்கும்.
நாம் சாப்பிடும் உணவுகள், சரியாக செரிமானம் ஆகவில்லை என்றால் அவை நமது உடல் ஆரோக்கியத்தில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். குறிப்பாக வாயுத்தொல்லை, வயிறு வீக்கம் மற்றும் வயிற்றுப்புண் போன்ற நோய்களை ஏற்படுத்தும்.
செரிமான கோளாறுகள் ஏற்படாமல் நாம் சாப்பிடும் உணவுகள் நன்கு செரிமானமாகி ஆரோக்கியமாக இருப்பது எப்படி என்பதை நாம் பார்க்கலாம்.
செரிமான கோளாறு பாதிப்பின் பொதுவான அறிகுறிகள்
- வயிறு உப்புதல் மற்றும் அதிக வாயு வெளியேறுதல்
- மலச்சிக்கல்
- வயிற்றுப்போக்கு
- இரத்தம் கலந்த மலம் வெளியேறுதல்
- நெஞ்செரிச்சல்
- குமட்டல் மற்றும் வாந்தி
- வயிற்றில் ஏற்படும் வலி
- உணவை உட்கொள்ளும் போது தொண்டையில் ஏற்படும் பிரச்சனைகள்
- எடை அதிகரிப்பு அல்லது எடை இழப்பு
- குடல் சார்ந்த பிரச்சனைகள்
செரிமான கோளாறு ஏற்படுவதற்கான காரணங்கள்
- பாக்டீரியா தொற்று
- குடல் அழற்சி
- செரிமான என்ஸைம்களின் குறைபாடு
- குடலிற்கு செல்லும் இரத்தஓட்டம் குறைவாக இருப்பது.
- பித்தநீர்க்கட்டி உருவாக்கம்
- நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பது
- மனஅழுத்தம்
- புகை பிடித்தல்
- மது அருந்துதல்
- அதிகப்படியான கொழுப்பு நிறைந்த உணவு உட்கொள்வது
- காரமான மசாலா நிறைந்த உணவுகளை எடுத்துக் கொள்வது
- சரியான நேரத்திற்கு உணவு உட்கொள்ளாமல் இருத்தல்.
செரிமான கோளாறு ஏற்படாமல் தடுக்கும் வழி முறைகள்
- தினமும் 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும். அவ்வாறு அதிகமாக தண்ணீர் குடிக்கும்போது, அது உடலில் மலச்சிக்கலை நீக்கி, மிக எளிதாக செரிமானம் நடைபெற வழிசெய்கிறது.
- சாப்பிடும் போது, முதலில் எளிதாக செரிமானமாகும் உணவுகளை சாப்பிட வேண்டும். அதற்கு பிறகு கடினமான மற்றும் சத்து அதிகமான உணவுகளைச் சாப்பிடுவது நல்லது.
- தினமும் எலுமிச்சைப் பழச்சாற்றை குடிப்பதால், வயிற்றில் இருக்கும் கழிவுகள் மற்றும் அளவுக்கு அதிகமான வாயுக்கள் போன்றவை நீங்கி செரிமானத்திற்கு உதவும்.
- உணவை நன்றாகக் கடித்து, மென்று சாப்பிடும்போது, உணவு செரிமானத்திற்கு தேவையான கார்போஹைட்ரேட் வாயில் உற்பத்தியாகிவிடும். இதனா செரிமானம் சீராக நடைபெறும்.
- சாப்பிடும்போது, வயிறு இறுக்கமாக இல்லாமல் நெகிழ்வு தன்மையுடன் இருந்தால் அது உணவை நன்கு செரிமானமாக வழிவகுக்கும்.
- ஆரோக்கியமான பாக்டீரியாக்களை வழங்கும் தயிரை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதால் உடள் ஆரோக்கியமாக இருப்பதோடு சீராகவும் இருக்கும்.
- நார்ச்சத்து அதிகம் உள்ள செர்ரி, திராட்சை, தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை அதிகம் எடுத்துக்கொண்டால் உணவுகள் அனைத்தும் மிக எளிதாக செரிமானமாகிவிடும்.
- அதிக எடையுடன் இருப்பது அதிகமான செரிமான கோளாறு மற்றும் வாயுத் தொல்லைகளை ஏற்படுத்தும். எனவே உடல் எடையைச் சரியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
- உணவுப் பொருட்களில் இஞ்சி, மிளகு, கல், உப்பு, சுக்கு மற்றும் கொத்தமல்லி போன்றவற்றை அதிகமாக சேர்த்துக் கொண்டால் செரிமான மண்டலத்தின் வேகத்தை அதிகரிக்கும்.
- தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால், செரிமான பிரச்சனை எப்போதும் வராது.
நாம் உணவை எவ்வாறு சாப்பிட வேண்டும்
- பொதுவாக சாப்பிடும் பொழுது காலை மடக்கி மடித்து சம்மணமிட்டு சாப்பிடும் பொழுது இரத்த ஓட்டம் வயிற்றுப்பகுதிக்குள் சீராக செல்வதால் செரிமானம் எளிதாகிறது.
- காலை நாற்காலியில் தொங்கவிட்டு அமரும் போது இரத்த ஓட்டம் கால் பகுதிக்கு அதிகமாக செல்கிறது. இதனால் செரிமானம் தாமதமாகிறது.
- உணவை சாப்பிடும் போது கவனம் முழுவதும் உணவின் மீது மட்டுமே இருக்க வேண்டும்.
- தொலைக்காட்சி, கைபேசி, மடிக்கணினி போன்றவற்றை சாப்பிடும்போது பயன்படுத்த கூடாது. அதனால் கவனம் குறைந்து அளவுக்கு அதிகமாக உணவை எடுத்துக்கொள்ள நேரிடும்.
- சாப்பிடும் போது பேசக்கூடாது ஏனென்றால், சாப்பிடும் போது வெளியில் இருந்து காற்று வாய் வழியாக உள்ளே செல்லும் இது உடலுக்கு ஆரோக்கியமானதல்ல. இதனால் தொப்பை உருவாக வாய்ப்பு உள்ளது.
- நாம் சாப்பிடும் போது, மனதில் வெறுப்பு, வன்மம், கோபம், மன உளைச்சல் என எதைப் பற்றிய சிந்தனையும் இல்லாமல் உணவை மட்டுமே கவனித்து உணவை ரசித்து உமிழ்நீரோடு கலந்து மென்று சாப்பிடவேண்டும்.
- இவ்வாறு சாப்பிடும் முறையை பின்பற்றினால் செரிமான பாதிப்புகளும் ஏற்படாது, நம் உடல் ஆரோக்கியமும் சீராக இருக்கும்.