பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்
பூரட்டாதி நட்சத்திரத்தின் இராசி : கும்பம் மற்றும் மீனம்
பூரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி : குரு
பூரட்டாதி நட்சத்திரத்தின் 1, 2 மற்றும் 3ம் பாதத்தின் இராசி அதிபதி (கும்பம்) : சனி
பூரட்டாதி நட்சத்திரத்தின் நான்காம் பாதத்தின் இராசி அதிபதி (மீனம்) : குரு
பூரட்டாதி நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : காமதேனு
பூரட்டாதி நட்சத்திரத்தின் பரிகார தெய்வம் : துர்க்கை
பூரட்டாதி நட்சத்திரத்தின் நட்சத்திர குணம் : மனுஷ குணம்
பூரட்டாதி நட்சத்திரத்தின் விருட்சம் : தேமா
பூரட்டாதி நட்சத்திரத்தின் மிருகம் : ஆண் சிங்கம்
பூரட்டாதி நட்சத்திரத்தின் பட்சி : உள்ளான்
பூரட்டாதி நட்சத்திரத்தின் கோத்திரம் : அகத்தியர்
பூரட்டாதி நட்சத்திரத்தின் வடிவம்
பூரட்டாதி நட்சத்திரம் நட்சத்திரங்களின் வரிசையில் 25வது இடத்தை பிடிக்கிறது. இதற்கு ‘நாழி’ என்ற பெயரும் உண்டு. பூரட்டாதி நட்சத்திரம் வான் மண்டலத்தில் ‘கட்டில்கால்’ வடிவத்தில் காணப்படும்.
பூரட்டாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அழகான மற்றும் சாதுரியமான பேச்சுகளால் எல்லோரையும் கவரக்கூடியவர்கள். எதிர்கால திட்டங்களில் மிகுந்த கவனம் கொண்டவர்கள். எதிர்காலத்துக்கான சேமிப்பில் விருப்பம் கொண்டவர்கள். வெற்றி பெற கடுமையாக போராடக்கூடியவர்கள். நினைத்த செயலை முடிக்கும் வரை ஓயமாட்டார்கள். நண்பர்களுடன் உங்களுக்கு நல்ல உறவுகள் இருந்து வரும். சம்பிரதாயங்களில் அதிக நாட்டம் இருக்காது. இவர்கள் சரியான முன் கோபிகள். கோபம் இருந்தாலும் பரந்த மனம் இருக்கும். தன்னை பற்றி யாரும் குறை கூறுவதை விரும்ப மாட்டார்கள்.
இவர்கள் அதிகமாகப் பேசக்கூடியவர்கள் மற்றும் தெளிவாகப் பேசுபவர்கள். இவர்கள் வெகு விரைவாக எதிர்பாலினத்தை சேர்ந்தவர்களால் ஈக்கப்படுவார்கள். இவர்கள் புத்திசாலியாக இருப்பதால் எந்த வேலையில் இருந்தாலும் பிரகாசிக்க கூடியவர்கள். கொள்கை பிடிப்பு உள்ளவர்களாக இருந்தாலும், அடிக்கடி சஞ்சலத்திற்கு உள்ளாவதுண்டு. இவர்களுக்கு நல்ல வாட்டசாட்டமான உடல்வாகு இருக்கும். சில சமயம் சமாதானமாக போகும் இவர்கள், பலசமயம் சண்டைக்கும் செல்வார்கள். இவர்களின் செய்கை எப்போதும் விநோதமாக இருக்கும். மற்றவர்களால் இவர்கள் செய்கைகள் உடனே ஏற்றுக் கொள்ள முடியாதவைகளாக இருக்கும்.
இவர்களின் உங்கள் வாழ்க்கைத் துணை, பெரும்பாலும் ஒரு பணக்காரக் குடும்பத்திலிருந்து வந்தவராக இருப்பார். மனைவி மேல் அதிக அன்பு கொண்டவர்கள். குடும்ப வாழ்க்கையில் அன்பு, அரவணைப்பும் இருக்கும். மற்றவர்களுக்கு உதாரண தம்பதிகளாக இருப்பார்கள். இவர்களின் குழந்தைகள் இவர்களுக்கு மகிழ்ச்சியைத் தருவார்கள். தங்களுக்கு வேண்டியவர்களுக்காக எதையும் செய்யும் மனப்போக்கு உள்ளவர்கள். வலிமையான உடலும், உறுதியான மனமும் உடையவர்கள். எந்த தொழில் செய்தாலும் அதில் மிகுந்த ஈடுபாட்டுடன் செய்வார்கள்.
இவர்களின் வாழ்க்கையில் வசதி, வாய்ப்பு எப்படியும் வந்துவிடும். தேவைக்கு அதிகமாக தேடி அலைகிற குணம் இவர்களுக்கு இல்லை. இந்த நட்சத்திரத்திரகாரர்ளுக்கு குழந்தை பிறந்த பிறகு, அப்பாவின் அந்தஸ்து அதிகரிக்கும். இவர்கள் இளமைக் காலம் தொட்டே வளர்ச்சிப் பாதையில் பயணிப்பார்கள். ஆன்மிக ஈடுபாட்டில் அதிக விருப்பம் கொண்டவர்கள். மற்றவர்களின் மனதில் உள்ளதை அறிந்து செயல்படக்கூடியவர்கள். எப்பொழுதும் ஏதாவது சிந்தனை செய்து கொண்டேயிருப்பார்கள். வாத, விவாதங்கள் செய்வதில் வல்லவர்கள். கல்வி கேள்விகளில் ஞானம் உள்ளவர்கள்.
எல்லா பிரச்சனைகளையும் எளிதாக தீர்த்து வைப்பார்கள் உணர்வுகளை அடக்கி ஆளக்கூடியவர்கள். குடும்ப வாழ்க்கையில் அக்கறை இல்லாமல் இருப்பார்கள். தாய், தந்தை, மற்றும் குடும்ப உறுப்பினர்களிடம் அதிக பாசத்துடன் இருப்பார்கள். எல்லாம் தெரிந்தாலும் எதையும் வெளிகாட்டி கொள்ள மாட்டார்கள். நல்ல அறிவாற்றலும் பேச்சாற்றலும் இருக்கும். இவர்கள் நியாய அநியாயங்களை தைரியமாக பேசுவார்கள். பிறர் பேச்சிற்கு மதிப்பளிப்பார்கள். தானுண்டு தன் வேலையுண்டு என இருப்பார்கள். மிகவும் இளகிய மனம் கொண்டவர்கள். வீண் செலவுகள் செய்ய மாட்டார்கள்.
பூரட்டாதி நட்சத்திரம் முதல் பாதம் :
இவர்களிடம் பூரட்டாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இறை வழிபாட்டில் விருப்பம் உடையவர்கள். நன்றாக அகன்ற முகத்தை கொண்டு இருப்பார்கள். வலிமை உடையவர்கள். போட்டிகளில் ஈடுபாடு உடையவர்கள். இவர்கள் நல்ல பழக்க வழக்கங்களை கொண்டிருப்பார்கள். சௌபாக்கியம் உடையவர்கள். மனைவி, பிள்ளைகளிடத்தில் அதிக பிரியம் உடையவர்கள்.
பூரட்டாதி நட்சத்திரம் இரண்டாம் பாதம் :
இவர்களிடம் பூரட்டாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். யாருக்காகவும் பொய் பேசமாட்டார்கள். இவர்கள் வாக்குச் சாதுர்யம் மிகுந்தவர். உணர்ச்சிகள் அதிகம் உடையவர்கள். மதிப்புகள் உடையவர்கள். மக்களால் விரும்பப்படக்கூடியவர்கள். தெய்வ பக்திக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள். எடுத்த செயலை முடிப்பதற்காக எல்லா வித முயற்சிகளிலும் ஈடுபடக்கூடியவர்கள். பிறர் மனம் கோணாமல் நடந்து கொள்வர்கள்.
பூரட்டாதி நட்சத்திரம் மூன்றாம் பாதம் :
இவர்களிடம் பூரட்டாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். எப்போதும் புன்சிரிப்பு உடையவர்கள். இவர்கள் சந்தோஷமாக இருப்பதையே விரும்புவர்கள். அறவழியில் நடப்பவர்கள். நல்ல பொறுமை சாலியாகவும், நன்நடத்தை உள்ளவராகவும் இருப்பார்கள். கற்பனையில் வல்லவர்கள். பொருள் சேர்ப்பதில் நாட்டம் உடையவர்கள். சமுகத்தில் பெரிய மனிதர்களிடம் நட்புறவை வைத்திருப்பவர்கள்.
பூரட்டாதி நட்சத்திரம் நான்காம் பாதம் :
இவர்களிடம் பூரட்டாதி நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். நல்ல பண்புகளை கொண்டவர்கள். இவர்கள் ஒழுக்க சீலர்களாகவும், நல்ல குணமுள்ளவர்களாவும், சத்தியம் தவறாதவராகவும் இருப்பார்கள். உண்மை பேசக்கூடியவர்கள். நம்பிக்கைக்கு உரியவர்கள். தொழிலில் நாட்டம் கொண்டவர்கள். இவர்களிடம் ஒப்படைக்கப்படும் செயல்களை முழுமூச்சுடன் செயல்பட்டு செய்து முடிப்பார்கள்.
மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.