ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்
ரோகிணி நட்சத்திரத்தின் இராசி : ரிஷபம்
ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி : சந்திரன்
ரோகிணி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சுக்கிரன்
ரோகிணி நட்சத்திரத்தின் அதிதேவதை : பிரம்மா
ரோகிணி நட்சத்திரத்தின் பரிகார தெய்வம் : அம்மன்
ரோகிணி நட்சத்திரத்தின் நட்சத்திர கணம்(குணம்) : மனுஷகணம்
ரோகிணி நட்சத்திரத்தின் விருட்சம் : நாவல்
ரோகிணி நட்சத்திரத்தின் மிருகம் : நல்ல பாம்பு
ரோகிணி நட்சத்திரத்தின் பட்சி : ஆந்தை
ரோகிணி நட்சத்திரத்தின் கோத்திரம் : அகத்தியர்
ரோகிணி நட்சத்திரத்தின் வடிவம்
ரோகிணி நட்சத்திரம் நட்சத்திரங்களின் வரிசையில் 4ம் இடத்தை பிடிக்கிறது. இதற்கு ‘சகடு’ என்ற பெயரும் உண்டு. ரோகிணி நட்சத்திரம் வான் மண்டலத்தில் தேர், வண்டி போன்ற வடிவத்தை கொண்டது.
ரோகிணி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்
பகவான் ஸ்ரீகிருஷ்ணர் இந்த நட்சத்திரத்தில் தான் அவதரித்தார்.ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நல்ல அழகிய உடல் அமைப்பும், புத்திசாலியாகவும், சாமர்த்தியசாலியாகவும் இருப்பார்கள். தண்ணீர் சார்ந்த துறைகளால் இலாபம் அடைவார்கள். எல்லோருக்கும் உதவும் மனப்பான்மை உடையவர்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எல்லா விதமான கலைகளையும் எளிதில் கற்றும் கொள்ள கூடிய ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள்.
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தாங்கள் சார்ந்த மதத்தில் அதிக ஈடுபாடு கொண்டிருப்பார்கள். சகல செல்வங்களையும் பெற்று சௌபாக்கியத்துடன் வாழ்வர்கள். நேர்மையான மற்றும் பிடிவாத குணமும் கொண்டவர்கள். மற்றவர்களை சார்ந்து வாழக்கூடியவர்கள். இவர்கள் பொன் பொருள் மீது அதிக ஆசையுடைவர்களாக இருப்பார்கள். இவர்கள் நல்ல அழகிய தோற்றமுடையவராகவும், புத்திசாலியாகவும், புதிர்களுக்கு விடை கண்டுபிடிப்பதில் மிகுந்த சாமர்த்தியசாலியாகவும் விளங்குவார்கள்
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவாளிகள். சுதந்திர பிரியர்கள். செய்யும் காரியத்தை திருத்தமாக செய்வார்கள். கூரிய அறிவுடையவர்களாக இருப்பார்கள். விரும்பியவர்களுக்காக எதையும் எதிர்பார்க்காமல் விட்டுக் கொடுப்பார்கள். ஒருவரை பிடிக்கவில்லை என்றால் அவரை கடைசி வரை ஒதுக்கித் தள்ளுவார்கள். தாய் வழி நன்மைகள் அதிகம் இவர்களுக்கு கிடைக்கும். சிற்றின்ப பிரியர்கள். நினைத்ததை அடைய இயன்றவரை போராடுவார்கள்.
இவர்களின் பேச்சில் ஒளிவு, மறைவு இருக்காது. இவர்கள் நேர்மையாக வாழ வேண்டும் என விரும்புவார்கள். எதிர்காலத்துக்கு தேவையான முக்கிய குறிக்கோளுடன் இருப்பார்கள். வேலையாட்களிடம் வேலை வாங்குவதில் சமர்த்தாய் இருப்பார்கள். மிகவும் சிக்கலான சமயங்களிலும் சாமர்த்தியமாக பேசி சமாளித்து விடுவார்கள். சுத்தத்தை அதிகம் விரும்புவார்கள்.
இவர்கள் யாரையும் சார்ந்து இருக்காமல் சுதந்திரமாக இருக்க வேண்டும் என ஆசைபடுவார்கள். எல்லா விஷயத்திலும் சுயமாக சிந்தித்து முடிவு செய்வார்கள். இவர்களிடம் தலைமை தாங்கும் பண்பு அதிகம் இருக்கும். இவர்கள் சோம்பேறித்தனம் அதிகம் உடையவர்கள். ரோகிணி நட்சத்திரம் தாய்க்கும், தாய்மாமனுக்கும் தோஷத்தை ஏற்படுத்தும் என்பது பொதுவான கருத்தாகும்.
ரோகிணி நட்சத்திரம் முதல் பாதம் :
இவர்களிடம் ரோகிணி நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்கள் தோற்றப் பொலிவு கொண்டவர்கள். வைராக்கியம் உடையவர்கள். வரட்டுப் பிடிவாதம் உடையவர்கள். ஊர் ஊராக சுற்றக் கூடியவர்கள். இவர்களுக்கு மன உறுதி மற்றும் பொறுமை என்பது கொஞ்சம் குறைவு. தோல்வியை தாங்கி கொள்ள மாட்டார்கள். இவர்கள் பார்ப்பதற்கு அழகாக இருப்பார்கள். இவர்கள் கஞ்சத்தனம் உடையவர்களாக இருப்பார்கள்.
ரோகிணி நட்சத்திரம் இரண்டாம் பாதம் :
இவர்களிடம் ரோகிணி நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இரக்க குணம் கொண்டவர்கள். பெண்களிடம் நேசம் கொண்டவர்கள். ஆடம்பர வாழ்க்கை வாழ முயற்சி செய்யக்கூடியவர்கள். இவர்கள் மகிழ்ச்சியாகவும், செல்வ செழிப்புடனும் வாழ விரும்புவார்கள். இவர்களுக்கு தர்மம், மற்றும் இரக்க குணம் அதிகம் இருக்கும். ஆசைப்பட்டது கிடைக்காவிட்டால் துவண்டுவிடுவார்கள். இவர்கள் வாய்சொல்லில் வீரர்களாக இருப்பார்கள். உண்மை பேசுவதை குறிக்கோளாக கொண்டவர்கள்.
ரோகிணி நட்சத்திரம் மூன்றாம் பாதம் :
இவர்களிடம் ரோகிணி நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். புத்திக் கூர்மை உடையவர்கள். கல்வியில் விருப்பம் கொண்டவர்கள். கவிதை, காவியங்களில் விருப்பம் கொண்டவர்கள். பல கலைகளை கற்ற சாதுர்த்தியமான சமர்த்தியசாலிகள். இவர்கள் கணிதம் சம்மந்தமான வேலைகளில் வல்லவர்கள். சங்கீதத்தில் அதிக ஆர்வம் இருக்கும். சுகமாக இருக்க விரும்புவர்கள். புத்தி கூர்மை அதிகம் கொண்டவர்கள்.
ரோகிணி நட்சத்திரம் நான்காம் பாதம் :
இவர்களிடம் ரோகிணி நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடியவர்கள். அலைபாயும் மனம் கொண்டவர்கள். கொஞ்சம் பயந்த சுபாவம் உடையவர்கள். இவர்கள் உண்மை பேசுவதை விரும்புவர். பிறரின் சொத்துக்கு ஆசைபடுவார்கள். காமத்தில் அதிக விருப்பம் உடையவர். பொறுமையாக இருந்து எதையும் சாதிக்க விரும்புவார்கள். எளிதில் உணர்ச்சி வசபடக் கூடியவர்கள்.
மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.