ஊர்வன விலங்குகள் கனவில் வந்தால்
‘சொப்பன சாஸ்திரம்’ என்னும் புத்தகம் கனவுகளை பற்றி விளக்கும்போது ‘நினைவுகளின் கற்பனை வடிவம்தான் கனவு’ என்றும், ‘மனதின் அடித்தளத்தில் புதையுண்டு இருக்கும் நினைவுகளின் வெளிப்பாடே கனவுகள்’ என்றும் சொல்கிறது. அதன்படி ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் சொல்லப்பட்டுள்ளது. அந்த வகையில் ஊர்வன விலங்குகள் கனவில் வந்தால் என்ன மாதிரியான பலன்கள் ஏற்படும் என்பதை பின்வருமாறு பார்ப்போம்,
பல்லி கனவில் வந்தால்
1. பல்லி ஊர்ந்து செல்வது போல கனவு கண்டால் தொழிலில் உயர்வு ஏற்படும் என்று அர்த்தம்.
2. இரண்டு பல்லிகள் இணைவது போல கனவு கண்டால் வீட்டில் நல்லது நடக்க போகிறது என்று அர்த்தம்.
3. இரண்டு பல்லிகள் சண்டை போடுவது போல கனவு கண்டால் குடும்பத்தில் பிரச்சனைகள் ஏற்பட போவதன் அறிகுறியாகும்.
4. பல்லி உங்கள் கனவில் வந்தால் நீங்கள் வகித்து வரும் பதவிக்கு ஆபத்து ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
எறும்பு கனவில் வந்தால்
1. எறும்பு ஊர்வதை போல கனவு கண்டால் பதவி உயர்வு ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
2. எறும்புகள் வரிசையாக கூட்டமாக செல்வது போல கனவு வந்தால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும் என்று அர்த்தம்.
3. எறும்புகள் சர்க்கரையை சாப்பிடுவது போலவே அல்லது உணவை சுமந்து செல்வது போல கனவு வந்தால் நீங்கள் சேமித்து வைத்த பொருள்கள் சிறிது சிறிதாக கரையும் என்று அர்த்தம்.
4. எறும்புகளை கூட்டமாக கனவில் கண்டால் மன கஷ்டம், பொருள் நஷ்டம் உண்டாகும் என்று அர்த்தம்.
தேள் கனவில் வந்தால்
1. தேள் உங்கள் கனவில் வந்தால் ஒரு பெரிய கண்டத்திலிருந்து தப்பித்து விட்டீர்கள் என்று அர்த்தம்.
2. தேள் உங்களை கொட்டி விட்டது போல கனவு கண்டால் நீங்கள் மேற்கொண்ட காரியத்தில் காரிய சித்தி ஏற்படும் என்று அர்த்தம்.
பாம்பு கனவில் வந்தால்
1. பாம்பு படம் எடுத்து ஆடுவது போல கனவு கண்டால் பொருள் விரயம் ஏற்படும் என்று அர்த்தம்.
2. பாம்பு புற்று கனவில் வந்தால் உங்களுக்கு இன்பம் உண்டாகும் என்று அர்த்தம்.
3. பாம்பு உங்கள் மேல் ஏறி செல்வது போல கனவு கண்டால் உங்களுக்கு உள்ள பிரச்சனைகள் படிப்படியாக குறையும் என்று அர்த்தம்.
4. சாரைப்பாம்பு உங்கள் கனவில் வந்தால் நிறைய எதிரிகள் நண்பண் என்ற போர்வையில் உங்கள் அருகில் உள்ளார்கள் என்று அர்த்தம்.
5. நல்ல பாம்பு கனவில் வந்தால் எதிரிகளால் தொல்லை ஏற்படும் என்று அர்த்தம்.
6. நல்ல பாம்பை நீங்கள் கொல்வது போல கனவு கண்டால் எதிரிகளின் தொல்லை குறையும் என்று அர்த்தம்.
7. நல்ல பாம்பை நீங்கள் துரத்துவது போல கனவு வந்தால் உங்கள் வறுமை நிலை நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும் என்று பொருள்.
8. நல்ல பாம்பு உங்களை துரத்துவது போல கனவு கண்டால் பெரிய துன்பம் உண்டாக போகிறது என்று அர்த்தம்.
9. ஒரே ஒரு நல்ல பாம்பைக் கனவில் கண்டால் நம்முடைய விரோதிகளால் தொல்லை ஏற்படும் என்று அர்த்தம்.
10. இரண்டு பாம்புகளை ஒரே நேரத்தில் கனவில் கண்டால் உங்களுக்கு நன்மை உண்டாக போகிறது என்று பொருள்.
11. பாம்பை கொல்வது போல கனவு வந்தால் உங்களுக்கு விரோதிகளால் இதுவரை ஏற்பட்ட தொல்லைகள் நீங்கும் என்று அர்த்தம்.
12. திருமணம் ஆகாதவர்களுக்கு பாம்பு கடித்து ரத்தம் வருவது போல் கனவு கண்டால், சீக்கிரம் திருமணம் நிகழும். திருமணம் ஆனவருக்கு செல்வம் வந்து சேரும் என்று அர்த்தம்.
13. பாம்பு கடித்து விட்டது போல கனவு வந்தால் தனலாபம் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.
14. பாம்பு உங்களின் காலை பின்னிக்கொள்வது போல் கனவு கண்டால் உங்களை சனி பிடிக்கப் போகிறது என்று அர்த்தம்.
15. பாம்பு கடித்து விட்டது போலவும், கடித்த இடத்தில் இருந்து ரத்தம் வருவது போலவும் கனவு கண்டால் உங்களை பிடித்த சனி விலகிவிட்டது என்று பொருள்.
16. பாம்பு கழுத்தில் மாலை போல விழுவதாக கனவு கண்டால் நீங்கள் செல்வந்தர் ஆக போகிறீர்கள் என்று பொருள்.
17. பாம்பு வேகமாக செல்வது போல் கனவு கண்டால் நன்மை ஏற்பட போகிறது என்று அர்த்தம்.