பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்
பூராடம் நட்சத்திரத்தின் இராசி : தனுசு
பூராடம் நட்சத்திரத்தின் அதிபதி : சுக்கிரன்
பூராடம் நட்சத்திரத்தின் இராசி அதிபதி : குரு
பூராடம் நட்சத்திரத்தின் நட்சத்திர அதிதேவதை : வருணன்
பூராடம் நட்சத்திரத்தின் பரிகார தெய்வம் : துர்க்கை
பூராடம் நட்சத்திரத்தின் நட்சத்திர கணம் : மனுஷ கணம்
பூராடம் நட்சத்திரத்தின் விருட்சம் : வஞ்சி
பூராடம் நட்சத்திரத்தின் மிருகம் : ஆண் குரங்கு
பூராடம் நட்சத்திரத்தின் பட்சி : கௌதாரி
பூராடம் நட்சத்திரத்தின் கோத்திரம் : புலஸ்தியர்
பூராடம் நட்சத்திரத்தின் வடிவம்
பூராடம் நட்சத்திரம் நட்சத்திரங்களின் வரிசையில் 20வது இடத்தை பிடிக்கிறது. இதற்கு ‘உடைகுளம்’ என்ற பெயரும் உண்டு. பூராடம் நட்சத்திரம் வான் மண்டலத்தில் கட்டில்கால் வடிவத்தில் காணப்படும்.
பூராடம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்
பூராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த நிர்வாகிகள். இவர்கள் புத்திசாலியாகவும், கர்வமுடையவராகவும், மற்றவர்களுக்கு உதவி செய்பவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் மனதிற்கு பிடித்தமான உணவு வகைகளை ருசித்து சாப்பிடுவார்கள். இவர்களில் பெரும்பாலானோர் எந்த நிறுவனத்தில் பணிபுரிந்தாலும் உயர்ந்த பதவியில் பணிபுரிபவர்கள். தன்னை சார்ந்தவர்களை பேணிகாப்பவர்கள். அழகும், பரந்த மனமும் உடையவர்கள். பயணங்கள் செய்வதில் அதிக விருப்பம் உடையவர்கள். பெண்களை தன்பால் கவர்ந்து இழுப்பதில் வல்லவர்கள். எந்த பிரச்சனை வந்தாலும் அதை எதிர்த்து நின்று பயப்படாமல் நினைத்ததை செயல்படுத்துவார்கள்.
இவர்கள் குணத்துக்கு ஏற்ப மனைவி அமையும். இவர்கள் தான் கொண்ட கருத்தில் உறுதியாக இருப்பார்கள். குழந்தைகள் மற்றும் நண்பர்கள் முலம் இவர்களுக்கு மன மகிழ்ச்சி கிடைக்கும். சுக போகங்களை அனுபவிப்பதில் விருப்பம் உடையவர்கள். பழகுவதில் யாரிடமும் பாகுபாடு காட்ட மாட்டார்கள். வெள்ளந்தியான மனம் கொண்டவர்கள். செல்வாக்கு நிறைந்தவர்கள். தவறு செய்பவர்களை கண்டால் மிக கடுமையாகப் பேசும் குணம் கொண்டவர்கள். வாக்குவாதங்களில் விருப்பம் உடையவர்கள். தன்னை நம்பி வருவோர்க்கு வழிகாட்டியாக திகழ்வார்கள்.
இவர்கள் நுட்பமான அறிவு கொண்டவர்கள். கற்பூர புத்திகார்கள் என்று சொல்வார்களே அது இவர்களுக்கு முற்றிலும் பொருந்தும். எல்லா விஷயத்தையும் எளிதில் கிரகித்து கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள். எந்த விஷயத்தை எடுத்து கொண்டாலும் அதை நுணுக்கமாக ஆராயும் தன்மை உள்ளவர்கள். தாங்கள் ஈடுபடும் காரியம் எதுவாக இருந்தாலும் அதன் முடிவு இவ்வாறு தான் வரும் என்ற முடிவுக்கு வருவார்கள். இவர்களை பேச்சில் மிஞ்ச முடியாது. பொய்யே சொன்னாலும் அதை உண்மை என்று சொல்லும் அளவுக்கு மற்றவர்களை நம்ப வைத்து விடுவார்கள்.
இவர்கள் சரியோ, தவறோ, தான் செல்லும் பாதை தான் சரியென்று நினைப்பார்கள். அடுத்தவர்களின் அறிவுரையை காது கொடுத்து கேட்பதில்லை. என்வழி தனிவழி என்று தனிப்பாதையில் செல்வார்கள். இவர்களுக்கு நிரந்தரமான நண்பர்கள் அமைவதில்லை. பழமையான பொருட்களை சேகரிக்கும் ஆசை உள்ளவர்கள். இவர்களுக்கு பெற்றவர்களின் அன்பு, ஆதரவு அதிகம் கிடைப்பதில்லை. இவர்களில் அதிக பேருக்கு திருமணம் தாமதமாகவே நடக்கும். அப்படி அமையும் வாழ்க்கையிலும் கருத்து வேறுபாடுகள், சண்டைகள், சச்சரவுகள் இருந்து கொண்டே இருக்கும்.
தர்ம சிந்தனை உடையவர்கள். பொறுமையாக இருந்து காரியத்தை சாதிக்கும் திறமை உடையவர்கள். முடிவு எடுப்பதில் வல்லவர்கள். மற்றவர்களுக்கு வழிகாட்டியாக விளங்குவார்கள். இவர்களுக்கு ஆடை ஆபரணங்கள் அணிவதில் அதிக ஆர்வம் இருக்கும். கனிவான பார்வையை கொண்டவர்கள். அழகாக இருப்பதை விரும்புவார்கள். எப்படிப்பட்டவரையும் குணம் கொண்டவரையும் தங்கள் பேச்சு சாமர்த்தியத்தால் கவர்ந்திழுக்கும் ஆற்றல் மிக்கவர்கள். பொறுமையாக இருந்து காரியத்தை சாதிக்க கூடியவர்கள். நல்ல அழகான தோற்ற பொலிவு கொண்டவர்கள்.
காரியங்களை திட்டமிட்டு செயல்படுத்துவதில் வல்லவர்கள். சுத்தமாக இருக்க வேண்டும் என நினைப்பவர்கள். இவர்களுக்கு தோல்வியை தாங்கும் மனப்பக்குவம் கிடையாது. வெளியில் பார்ப்பதற்கு தன்னை தைரியசாலி போல காட்டிக்கொண்டாலும் மனதில் அச்ச உணர்வு இருக்கும். மற்றவர்களிடம் திறமையாக வேலை வாங்குவதில் கில்லாடிகள். பயணங்கள் செய்வதில் விருப்பமுடையவர்கள். தரும சிந்தனை உடையவர்கள். பிடிவாத குணம் கொண்டவர்கள். இவர்களின் 28 வது வயதில் தான் அதிர்ஷ்டமான காலம் ஆரம்பமாகும்.
பூராடம் நட்சத்திரம் முதல் பாதம் :
இவர்களிடம் பூராடம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இவர்கள் தன்னம்பிக்கை மிகுந்தவர்கள். செயல் திண்ணம் உடைய சிறந்த உழைப்பாளிகள். உயர்ந்த குணம் உடையவர்கள். பிறரை நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க மாட்டார்கள். செய்வதை சரியாக செய்ய வேண்டும் என நினைப்பவர்கள். போதுமென்ற மனம் கொண்டவர்கள்.
பூராடம் நட்சத்திரம் இரண்டாம் பாதம் :
இவர்களிடம் பூராடம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். இரக்க குணம் கொண்டவர்கள். எல்லோருக்கும் உதவும் மனம் கொண்டவர்கள். இறை வழிபாட்டில் நம்பிக்கை உள்ளவர்கள். இனிமையான பேச்சுகளை கொண்டவர்கள். சகல சௌபாக்கியங்களும் உடையவர்கள். தனிமையை அதிகம் விரும்பக்கூடியவர்கள். இவர்கள் தன்னை அழகுபடுத்தி கொள்வதில் விருப்பமுள்ளவர்கள். பிறரை கவர்ந்து இழுக்கும் பேச்சு திறமை கொண்டவர்கள்.
பூராடம் நட்சத்திரம் மூன்றாம் பாதம் :
இவர்களிடம் பூராடம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். எதிலும் முன் எச்சரிக்கையுடன் இருப்பார்கள். ஒழுக்கம் மற்றும் நேர்மையுடன் இருக்க விரும்புவார்கள். ஆடம்பர வாழ்வுக்காக எதையும் செய்யக்கூடியவர்கள். ஒழுக்கம், நேர்மை குணம் உடையவர்கள். எதிலும் முன்ஜாக்கிரதை உடையவர்கள். செல்வம் கொண்டவர்கள். இளமையில் தாயின் பிரிவால் வாடுபவர்கள். உடல் பலவீனம் உடையவர்கள். தெளிவான சிந்தனை உடையவர்கள். இவர்கள் தெளிவான சிந்தனை கொண்டவர்கள். எதையும் திட்டமிட்டு செய்வார்கள். அதே சமயம் ஆவேச குணம் கொண்டவர்கள்.
பூராடம் நட்சத்திரம் நான்காம் பாதம் :
இவர்களிடம் பூராடம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் இருக்கும். மேலும், கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். கோபமும் வெறியும் உடையவர்கள். இவர்கள் பிறரை அடக்கி ஆள நினைப்பார்கள். தன்னை வித்தியாசபடுத்தி காட்ட மற்றவர்களிடம் இருந்து விலகியே இருப்பார்கள். இவர்களுக்கு தலைமை குணம் மிகுந்திருக்கும். எளிதில் மற்றவர்களுடன் பழகமாட்டார்கள். தங்களின் காரியத்தைச் சாதிக்க எதையும் செய்யக்கூடியவர்கள். அறிவுரைகளை விரும்பாதவர்கள். தேக வலிமை உடையவர்கள். எடுத்து கொண்ட காரியத்தை முடிக்க தீவிரமாக உழைக்க கூடியவர்கள்.
மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.