சஷ்டி திதி
சஷ்டி என்றால் ஆறு. இது முருகப் பெருமானுக்குரிய திதியாகும். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் ஆறாவது நாள் சஷ்டி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் சஷ்டியை சுக்கில பட்ச சஷ்டி என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் சஷ்டி தினம் கிருஷ்ண பட்ச சஷ்டி என்றும் அழைக்கபடுகிறது.
சஷ்டி திதியில் பிறந்தவர்களின் குணங்கள்
சஷ்டி திதியில் பிறந்தவர்கள் மெலிந்த தேகம் உடையவர்களாய் இருப்பார்கள். சமுகத்தில் பிரபலமானவர்களின் நட்புகளை பெற்றிருப்பார்கள். சிறிது முன்கோபம் கொண்டவர்கள். புகழ் உடையவர்கள். செல்வம் நிறைய சேர்க்க வேண்டும் என்ற விருப்பம் உள்ளவர்கள். மேலும் எப்போதும் இன்பமாக இருக்க வேண்டும் என்ற விருப்பமுள்ளவர்கள்.
சஷ்டி திதியின் சிறப்புகள்
குழந்தை பேறு இல்லாமல் திருமண வாழ்க்கை என்பது நிறைவு பெறாது. சஷ்டி திதி வரும் நாளில் விரதம் இருந்தால் குழந்தை பேறு கிடைக்கும், மேலும் நம் உள்ளத்தில் முருகன் குடி கொள்வான் என்றும் கூறப்படுகிறது. எனவே சஷ்டி திதியில் விரதம் இருந்தால் வேண்டிய அனைத்தையும் பெறலாம்.
ஐப்பசி மாதம் வளர்பிறையில் வரும் கந்தசஷ்டி விழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த தினத்தில் தான் முருகன் சூரனை அழித்து பூமியை காத்தார். மனிதனுக்கு தேவையான 16 பேறுகளையும் அளிக்கும் ஆற்றல் சஷ்டி விரதத்திற்கு உண்டு.
சஷ்டி திதியில் என்னென்ன செய்யலாம்
சஷ்டி திதியின் தெய்வம் முருகன் பெருமான் ஆவார். இந்நாளில் புதிய நண்பர்களை சந்தித்தல், கேளிக்கை மற்றும் கொண்டாட்டங்களில் ஈடுபடுவது சிறப்பாகும். மேலும் இந்த திதி வரும் நாளில் புதிய வேலையில் சேருதல், வீடு வாங்குதல், வாகனம் வாங்குதல், மருத்துவ தொழில் தொடங்குதல் போன்றவை செய்ய உகந்த நாளாகும்.
மேலும் இந்த திதியில் புதிய பதவிகளை ஏற்று கொள்ளலாம். சிற்பம் மற்றும் வாஸ்து சம்பந்தமான காரியங்களில் ஈடுபடலாம். ஆபரணங்கள் வாங்கலாம், நகை தயாரிக்கலாம், புதியவர்களை நண்பர்களாக ஏற்றுக்கொள்ளலாம்.
சஷ்டி திதியில் என்ன செய்யகூடாது
திங்கட்கிழமை வரும் சஷ்டி திதியில் நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்நாளில் செய்யப்படும் எந்த காரியமும் முழுமையான பலனை தராது.
சஷ்டி திதிக்கான திதி சூன்ய ராசிகள்
சஷ்டி திதிக்கான திதி சூன்ய ராசிகள் மேஷம் மற்றும் சிம்மம் ஆகும்.
சஷ்டி திதியின் தெய்வங்கள்
சஷ்டி வளர்பிறை திதிக்கான தெய்வங்கள் : முருகர், மற்றும் செவ்வாய்
சஷ்டி தேய்பிறை திதிக்கான தெய்வம் : முருகர்
திதி பலன்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.