சப்தமி திதி
சப்தம் என்றால் ஏழு என்று அர்த்தம். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து வரும் ஏழாவது நாள் சப்தமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் சப்தமியையை சுக்கில பட்ச சப்தமி என்றும், பௌர்ணமிக்கு அடுத்து வரும் சப்தமி தினம் கிருஷ்ண பட்ச சப்தமி என்றும் அழைக்கபடுகிறது.
சப்தமி திதியில் பிறந்தவர்களின் குணங்கள்
சப்தமி திதியில் பிறந்தவர்கள் தன்னை விட வயதில் மூத்தவர்களிடம் மதிப்பும், மரியாதையும் கொண்டிருப்பார்கள். இரக்கம் மற்றும் தயாள சிந்தனை உடையவர்கள், எதிலும் கண்டிப்பு உடையவர்கள். உடல் வலிமை மற்றும் செல்வம் வளம் கொண்டவர்கள். மற்றவர்களுக்கு நன்மை செய்யும் குணம் கொண்டவர்கள். சப்தமி திதியில் பிறந்தவர்கள் வெல்லம் படைத்து வழிபட வேண்டும்.
சப்தமி திதியின் சிறப்புகள்
தை மாதம் வளர்பிறையில் வரும் சப்தமி திதி ‘இரத சப்தமி’ ஆக (சூரிய ஜெயந்தி) வைணவத் ஆலயங்களில் கொண்டாடப்படுகிறது. பெருமாள் அதிகாலையில் சூரிய உதயம் தொடங்கி, சூரியன் அஸ்தமனம் ஆகும் வரை பல்வேறு வாகனங்களில் எழுந்தருளும் நாள். சூரியன் வடக்கு நோக்கி தன் பயணத்தை தொடங்கும் நாள் இன்று. இதற்காக சூரியன் பெருமாளை வணங்கி தன் பயணத்தை தொடங்க பெருமாள் எழுந்தருள்வதாக ஐதீகம்.
சப்தமி திதியில் என்னென்ன செய்யலாம்
சப்தமி திதி வரும் நாள் சூரியனுக்கு உகந்த நாளாகும். இந்நாளில் பயணங்கள் மேற்கொள்ளுதல், அலுவலகம் இடமாற்றம் செய்தல், சம்மந்தமான காரியங்கள் செய்யலாம். மேலும் திருமணம் செய்யலாம், சங்கீதம் கற்றுகொள்ளுதல், அதற்கான வாத்தியங்கள் வாங்குதல், ஆடை வாங்குதல் மற்றும் தயாரித்தல் போன்றவற்றை செய்யலாம். இந்த நாளில் குதிரைகள் பூட்டிய தேரில் இருக்கும் சூரிய பகவானை வழிபாட்டு வந்தால் நன்மைகள் உண்டாகும்.
சப்தமி திதியில் என்ன செய்யக்கூடாது
தேய்பிறையில் வரும் சப்தமி திதியில் திருமணத்திற்கு வரன் பார்க்க கூடாது. செவ்வாய்க்கிழமை வரும் சப்தமி திதியில் நல்ல காரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இந்நாளில் எந்த நல்ல காரியம் செய்தாலும் அது முழுமையான பலனை தராது.
சப்தமி திதிக்கான திதி சூன்ய ராசிகள்
சப்தமி திதிக்கான திதி சூன்ய ராசிகள் மேஷம் மற்றும் சிம்மம் ஆகும்.
சப்தமி திதிக்கான தெய்வங்கள்
சப்தமி திதிக்கான வளர்பிறை தெய்வங்கள் : சூரியன், மற்றும் இந்திரன்
சப்தமி திதிக்கான தேய்பிறை தெய்வம் : சூரியன்
திதி பலன்களை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.