புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்களின் பலன்கள்
புரட்டாசி மாதத்தில் பிறந்தவர்கள் நல்ல அறிவு மற்றும் திறமையுடன் ஞான மிக்கவராக இருப்பார்கள். இவர்கள் எளிதில் எவற்றையும் கற்கும் திறமை கொண்டவர்கள். சாமர்த்தியமாக பேசுவதில் வல்லவர்கள். இம்மாதத்தில் பிறந்தவர்கள் படிக்காதவராக இருந்தாலும் பல விஷயங்களில் மேதைகளாக இருப்பார்கள்.
இந்த மாதத்தில் பிறந்தவர்கள் படித்தவர்களாக இருந்தால் பெரிய பட்டதாரி, டாக்டர், இஞ்சினியர், மற்றும் விஞ்ஞானிகளாகவும் விளங்குவார்கள். கல்வியிலும் இவர்களுக்கு முன்னேற்றம் உண்டு. அறிவியல் துறையில் ஈடுபட்டால் இவர்கள் நல்ல முன்னேற்றம் காண்பார்கள். புத்தகம் படிப்பதில் இவர்களுக்கு விருப்பம் அதிகம்.
எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் இவர்களிடம் சில குறைகளும் உண்டு. இயற்கையாகவே இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு புத்திசாலித்தனம் அதிகம் இருந்தும்கூட ஒரு லட்சியத்தை மனதில் நினைத்தால் அதை முடிக்க இறுதி வரை போராட மாட்டார்கள். இவர்களுக்குரிய திறமை இவர்களுக்கே தெரியாமல் போய்விடுவது தான் பெரிய குறையாகும். இவர்கள் சந்தேக குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
தன் உழைப்பாலும், திறமையாலும் சமுகத்தில் உயர்ந்த அந்தஸ்தை அடைவார்கள். இவர்கள் நல்ல பேச்சாளர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் மற்றவர்களுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் இருப்பார்கள். எந்த காரியத்தை எடுத்து கொண்டாலும் அதை எளிதில் முடிக்கும் ஆற்றல் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் சுறுசுறுப்பானவர்கள். தன் முயற்சியால் பல செயல்களை செய்து வெற்றி காண்பார்கள்.
இவர்களிடம் கற்பனை சக்தியும், தத்துவங்களும் நிறைந்து காணப்படும். இவர்கள் மற்றவர்களைப் போல நடித்து காட்டுவதில் வல்லவர்கள். எந்த ஒரு விஷயத்திலும் ஆழ்ந்து சிந்திக்காமல் அதில் தலையிடமாட்டார்கள். எதையும் சிறப்பாக செய்ய வேண்டும் என்ற கொள்கை உடையவர்கள். மற்றவர்கள் செய்யும் குற்றம் குறைகளை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள். அதை ஒளிவு மறைவின்றி சாமர்த்தியமாக எடுத்துக் கூறுவார்கள்.
இவர்கள் கிடைப்பதே போதும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அதனால் தொழில் மற்றும் வியாபாரத்தில் கிடைக்க போகும் பெரிய லாபத்தை விட்டு விடுவார்கள். இதையெல்லாம் தவிர்த்து ஒரு லட்சியத்துடன் வாழ்ந்தால் இந்த மாதத்தில் பிறந்தவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும். மற்றவர்கள் எளிதில் செய்யக்கூடிய தவறுகளை கூட நிகழாவண்ணம் நடந்துகொள்வர்கள். மற்றவர்களுடைய முன்னேற்றத்திற்குத் தன்னலமற்றுப் பாடுபடுவார்கள். பிறரைப் புகழ்ந்து பேசியோ அல்லது குறுக்கு வழிகளைக் உபயோகித்து காரியத்தைச் சாதிப்பது என்பது இவர்களுக்குப் பிடிக்காது.
மற்றவருக்குச் சிறந்த வழிகாட்டியாகவும் விளங்குவர்கள். சூழ்நிலைக்கேற்றவாறு தம் கொள்கைகளை மாற்றிக்கொள்வார்கள். எந்த காரியத்தையும் எளிதில் சாதித்து முடிக்கும் ஆற்றல் வாய்ந்தவர்கள். நேரத்தை வீணாக்காமல் இயந்திரம் சுழன்று குறிப்பிட்ட காலவரம்பிற்குள் செய்வதைத் திருந்தச் செய்வார்கள்.
யாராவது தவறு செய்தால் அவர்களை தட்டிக் கேட்கும் குணம் இவர்களிடம் உண்டு. அத்துடன் திரும்பவும் அந்த தவறை செய்யாமல் இவர்கள் பார்த்துக் கொள்வார்கள். இயற்கை எழில் மிகுந்த இடங்களுக்கு சுற்றலா சென்று வருவதில் இவர்களுக்கு அதிக விருப்பம் இருக்கும். இவர்களுக்கு எல்லா உணவுகளையும் சாப்பிடுவதில் விருப்பம் அதிகம். இதைத் தவிர்த்து சத்தான உணவுகளை அளவோடு சாப்பிட்டால் ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.