பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்
பூரம் நட்சத்திரத்தின் இராசி : சிம்மம்
பூரம் நட்சத்திரத்தின் அதிபதி : சுக்கிரன்
பூரம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சிம்மம் : சூரியன்
பூரம் நட்சத்திரத்தின் நட்சத்திர தேவதை : பார்வதி
பூரம் நட்சத்திரத்தின் பரிகார தெய்வம் : துர்க்கை
பூரம் நட்சத்திரத்தின் நட்சத்திர கணம் : மனுஷ
பூரம் நட்சத்திரத்தின் விருட்சம் : அலரி
பூரம் நட்சத்திரத்தின் மிருகம் : பெண் எலி
பூரம் நட்சத்திரத்தின் பட்சி : பெண் கழுகு
பூரம் நட்சத்திரத்தின் கோத்திரம் : அகத்தியர்
பூரம் நட்சத்திரத்தின் வடிவம்
பூரம் நட்சத்திரம் நட்சத்திரங்களின் வரிசையில் 11வது இடத்தை பிடிக்கிறது. இதற்கு ‘கணை’ என்ற பெயரும் உண்டு. பூரம் நட்சத்திரம் வான் மண்டலத்தில் கட்டில், சதுரம் போன்ற வடிவங்களில் காணப்படும்.
பூரம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் மனது அலைபாய்ந்து கொண்டே இருக்கும். இவர்கள் நல்ல அறிவாளிகள். மற்றவர்களை அனுசரித்து செல்வார்கள். அழகாக இருப்பார்கள். ஆடை, அணிகலன்களில் எப்போதும் நேர்த்தியை விரும்புவார்கள். பிடித்த உணவுகளை சாப்பிடுவதில் விருப்பம் உள்ளவர்கள். தங்களை பற்றியே பெருமையாக எண்ணக் கூடியவர்கள். தற்பெருமை கொண்டவர்கள். பொன், பொருள் சேமிப்பதில் நாட்டம் கொண்டவர்கள். இதமான சொற்களை பேசக்கூடியவர்கள். எதையும் திட்டமிட்டு செய்வதில் வல்லவர்கள். ஆடம்பர செலவுகள் அதிகம் செய்வார்கள்.
பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சமயப்பற்றும், துணிச்சலும், தாராள சிந்தையும், பகைவர்களை வெற்றி கொள்ளும் சாதுர்யமும், தந்திரபுத்தியும் இருக்கும். இவர்களுக்கு பாலியல் உணர்ச்சி அதிகம் இருக்கும். இவர்கள் 33 வயதிலிருந்து 38 வயது வரையிலான காலம், அதிருஷ்டம் நிறைந்ததாக இருக்கும். இவர்கள் பொறுமையானவர்கள், அவ்வளவு எளிதில் கோபம் அடையமாட்டார்கள், ஆனால் கோபம் வந்துவிட்டால் அவ்வளவு எளிதில் சமாதானம் ஆக மாட்டார்கள். இவர்களுக்கு தெய்வ நம்பிக்கை அதிகம் இருக்கும். செல்வாக்கோடு வாழ விரும்புவார்கள்.
இவர்கள் யாருக்கும் அடிமையாக இல்லாமல் சுதந்திரமாக இருக்கவே விரும்புவார்கள். வலிமையான உடல் அமைப்பை கொண்டவர்கள். சற்று குள்ளமாக இருப்பார்கள். தனித்திறமை மிக்கவர்கள். ஏதாவது ஒரு துறையில் நிபுணர்களாக இருப்பார்கள். அசட்டு தைரியம் இவர்களிடம் அதிகம் இருக்கும். இனிமையான பேச்சும், இளமையான தோற்றமும் உடையவர்கள். இவர்கள் யாருக்கு கீழும் வேலை செய்ய விரும்ப மாட்டார்கள். அப்படியே ஏதாவது வேலை அமைந்தால் கூட உயர் அதிகாரிகளோடு இவர்களுக்கு இணக்கமான உறவு இருக்காது. இவர்களுக்கு உழைப்பதில் ஆர்வம் அதிகம். பயணங்கள் செய்வதில் அதிக விருப்பம் உடையவர்கள்.
முன்யோசனை உள்ளவர்கள். இவர்களில் பெரும்பாலான வர்களுக்கு திருமணம் தாமதமாக நடக்கும் அல்லது பிரச்சனைகள் தரும் மனைவி அமைவாள். எல்லா கலைகளையும் கற்று கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் கொண்டவர்கள். கலைகள் மீது விருப்பம் கொண்டவர்கள். இவர்களுக்கு இசை, நடிப்பு இவற்றில் ஆர்வம் அதிகம் இருக்கும். தான தர்மங்கள் செய்ய ஆசைபடுவார்கள். அழகைவிரும்பி ரசிப்பவர்கள். எப்பொழுதும் கற்பனை உலகில் சஞ்சரித்து கொண்டு இருப்பார்கள். சேமிப்பதில் அதிக அக்கறை கொண்டவர்கள்.
பூரம் நட்சத்திரம் முதல் பாதம் :
இவர்களிடம் பூரம் நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். செயல்திறன் மிக்கவர்கள். இறை நம்பிக்கை உள்ளவர்கள். நல்ல நினைவாற்றல் உடையவர்கள். அதீத நினைவாற்றல் கொண்டவர்கள். எப்பாடுபட்டாவது தாங்கள் மேற்கொண்ட காரியங்களில் வெற்றி பெற விரும்புவார்கள். இவர்கள் தைரியசாலிகள். இனிமையாக பேசுவதில் வல்லவர்கள். உடல் நலனில் அதிக அக்கறை எடுத்து கொள்ள மாட்டார்கள்.
பூரம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் :
இவர்களிடம் பூரம் நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். வேளாண்மையில் விருப்பம் உடையவர்கள். எளிதில் திருப்தி அடைய மாட்டார்கள். திறமை இருப்பினும் அடிக்கடி தோல்வி அடையக்கூடியவர். தோல்வியை ஏற்று கொள்ளும் மன பக்குவம் இவர்களுக்கு குறைவு. மற்றவர்களை சார்ந்து வாழக்கூடியவர்கள். இவர்களுக்கு நல்ல கல்வியறிவும், திறமையும் இருக்கும். கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள்.
பூரம் நட்சத்திரம் மூன்றாம் பாதம்:
இவர்களிடம் பூரம் நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். கீர்த்தி உடையவர்கள். இவர்கள் நல்ல குணமுடையவர்களாக இருப்பார்கள். நுண் கலைகளில் ஆர்வம் அதிகம் இருக்கும். இவர்களுக்கு சுயநலம் அதிகம் இருக்கும். பிறரை பற்றி கவலை பட மாட்டார்கள்.
பூரம் நட்சத்திரம் நான்காம் பாதம் :
இவர்களிடம் பூர நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்கள் அவசரப்பட்டு முடிவெடுத்துவிட்டு பிறகு வருத்தப்படுவார்கள். உடலில் வடுக்கள் உள்ளவர்கள். இறை நம்பிக்கை இல்லாதவர்கள். திட்டமிட்டபடி செயல்பட மாட்டார்கள். தெய்வ நம்பிக்கை உடையவர். இவர்களுக்கு நிர்வாக திறமை குறைவு.
மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.