சரும வறட்சிக்கான காரணங்களும் தீர்வுகளும்

சரும வறட்சிக்கான காரணங்களும் தீர்வுகளும்

பருவ நிலை மாறும் போது நம் உடலிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்படும். அதில் ஒன்றுதான் சரும வறட்சி. சரும வறட்சி  பெரும்பாலானோருக்கு குளிர் காலத்தில்தான் ஏற்படும். குளிர் காலத்தில் வீசும் குளிர் காற்றினால் சருமம் பொலிவிழந்து வறட்சியாக காட்சியளிக்கும். சருமத்தில் இருந்து வெள்ளை வெள்ளையாக செதில்கள் போன்று தோல் உரிய ஆரம்பிக்கும். ஒரு சிலருக்கு அரிப்பும் ஏற்படும்.

சரும வறட்சியை தடுக்க சருமம் வறட்சியாக இருப்பது நமது முகத்தின் அழகை பெரிதும் பாதிக்கும். சரும வறட்சி பெரும்பாலும் நீர்ச்சத்து பற்றாகுறையால்தான் ஏற்படுகிறது. சருமத்தில் மட்டுமல்லாமல் கை, கால்கள் போன்ற இடங்களிலும் தோல் வறட்சியாக காணப்படும்.

எவ்வளவுதான் மேக் அப் போட்டாலும், தோல் வறட்சியுடன் இருப்பது, பொலிவு இழந்த தோற்றத்தைக் கொடுக்கும். பலவகையான க்ரீம் , ஆயில் என்று எதை பயன்படுத்தினாலும் பலன் கொடுக்காது. ஏன் என்றால் இந்த அழகு சாதன பொருட்களில் பல கெமிக்கல்கள் செர்க்கப்டுகின்றன. இது நம் சருமத்தை மேலும் பாதிப்படைய செய்யுமே தவிர எந்த வித பலனையும் தராது.இவ்வகையான சரும பிரச்சனை இருப்பவர்கள் சருமத்திற்கு முறையான கவனிப்பினை அளிக்க வேண்டும்.

சரும வறட்சியை தவிர்க்கும் சில எளிய வழிகள்

  • வாழைப்பழம் மற்றும் தேன் கலந்து முகத்தில் பேக் போல போட்டு 10 முதல் 20 நிமிடம் ஊற வைத்து பின் கழுவினால் முகம் பொலிவுடன் காணப்படும்.
  • நன்றாக பழுத்த பப்பாளி ஒரு மிக்சி ஜாரில் சேர்த்து அரைத்து ஒரு பேஸ்ட் போல கலந்து கொள்ளவும். இந்த பேஸ்டை முகத்தில் தினமும் தடவி வந்தால் சருமத்திற்கு ஈரப்பதம் கிடைத்து வரட்சியடையாமல் பாதுகாக்கலாம்.சருமத்தில் வறட்சி
  • அவகோடா பழத்தை எடுத்து கொள்ளவும், அவற்றை நன்றாக அரைத்து இரண்டு ஸ்பூன் ஆலிவ் ஆயிலை சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை முகத்தில் தடவி 20 நிமிடம் வரை காத்திருந்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால் போதும் சருமத்தில் ஏற்படும் வறட்சியை கட்டுப்படுத்தி, சருமத்திற்கு புத்துயிர் அளிக்கும்.
  • வெள்ளரிக்காயை அரைத்து அவற்றில் இரண்டு ஸ்பூன் தயிர் கலந்து முகம் மற்றும் வறட்சி பகுதிகளில் தடவி 15 நிமிடம் வரை காத்திருக்கவும். 15 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் சரும வறட்சி பிரச்சனை சரியாகும்
  • எலுமிச்சை சாருடன்  தேன் கலந்து முகத்தில் தடவி  15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவவும்.
  • குளிர்காலத்தில் வெளியில் செல்லும்போது ஆலோவேரா ஜெல்லை முகத்தில் தடவிக் கொண்டு செல்லலாம்.
  • ட்ராகன் பழத்தை நன்கு அரைத்து முகத்தில் பூசி வந்தால் விரைவில் முகப் பருக்கள் நீங்கி  முகம் பொலிவுடனும் இருப்பதோடு  இளமையான தோற்றத்தையும் கொடுக்கும்.
  • முல்தானி மட்டி பொடியைப் பன்னீருடன் கலந்து, முகத்தில் தடவி சிறிது நேரம் உலர வைத்து பின்னர் கழுவினால், சரும வறட்சி நீங்கும். இதனைத் தினசரி செய்யலாம். தூங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு இதை முயலலாம்.
  • சுத்தமான சந்தனத்துடன் சிறிதளவு பால் மற்றும் பன்னீர் சேர்த்து நன்கு கலக்ந்து முகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து முகத்தை கழுவினால் முகம் பொலிவுடன் இருப்பதை உணரலாம்.
  • தினமும் குளிப்பதற்கு முன் பாதாம் எண்ணெய் அல்லது, தேங்காய் எண்ணெய், அல்லது ஆலிவ் எண்ணெய்யை முகத்தில் தடவி ஊறவைத்து பின் குளித்தால் முகம் பளிச்சென்று இருக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

கிரிஸ்பி மிளகாய் சிக்கன்

கிரிஸ்பி மிளகாய் சிக்கன் செய்முறை

கிரிஸ்பி மிளகாய் சிக்கன் தேவையான பொருட்கள் சிக்கன் - 1/2 கிலோ மிளகாய் தூள் - 1  தேக்கரண்டி மஞ்சள் தூள் - 1/2 ஸ்பூன் மிளகு தூள் - 1 தேக்கரண்டி கரம் மசாலா தூள் -...
கன்னி ராசி குணங்கள்

கன்னி ராசி பொது பலன்கள் – கன்னி ராசி குணங்கள்

கன்னி ராசி குணங்கள் கன்னி ராசியின் அதிபதி புதன் பகவான் ஆவார். கன்னி ராசியில் உத்திரம் நட்சத்திரத்தின் 2,3,4 ஆம் பாதம், ஹஸ்தம் நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும் மற்றும் சித்திரை நட்சத்திரத்தின் 1, 2...
how to make somas

சுவையான மொறு மொறு சோமாஸ் செய்வது எப்படி ?

சோமாஸ் தேவையான பொருட்கள் மைதா - 1 கப் உப்பு - சிறிதளவு உருக்கிய டால்டா (அ) நெய் - 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு பூரணம் செய்ய ரவை...
ஆட்டு தல கறி குழம்பு

தலைக் கறிக்குழம்பு

தலைக் கறிக்குழம்பு தேவையான பொருட்கள் ஆட்டுத்தலை – 1 தேங்காய் – ½ கப் சின்ன வெங்காயம் – 1 கப் தக்காளி – 2 உப்பு – தேவையான அளவு மஞ்சள் தூள்...
சித்த மருத்துவம் பயன்கள்

சித்த மருத்துவம் என்றால் என்ன? சித்த மருத்துவ பயன்கள்

சித்த மருத்துவம் சித்த மருத்துவம் (Siddha Medicine) என்பது பழங்காலத்தில் சித்தர்களால் உருவாக்கப்பட்ட ஒரு அற்புதமான மருத்துவ முறையாகும். சித்த வைத்தியத்தை பாட்டி வைத்தியம், கை வைத்தியம், தமிழ் மருத்துவம், நாட்டு மருத்துவம், மூலிகை...
கடுக்காய் மருத்துவ நன்மைகள்

கடுக்காய் மருத்துவ நன்மைகள்

கடுக்காய் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட கடுக்காய் கிட்டத்தட்ட 4000 ஆண்டுகளுக்கு முன்பே சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதை நிரூபிக்கும் விதத்தில் பல்லாண்டுகளுக்கு முந்தைய சித்த மருத்துவ நூல்களில் கடுக்காய் பற்றிய மருத்துவ குறிப்புகள்...
லக்ன பலன்கள் என்றால் என்ன

லக்னம் என்றால் என்ன? லக்னம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது?

லக்னம் என்றால் என்ன? ஒருவரிடம் அவரின் ராசி எதுவென்று கேட்டால் எளிதாக சொல்லி விடுவார்கள். ஆனால் அவரின் லக்னம் என்னவென்று கேட்டால் திணறுவார்கள். ஒருவருடைய ஜாதகத்தில் 'ல' என்றும் 'ராசி' என்றும் ஜோதிடர்கள் குறிப்பிட்டு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.