திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது ஏன்?
திருமணமான பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவது கணவரின் ஆயுளை மேம்படுத்தும். ஆனால் திருமணம் ஆகாத பெண்கள் குங்குமத்தை வகிட்டில் இடுதல் அவசியம் அற்றது. அபத்தமானதும் கூட. மேலும் சுமங்கலிப் பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அதில் குங்குமம் இடுவதால் தரித்திரம் உண்டாகாது என்பது ஐதீகம்.
கோயில்களில் பெண்களுக்கு குங்குமம் கொடுக்கும் சமயத்தில் பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்குக் கொடுக்க வேண்டும். அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். மற்றபடி, பெண்கள் குங்குமம் வைக்கும்போது, ‘ஸ்ரீயை நமஹ’ அல்லது ‘மகாலட்சுமியே போற்றி’ என்று மனதிற்குள் சொல்லி கொள்வது பல நன்மைகளை அளிக்கும், குடும்பத்தின் செல்வ வளத்தைப் பெருக்கும். அதேபோல, வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது என்பது தருபவர் பெறுபவர் என இருவருக்குமே மாங்கல்யத்தின் பலத்தைப் அதிகரிக்கும்.
குங்குமம் இட்டுகொள்வதால் ஏற்படும் நன்மைகள்
- சுமங்கலிப்பெண்களின் தலை வகிட்டின் நுனியை சீமந்த பிரதேசம் என்பார்கள். அம்பிகையின் வகிட்டில் உள்ள குங்குமம் பக்தர்களுக்கு சேமத்தைக் கொடுக்கும்.
- பெண்கள் எப்பொழுதும் மூன்று இடங்களில் குங்குமம் வைத்துக் கொள்ள வேண்டும். மாங்கல்யம், நெற்றி, முன் வகிடு மத்தி. இது பெண்களுக்கு தெய்வீகப் பண்புகளைப் பெற்றுத் தரும்.
- சுமங்கலிப் பெண்களின் சீமந்த பிரதேசம் ஸ்ரீ மகாலட்சுமியின் இருப்பிடம் சுமங்கலிகளின் சக்தி குங்குமத்தில் நிறைந்துள்ளது.
- வீட்டிற்கு வரும் சுமங்கலிகளுக்கு குங்குமம் கொடுப்பது, தருபவர் பெறுபவர் இருவருக்கும் மாங்கல்யத்தின் பலத்தைப் பெருக்கும்.
- குங்குமம் ஆரோக்கியமான நினைவுகளை தோற்றுவிக்கும். குங்குமம் அணிந்த எவரையும் வசியம் செய்வது கடினமாகும்.
- பெண்கள் குங்குமத்தை தான் இட்டுக் கொண்ட பின்பு தான் மற்றவர்களுக்கு கொடுக்க வேண்டும்.
- அரக்கு நிற குங்குமம் சிவசக்தியை ஒரு சேரக் குறிப்பதாகும். எனவே அரக்கு நிற குங்குமத்தை தானும் வைத்துக் கொண்டு வீட்டிற்கு வருபவர்களுக்கும் கொடுப்பது சிறப்பானதாகும்.
- பெண்கள் நெற்றியில் குங்குமம் வைத்துக் கொள்வதால் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது. மூளைக்குச் செல்லும் நரம்புகள் அதிகமான உஷ்ணத்தை மூளைக்கு அனுப்பாமல், அதை கட்டுப்படுத்தக்கூடிய பகுதி நெற்றி. அந்த நெற்றியில் குங்குமம் இடுவதால் அந்த மூளை சூடு தணிகிறது.
- தெய்வீகத்தன்மை, சுபதன்மை, மருத்துவத்தன்மை உள்ள குங்குமம் அணிவதால் முகம், உடல் மற்றும் மனம் ஆகியவைகளுக்கு அதிக நன்மைகள் உண்டாகும்.
- திருமணமான பெண்கள் நெற்றி நடுவிலும் வகிட்டின் தொடக்கத்திலும் குங்குமம் அணிவது சிறப்பு.
- ஆண்கள் இருபுருவங்களையும் இணைத்தாற் போல் குங்குமம் அணிவது தன்னம்பிக்கையை அதிகரிக்கும்.
- மனித உடலில் தெய்வ சக்தி வாய்ந்தது நெற்றிக்கண். இரண்டு புருவங்களுக்கு நடுவிலுள்ள பகுதி தான் நெற்றி பகுதி . இங்கு பெண்கள் குங்குமத்தை வைப்பதால் அமைதி கிடைக்கும். கோபம் கட்டுப்படும். சாந்த நிலையை உண்டாக்கும்.
- கட்டைவிரலால் குங்குமம் இட்டுக் கொள்வது மிகுந்த துணிவைக் கொடுக்கும்.
- குருவிரலால் (ஆள்காட்டி விரல்) குங்குமம் அணிவது முன்னனித்தன்மை, நிர்வாகம், ஆளுமை போன்றவற்றை ஊக்குவிக்கும்.
- சனிவிரல் (நடுவிரல்) குங்குமம் இட்டுக் கொள்வது தீர்காயுளைக் கொடுக்கும். குங்குமம் அணிவது தெய்வீக தன்மை, உடல் குளிர்ச்சி மற்றும் சுயக் கட்டுபாட்டிற்கு நல்லது.
- பெண்கள் தங்களது முன் வகிட்டில் குங்குமம் இடுவதன் மூலம் மங்களம் ஏற்படுவதாகவும், அவர்களின் கர்ப்பப்பை சம்பந்தமான இயக்கங்கள் சரியாக அமைவதாகவும் முன்னோர்கள் குறிப்பிடப்பட்டுள்ளனர்.
- குங்குமம் இட்டால் புதிய சிந்தனைகளும், உற்சாகமும் தோன்றும். உணர்ச்சியற்ற நரம்புகள் தூண்டப்படுகின்றன. ஹார்மோன்கள் சீராக தூண்டப்படுகிறது.
மற்ற திருமண பொருத்தங்களின் பலன்கள் மற்றும் திருமண சடங்களுக்கான காரணங்கள் அறிய இங்கே க்ளிக் செய்யவும்.