9ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

9ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள்

9ம் எண்ணின் அதிபதி செவ்வாய் பகவனாவார். 9, 18, 27 தேதிகளில் பிறந்தவர்கள் 9ம் எண்ணின் அதிபதியாகிய செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். எண் கணிதத்தில் அதிக வல்லமையும், சக்தியையும், கொண்ட ஒரு எண் ஒன்பதாம் எண் ஆகும்.

9ம் எண் குணநலன்கள்

9ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

இவர்கள் எதிலும் போராடி வெற்றி பெறக்கூடியவர்கள். இவர்களிடம் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகம் உண்டு. இவர்களின் வாழ்க்கையில் பெரும் பகுதி போராட்டத்திலேயே கழியும். இவர்கள் தாய்நாட்டின் மீதும், தன் இனத்தின் மீதும், மொழியின் மீதும் அதிக பற்றையும், விசுவாசத்தையும் உடையவர்கள். மற்றவர்களுக்கு உதவுவதில் என்ன சிக்கல் வந்தாலும் அவற்றை முறியடித்து அவர்களுக்கு தேவையானதை செய்து கொடுப்பார்கள்.

சண்டை, யுத்தக்களம் போன்ற இடங்களில் இவர்களைப் பெரும்பாலும் பார்க்கலாம். மேலும் அதிகாரமிக்க காவல்துறை, இராணுவம் ஆகியவற்றில் மிகவும் விருப்பம் உடையவர்கள். மற்றவர்கள் பயப்படும் காரியங்களைத் துணிந்து ஏற்றுக் கொள்வார்கள். துணிவே துணை என்று நடை போடுவார்கள். இவர்களுக்கு முன்கோபமும் படபடப்பும் சற்று உண்டு.

இவர்களுக்குக் கோபம், ரோஷம், தன்மானம் ஆகிய மூன்று குணங்களும் சற்று அதிகம். எனவே இவர்களுக்கு ஏதேனும் ஒரு எதிர்ப்பு இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் எந்த தொழிலாக இருந்தாலும், எந்த பதவியில் இருந்தாலும், நிர்வாகத்திலும் வல்லவர்கள். சாகச விரும்பிகளான இவர்கள் மலை ஏறுதல், ஆறு மற்றும் கடலில் எதிர் நீச்சல் அடிக்கும் அளவிற்கு மன தைரியமும், துணிவும் கொண்டவர்கள்.

அரசாங்க வேலையாக இருந்தாலும், தனியார் துறையில் இருந்தாலும் இவர்கள் தான் பெரும்பாலும் தலைமைப் பதவியில் இருப்பார்கள். எந்தவொரு செயலிலும் இருக்கக்கூடிய சூட்சுமங்களை எளிதில் அறிந்து கொள்வார்கள். இவர்கள் கடின உழைப்பாளிகள். சோம்பலாக இருப்பதை வெறுப்பார்கள். ஊர் சுற்றுவதிலும் அலாதிப் பிரியம் உடையவர்கள். எதற்கும் கட்டுப்படாத இவர்களை அன்பும், பாசமும் மட்டுமே கட்டுபடுத்தும்.

தங்களுடைய எண்ணங்களையும், கருத்துக்களையும் எல்லோரும் ஏற்று நடக்க வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள்.
இவர்களின் குணத்தால், குடும்பத்தில் அடிக்கடி குடும்பப் பிரச்சனைகள் ஏற்படும். தங்களை எல்லோரும் மதிக்க வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். தான் உயர்ந்தவன் என்ற நினைப்பு இவர்களுக்கு எப்போதும் உண்டு. மற்றவர்கள் தன்னை பாராட்ட வேண்டும் என்ற எண்ணம் உடையவர்கள். எந்தவொரு பொருளையும் அமைதியான முறையில் கிடைத்துவிட்டால் இவர்களிடம் அந்த பொருளுக்கான மதிப்பு என்பது குறைவுதான். மனதில் அதிக தீவிரத்தன்மை இருந்தாலும் இவர்களின் முகம் அமைதியாக இருக்கும்.

உடலமைப்பு

இவர்கள் கட்டுமஸ்தான உடலும், சராசரி உயரமும் கொண்டிருப்பார்கள். சதைப்பற்றான உடலினை உடையவர்கள். எப்போதும் வேகமாக நடக்கக்கூடியவர்கள். நீண்ட மூக்கினை உடையவர்கள். அமைதியான முகமும், ஆவலும், எதிர்பார்ப்பும் கொண்ட பார்வையும் கொண்டிருப்பார்கள். முகத்தில் வடுக்களும், சிறுசிறு குழிகளும் காணப்படும்.

இவர்களின் இடுப்பு மிகவும் உறுதியாக அமைந்திருக்கும். பரந்த மார்பும், பெரிய தோள்பட்டையும் கொண்டிருப்பார்கள். எலும்பும், நரம்பு மண்டலமும் வலிமை பெற்றதாக இருக்கும். கருமையான முடியை கொண்டிருப்பார்கள். மார்பு, வயிறு திரண்ட சதை அமைப்புகளுடன் காணப்படுவதால் இவர்கள் பலசாலியாக காட்சியளிப்பார்கள். பார்ப்பதற்கு அழகிய வடிவமும், செந்நிறமான தோற்றமும் கொண்டிருப்பார்கள். நீண்ட, நெடிய கால்களை கொண்டவர்கள்.

குடும்பம் உறவுகள்

இவர்களுக்கு பெற்ற அன்னையின் ஆதரவு சரியாக கிடைக்காது. உடன்பிறந்தவர்கள் மேல் இவர்களுக்கு பாசம் அதிகம். இவர்கள் எதிலும் முன் யோசனையுடன் திட்டங்களை தீட்டி செயல்பட்டால் குடும்ப வாழ்வில் முன்னேற்றமும், மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும்.

நண்பர்கள்

3, 6, 9 ஆகிய எண்களை கொண்டவர்கள் இவர்களுக்கு நல்ல நண்பர்களாகவும், கூட்டாளிகளாகவும் அமைவார்கள். 1-ம் தேதி பிறந்தவர்களின் உதவி நடுத்தரமானதுதான். 2, 8 எண்காரர்களின் நட்பையும், கூட்டையும் தவிர்த்துவிட்டால் பல நஷ்டங்களை எதிர்காலத்தில் தவிர்த்துக் கொள்ளலாம்.

திருமண வாழ்க்கை

ஒன்பதாம் எண்காரர்களுக்கு நல்ல குணமுள்ள வாழ்க்கைதுணை அமையும். இந்த எண்ணில் பிறந்த பெண்களுக்கு கீர்த்தியும், செல்வாக்கும் தொழில் வளமும் உடைய ஆண்மகன் கணவனாக அடைவார்கள். இவர்கள் தாம்பத்தியத்தில் மகுந்த விருப்பமும், வேகமும் உடையவர்கள். இல்லற வாழ்க்கையில் கணவன், மனைவி இருவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு தொழில் சார்ந்த துறையிலேயே அல்லது ஏதாவது ஒரு துறையில் முன்னேற்றமும், செல்வ நிலையையும் அடைவார்கள்.

திருமணத்தில் அம்மியை ஏன் மிதிக்கிறார்கள்

இவர்களின் வாழ்க்கையில் படிப்படியான முன்னேற்றம் இருந்து கொண்டே இருக்கும். குடும்ப வாழ்க்கையின் முதலில் பலவித துன்பங்களை கடந்த பின் சில புரிதல்களும், மாறுதல்களும் ஏற்படும். திருமண வாழ்க்கை அமைதியாக இருந்தாலும் இவர்களின் முன் கோபத்தினால் அவ்வப்போது புயல் போல பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கும். தன்னை நம்பியிருக்கும் தம் துணைவியாரின் மீது எப்பொழுதும் அக்கறையும், கவனமும் கொண்டிருப்பார்கள்.

தொழில் வியாபாரம்

கடுமையான உழைப்பாளிகளான இவர்கள் உழைப்பாலும், விடாமுயற்சியாலும் தான் மேற்கொள்ளும் வியாபாரத்தில் புதிய சாதனைகள் படைக்கக்கூடியவர்கள். காவியம் இயற்றுதல், ஓவியம் வரைதல், கட்டுமானம் தொடர்பான பணிகள், அரசியல் மற்றும் சட்டம் தொடர்பான செயல்பாடுகள், சமூகப்பணிகள் போன்றவற்றின் மூலம் இவர்களுக்கு முன்னேற்றம் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.

நேர்மையான செயல்பாடுகள் மற்றும் வழிமுறைகளின் மூலம் மேற்கொள்ளும் தொழில்கள் யாவும் இவர்களுக்கு எதிர்பார்த்த வெற்றியை அளித்துக் கொண்டே இருக்கும். இரும்பு தொடர்பான தொழில்கள், சாகசம் நிறைந்த தொழில்களின் மூலம் பிரபலம் அடைவார்கள்.

கனிவான பேச்சுக்கள் மற்றும் அனைவரையும் கவரும் முகபாவனைகளின் மூலம் பொதுமக்களிடம் தனக்கென்று ஒரு தனி இடத்தை பெறுவார்கள். ராணுவம், காவல்துறை மற்றும் சீருடை தொடர்பான பணிகளில் இவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். மருத்துவம் சார்ந்த துறைகளில் தனித்தன்மையுடன் செயல்படுவார்கள். அதிலும் ரண சிகிச்சைகளில் சிறப்பாக இவர்களுக்கு என்று ஒரு தனி இடத்தை உருவாக்கிக் கொள்வார்கள்.

கலை துறைகளான சினிமா, நாடகம் மற்றும் மக்கள் தொடர்பு துறைகளான பத்திரிக்கை, ரேடியோ, தொலைத்தொடர்பு துறை, தொலைக்காட்சி துறை போன்ற துறைகளில் தொழில்நுட்ப கலைஞராக சிறந்து விளங்குவார்கள். கட்டிடத் துறை, மின்சாரத் துறை, விளையாட்டுத் துறை, வாழை, மொச்சை, சிவப்பு தானியம் போன்றவை உற்பத்தி, உரம் சம்பந்தப்பட்ட தொழில்கள், தச்சு வேலை போன்ற தொழில்கள் அனைத்தும் இவர்களுக்கு வெற்றி தரும். விளையாட்டு வீரர்கள். மலையேறும் வல்லுநர்கள் போன்றவையும் வெற்றி தரும். ஆன்மிகத்திலும் சிலர் தீவிரமாக, முழுமையான மனதுடன் ஈடுபடுவார்கள். சிலர் தொண்டு நிறுவனங்களையும் தொடங்கி, நன்கு நிர்வகிப்பார்கள்.

அதிர்ஷ்ட தினங்கள்

ஒவ்வொரு மாதமும் 9, 18, 27 ஆகிய நாட்களும், 6, 15, 24 ஆகிய நாட்களும் மிகவும் சிறப்பானவை! எனவே கூட்டு எண்கள் 6 மற்றும் 9 வரும் நாட்களும் இவர்களுக்கு மிகவும் சாதனமானவை. 1, 10, 19, 28 மற்றும் எண் 1 வரும் நாட்களும் நடுத்தரமான பலன்களையே கொடுக்கும். ஒவ்வொரு மாதத்திலும் 2, 11, 20, 29 நாட்களும் கூட்டு எண் 2 வரும் நாட்களும் துருதிர்ஷ்டமானவை! இந்த தினங்களில் எந்தச் செயலும் தொடங்கக் கூடாது.

பிறந்த தேதி பலன்

அதிர்ஷ்ட இரத்தினம், உலோகம்

இவர்களுக்குப் பவளம் (CORAL) மிகவும் ஏற்றது. இரத்தக் கல் (BLOOD STONE) மிகவும் ஏற்றது. மேலும GARNET எனப்படும் இரத்தினக் கல்லும் மிகவும் நன்மை தரும்.

அதிர்ஷ்ட நிறங்கள்

இவர்களுக்கு கருஞ்சிவப்பு, நீலம், சிவப்பு ஆகிய நிறங்கள் நன்மை பயக்கும். ஆனால் கரும்பச்சை, கருப்பு மற்றும் வெள்ளை நிறங்கள் துரதிஷ்டமானவை.

ஆரோக்கியம்-நோய்

வெங்காயம், வெண்பூண்டு, புளிச்சக்கீரை, மிளகு, இஞ்சி, சேப்பங்கிழங்கு, கருணைக்கிழங்கு, வெண்டைக்காய் மற்றும் பல வகையான பழ வகைகள் இவர்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும், மேன்மையையும் உருவாக்கும். தர்பூசணி, இளநீர், மோர் போன்ற உணவுகளை அதிக அளவில் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் உஷ்ணம் தொடர்பான பிரச்சனைகள் குறையும்.

இவர்களின் உடல் அமைப்பு எப்பொழுதும் சூடாகவே இருக்கும். உடல் சூட்டின் காரணமாக வயிற்று பிரச்சனைகள் ரத்தத்தில் சிறு பாதிப்புகளும் ஏற்படும். வாரந்தோறும் எண்ணெய் குளியல் அல்லது ஆறு, ஏரி, குளம் ஆகிய நீர் நிலைகளில் குளிப்பதன் மூலம் உஷ்ணம் தொடர்பான பிரச்சனைகள் மற்றும் கண் பிரச்சனைகள் குறையும்.

மூல பௌத்திர வியாதி, இரத்தக் கட்டிகள், குடற்புண்கள், அம்மை, ஜுரம், நெருப்புக் காயங்கள், கண்களில் உஷ்ணம் தொடர்பான பிரச்சனைகளால் இவர்கள் அதிகம் பாதிக்கப்படுவார்கள். இந்த எண் ஆதிக்கம் உடையவர்கள் பலர் ரத்த அழுத்த நோய்க்கு ஆட்படுகிறார்கள்.

தேதி வாரியாக பொதுவான பலன்கள்

9-ம் தேதி பிறந்தவர்கள்

இவர்கள் வாழ்க்கையில் எதிர் நீச்சல் போட்டு முன்னேறுபவர்கள். எளிதில் உணர்ச்சி வசப்படுவார்கள். சுதந்திரமான எண்ணங்கள் நிறைந்தவர். புதிய காரியங்களைச் செய்ய வேண்டும் என்ற ஆசை கொண்டவர்கள். மற்றவர்களை அடக்கி ஆள விரும்புவார்கள். உற்றார், உறவினர்களிடம் கூட அடிக்கடி சண்டை போடு குணம் கொண்டவர்கள்.

18-ம் தேதி பிறந்தவர்கள்

போராட்டமே இவர்களின் வாழ்க்கையாக இருக்கும். இவர்கள் மற்றவர்களின் எச்சரிக்கையைப் பொருட்படுத்தமாட்டார்கள். எதையும் தங்களின் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வரவே விரும்புவார்கள். பேச்சுத் திறமை அதிகம் உண்டு. கட்டப் பஞ்சாய்த்து செய்யும் குணம் கொண்டவர்கள். அவசரம், பிடிவாதம், சுயநலம் ஆகியவற்றை விட்டுவிட்டால், இவர்கள் பெரும் சாதனைகளைப் படைக்கலாம்.

27-ம் தேதி பிறந்தவர்கள்

இவர்கள் அறிவும், ஆற்றலும் நிறைந்தவர்கள். பலர் இராஜ தந்திரிகளாகவும் விளங்குவார்கள். சமூகத்தில் இவர்களுக்கு நல்ல செல்வாக்கு நிச்சியம் கிடைக்கும். இவர்களது திட்டங்கள் எல்லாம் நிச்சயம் வெற்றி அடையும். மனம் தளராமல் உழைப்பவர்கள். ஆன்மிகத்தில் ஈடுபாடு கொண்டவர்கள். நல்ல செயல்களின் மூலம் பேரும், புகழும் அடைவார்கள். சுதந்திர மனப்பான்மை உண்டு. நிதானமாக, அவசரப் படாமல் செயல்பட்டு வெற்றியைச் சீக்கிரம் அடைவார்கள். ஒரு தடவைக்கு இரண்டு தடவை யோசித்தே காரியங்களில் ஈடுபடுவார்கள்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

prawn recipes

இறால் குழம்பு

இறால் குழம்பு தேவையான பொருட்கள் இறால் – ½ கிலோ உருளைக்கிழங்கு -  1 ( பெரியது ) முருங்கைக்காய் - 1 கொத்தமல்லி – சிறிதளவு மிளகாய் தூள் -  2 ஸ்பூன் ...
சர்க்கரை நோய் வர காரணம்

இந்த 4 பொருட்கள் வீட்டில் இருந்தால் போதும், இரத்த சர்க்கரை அளவை நீங்களே சுலபமாக குறைக்கலாம்

சர்க்கரை நோய்  இன்றைய காலகட்டத்தில் நீரிழிவு நோய் என்பது வீட்டில்  ஒருவருக்கு கண்டிப்பாக இருக்கும் என்ற நிலை ஏற்பட்டுவிட்டது. இதற்கு காரணம் மாறி வரும் வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கம். நாகரீகம் என்ற பெயரில் நம்...
ஆப்பிள்

இளமையைத் தக்க வைக்கும் 6 பழங்கள்

இளமையைத் தக்க வைக்கும் 6 பழங்கள் நம் உடலை இளமையாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள பழங்கள் சாப்பிடுவது மிக அவசியமான ஒன்றாகும். பழங்கள் பல வகையான ஊட்டச்சத்துக்களை தன்னுள் கொண்டுள்ளது. பழங்களை நாம் உட்கொள்வதால்...
பஞ்சமி திதி பலன்கள்

பஞ்சமி திதி பலன்கள், பஞ்சமி திதியில் செய்ய வேண்டியவை

பஞ்சமி திதி பஞ்ச என்பது ஒரு வடமொழி சொல்லாகும். பஞ்ச என்றால் ஐந்து என்று அர்த்தம். அமாவாசை மற்றும் பௌர்ணமி நாளிலிருந்து ஐந்தாவது நாள் பஞ்சமி திதியாகும். அமாவாசைக்கு அடுத்து வரும் பஞ்சமியை சுக்கில...
ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் ரோகிணி நட்சத்திரத்தின் இராசி : ரிஷபம் ரோகிணி நட்சத்திரத்தின் அதிபதி : சந்திரன் ரோகிணி நட்சத்திரத்தின் இராசி அதிபதி : சுக்கிரன் ரோகிணி நட்சத்திரத்தின் அதிதேவதை : பிரம்மா ரோகிணி நட்சத்திரத்தின் பரிகார தெய்வம்...
வீட்டில் எங்கு விளக்கு ஏற்ற வேண்டும்

வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டிய இடங்கள்?

வீட்டில் விளக்கு ஏற்ற வேண்டிய இடங்கள்? தீபம் ஏற்றி வழிபடுவது இந்துக்களின் வழிபாட்டில் முக்கியமான ஒன்றாகும். ஒளி நிறைந்துள்ள இடத்தில் தான் அதிக நேர்மறை ஆற்றல்கள் நிறைந்திருக்கும். தினந்தோறும் வீட்டில் காலையும், மாலையும் விளக்கேற்றி...

30 வயதை கடந்த பெண்களா நீங்கள் ?  அப்போ இந்த பதிவை கண்டிப்பா பாருங்க.

பெண்களின் வாழ்க்கை முறை   பெண்கள் தங்களது அன்றாட வாழ்க்கையில் பல வேலைகளை செய்கின்றனர். குழந்தைகளை கவனித்துக்கொள்வது, வீட்டு வேலைகளை செய்வது, சமைப்பது, வீட்டை நிர்வகிப்பது என பல்வேறு பொறுப்புகளை சுமந்து செல்கின்றனர். அதிலும் வேலைக்கு...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.