8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள்

8ம் எண் சனி பகவானுக்குரிய எண்ணாகும். 8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 8ஆம் எண்ணின் அதிபதியாகிய சனியின் ஆதிக்கத்தில் பிறந்தவர்களாவார்கள்.

8ம் எண் குணநலன்கள்

8ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

எட்டாம் எண் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள். எந்த செயலையும் அவசரமகாவோ, பரபரப்பாகவோ செய்ய மாட்டார்கள். எதிலும் நிதானத்தை கடைபிடிப்பார்கள். எதையும் எளிதில் உள்வாங்கி கொள்ளும் ஆற்றல் கொண்டவர்கள் ஆவார்கள். நியாய, அநியாயத்தை யாராக இருந்தாலும் பயமின்றி தெளிவாக எடுத்துரைப்பார்கள். எந்த பிரச்சனை என்றாலும் சமரசமாக போகவே விரும்புவார்கள்.

இவர்கள் மனத்தில் ஏதாவது ஒரு சோகம் எப்போதும் குடிகொண்டிருக்கும். மனதில் நிம்மதியில்லையே என்று அலைவார்கள். “பாசமாவது ஒன்றாவது. அது தெருவில்தான் கிடைக்கும்” என்று புலம்புவார்கள். ஏதாவது ஒரு பெரிய குறை அல்லது குறைபாடு மனதை அரித்துக்கொண்டே இருக்கும். குழந்தையில்லை, மனைவியால் இன்பமில்லை. நண்பனால் சுகமில்லை என்று எதையாவது நினைத்துத் தங்களை தாங்களே வருத்திக் கொள்வார்கள்.

இவர்கள் சுகத்தையும், துக்கத்தையும் சரிசமமாக பாவிப்பார்கள். எதையும் நன்கு ஆராயும் மனதை உடையவர்கள். எந்த துறையில் ஈடுபட்டாலும் அதில் தான் முழு ஆதிக்கத்தை செலுத்துவார்கள். சாமர்த்தியசாலிகளான இவர்கள் எல்லா காரியங்களிலும் வெற்றி காண்பார்கள். இவர்கள் எந்த இடத்திற்கு சென்றாலும் அந்த இடத்திற்கு தகுந்தாற்போல் தங்களை மாற்றி கொள்வார்கள்.

தெய்வ நம்பிக்கை இவர்களிடம் அதிகம் உண்டு. இவர்களில் ஒரு சிலர் கடவுளே இல்லை என்பார்கள். வேறு சிலர் கடவுளே கதி என்று கிடப்பவர்கள். எடுத்துச் கொண்ட காரியங்களை எவ்வளவு எதிர்ப்புகளும் தடைகளும் வந்தாலும், அவைகளைப பற்றிக் கவலைப்படாமல் செய்து முடிப்பார்கள். பிடிவாத குணம் கொண்டவர்கள். இவர்கள் மற்றவர்கள் பார்வைக்குக் கடின மனமும், பிடிவாதமும் உடையவராகத் தோன்றினாலும், சமூகத்தில் பாதிக்கப்பட்டோரைக் கண்டால், அவர்களை ஆதரிப்பார்கள்.

இவர்களுக்கு எப்பொழுது எப்படி கோபம் வரும் என்று யாராலும் கூற முடியாது. பிடிவாத குணம் இவர்களிடம் அதிகம் உண்டு. சேமிப்பு என்பது இவர்களுக்கு குறைவாகவே இருக்கும். மற்றவர்களுக்கு உதவும் எண்ணம் கொண்டவராதலால் மற்றவர்கள் மூலம் கடன்கள் ஏற்படக்கூடிய வாய்ப்பு இவர்களுக்கு உண்டு. மற்றவர்களை துல்லியமாக எடை போடுவதில் திறமைசாலிகள்.

எந்த காரியங்களை எடுத்துக் கொண்டாலும் இருவிதங்களில் ஆதாயம் அடைவார்கள். எதையும் கூர்ந்து ஆராய்ந்து பார்ப்பார்கள். ஆதலால் எந்த காரியத்திலும் அதன் சாதகப்பலனை பார்த்த பின்தான் செயலில் ஈடுபடுவார்கள். எதிலும் பிரதிபலன் எதிர்பாராது உழைத்திடும் இவர்கள் தெய்வத்தை கூட உழைப்பிற்கு அடுத்தப்படியாகத்தான் நினைப்பார்கள். சிரித்து பேசும் சுபாவம் கொண்ட இவர்களுக்கு, மற்றவர்களை சிரிக்க வைக்கக்கூடிய ஆற்றலும் உண்டு. இவர்களுக்கு வாழ்வில் எவ்வளவு சோதனைகள் நேர்ந்தாலும் வேதனை அடையமாட்டார்கள்.

உடலமைப்பு

இவர்கள் உயரமாக இருப்பார்கள். சதை பற்றான கன்னங்கள் இருக்கும். கண்கள் உள்நோக்கி காணப்படும். கழுத்து நீண்டு உறுதியுடன் இருக்கும். நரம்புகள் படர்ந்து இருக்கும். குரலில் கவர்ச்சியும், வளமும் அவ்வளவு இருக்காது. கருமையான முடியும், நீல நிற கண்களுடன் இருப்பார்கள். நடையில் சோம்பல் தன்மை இருக்கும். தலைமுடி அடர்த்தியாகவும், சிலருக்கு சுருண்டும் காணப்படும்.

குடும்பம் உறவுகள்

குடும்ப வாழ்க்கை சிறப்பாக இருக்கும். குடும்பத்தின் மீது அதிக அக்கறை கொண்டவர்களாக இருப்பார்கள். வாழ்வில் சுக துக்கங்கள் மாறி மாறி வந்தாலும் எதையும் சமாளிக்கக்கூடிய ஆற்றல் பெற்றிருப்பார்கள். மத்திய வயதில் இருந்தே எல்லா சுகங்களையும் அனுபவிப்பார்கள்.

நண்பர்கள்

பொதுவாக 1, 4 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களை நண்பர்களாக வைத்துக் கொள்ளலாம். 6, 5 தேதியில் பிறந்தவர்களாலும் ஆதரவுகள் கிடைக்கப் பெறுவீர்கள். இவர்கள் நண்பர்கள் வட்டம் பெரிதாக இருந்தாலும் யாரையும் நிரந்தர நண்பர்களாக வைத்துக் கொள்ள மாட்டார்கள்.

இவர்கள் பகுத்தறிவு கருத்துக்களை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். யாரையும் அவ்வளவு எளிதில் நம்பிவிட மாட்டார்கள். செய்தொழிலில் கூட்டாளிகளை அடிக்கடி மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இவர்களுக்கு நிரந்தர நட்பும் கிடையாது, விரோதியும் கிடையாது.

திருமண வாழ்க்கை

இந்த எட்டு எண் ஆதிக்கத்தில் பிறந்த பெண்களில் சிலர் நல்ல கவர்ச்சியாக அழகுடன் இருப்பார்கள். கணவன், மனைவி இருவரும் கடுமையாக உழைத்து வாழ்வில் உன்னத நிலையை அடைவார்கள். காதல் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏமாற்றம் ஏற்படும்.

அம்மி மிதித்தல் அருந்ததி பார்த்தல்

இவர்களுக்கு அமையும் வாழ்க்கைத்துணை மிகவும் சிக்கனமானவராகவும், எதிர்த்து பேசாத குணம் கொண்டவராகவும் இருப்பார். கணவன், மனைவி இருவரும் நல்ல தான, தர்ம காரியங்களில் ஈடுபடுவார்கள். பெண் குழந்தைகளை பெற்றெடுத்து மனித குலத்திற்கு பெருமை சேர்ப்பார்கள்.

தொழில், வியாபாரம்

இவர்கள் பொறியாளர், லேத் தொழில்கள், லாரி, பஸ் தொடர்பான தொழில்கள், எண்ணெய் மில்கள், இரும்பு வியாபாரம், ஆன்மிகம், விவசாயம், கட்டிடங்கள் கட்டுதல், ஆராய்ச்சி தொழில், பேச்சாளர்களாகவும் இவர்கள் இருப்பார்கள்.

மதப்பிரசங்கம், சுரங்கம் தொடர்பான பணிகள், கிரானைட் கற்கள், கடப்பாக்கற்கள் வியாபாரம், கம்பளி துணிகள், ஆயுதங்கள், சோப்பு வியாபாரம், வைத்திய தொழில்கள், சிறைத்துறை தொடர்பான தொழில்கள், கடலை, எள்ளு, கம்பு, மலை வாழை, புகையிலை, மூங்கில், கீரை வகைகள் போன்ற தொழில்களை மேற்கொள்ளலாம்.

மரம், விறகு, கரி, உதிரி பாகங்கள் விற்பனையகம், கட்டிட வேலை மேஸ்திரி, தபால் துறை, துப்பறியும் துறை, அச்சுத் தொழில், பைண்டிங் தொழில்கள், நில ஆராய்ச்சி, பிராணிகள் வளர்ப்பு, வாகன ஓட்டுநர், தோல், செருப்பு, ஏற்றுமதி, இறக்குமதி தொழிலும் இவர்களுக்கு சாதகமாக அமையும். விவசாய முதலாளிகளும், தொழிலாளிகளும் இவர்களே. இவர்களில் பலர் பெரிய தொழிலதிபதிர்களாகவும் வெற்றி பெறுவார்கள்.

அதிர்ஷ்ட தினங்கள்

இவர்களுக்கு ஒவ்வொரு மாதத்திலும் வரும் 1, 10, 19, 28 ஆகிய நாட்கள் மிகச் சிறந்தவை. 8ம் எண்ணின் தீய குணங்களை 5ம் எண் மட்டுமே போக்கும் வல்லமை படைத்தது. எனவே, 5, 14, 23 ஆகிய நாட்களும் இவர்களுக்கு நன்மையே புரியும். எனவே கூட்டு எண் 1 மற்றும் 5 வரும் நாட்கள் மிகவும் அதிர்ஷ்டமானவை. 4, 13, 22, 31 நாட்களில் நல்லவை தாமாகவே நடக்கும். ஒவ்வொரு மாதத்திலும் 8, 17, 26 ஆகிய நாட்களும், 2, 11, 20, 29 நாட்களும் கெட்ட பலன்களையே கொடுக்கும். கூட்டு எண் 8 மற்றும் 2 வரும் நாட்களைத் தவிர்க்க வேண்டும்.

அதிர்ஷ்ட இரத்தினம், உலோகம்

இவர்களுக்கு நீலக்கல் (Blue Sapphire) மிகவும் அதிர்ஷ்டமானது.

அதிர்ஷ்ட நிறங்கள்

இவர்களுக்கு மஞ்சள் நிறம் அதிர்ஷ்டத்தை வழங்கும். கரும் பச்சை, நீலம் ஆகியவை நன்மை தரும். மற்றவர்களை சந்திக்கச் செல்லும்போது எப்போதும் நீலநிறம் மற்றும் மஞ்சள் நிற ஆடைகள் சிறந்தவை. கருப்பு, மற்றும் கரும்சிவப்பு ஆகிய நிறங்களைத் தவிர்க்க வேண்டும்.

ஆரோக்கியம்-நோய்

சிறு வயதுகளில் வயிற்றுவலி பெரும்பாலோர்க்கு இருக்கும். ஆஸ்த்துமா, மூச்சு விடுதல் பிரச்சனை அடிக்கடி உண்டு. தலைவலி, கிறுகிறுப்பு ஆகியவற்றால் அடிக்கடி பாதிக்கப்படுவார்கள். இவர்களுக்கு குடல் சம்பந்தப்பட்ட ஜீரண உறுப்புகளால் தொல்லைகள் ஏற்பட்டு மறையும். எளிதில் ஜீரணமாகும் உணவு வகைகளை உட்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் இவர்கள் இந்த தொந்தரவுகளில் இருந்து நீங்க கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்வது நல்லது. நீர் பானங்கள், தேன், பேரீச்சம்பழம் உடலை வலுவடைய செய்யும்.

பித்தம் சம்பந்தமான தலை சுற்றல், தலை பாரம், கிறுகிறுப்பு, சோர்வு, ரத்த சோகை சம்பந்தப்பட்ட பாதிப்புகளும் அவ்வப்போது ஏற்படும். உடல் வலி, மூட்டு வலி உண்டாகும். உஷ்ணம் தரும் உணவு பொருட்களை இவர்கள் உண்ணக்கூடாது. மலச்சிக்கல் அடிக்கடி ஏற்பட வாய்ப்புகள் உண்டு.

வாழைத்தண்டு இவர்கள் தினமும் அல்லது வாரத்திற்கு ஒரு முறை சேர்த்துக் கொள்வது மிகவும் அவசியமானது. கருநிற தானியங்களை இவர்கள் உணவில் சேர்த்துக் கொள்வது சிறப்பு. பழங்கள் சாப்பிடுவது உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். தக்காளி, உளுந்து, கொள்ளு போன்றவற்றை சேர்த்துக் கொள்வது நல்லது. நல்லெண்ணெய், மற்ற எண்ணெய்களை விட நன்மை தருவதால் உணவில் சேர்த்து கொள்ள வேண்டும்.

தேதி வாரியாக பொதுவான பலன்கள்

எண் கணிதம் எப்படி பார்ப்பது

8-ம் தேதி பிறந்தவர்கள்

இவர்கள் மிகுந்த தெய்வ நம்பிக்கை கொண்டவர்கள். இவர்கள் பொருளாதாரத்தில் சிறந்த அறிஞர்களாக இருப்பார்கள். கற்பனை வளம் மிக்கவர்கள். நல்ல சிந்தனையாளர்கள். அடுத்தவர்களைத் தங்களது கருத்துகளுக்கு உட்படுத்தும் திறமை கொண்டவர்கள். சமூக சேவையில் மிகவும் நாட்டம் இருக்கும். கடுமையான உழைப்பாளிகள். பெரும் சாதனை புரிவார்கள். நலிவுற்றவர்களைக் கைதூக்கி விடும் நல்ல இயல்பினர். தனித்துச் செயல்புரியும் ஆற்றல் உடையவர்கள்.

17-ஆம் தேதி பிறந்தவர்கள்

இவர்கள் மிகுந்த சோதனைகளை சந்திப்பார்கள். சலிக்காமல் உழைக்கும் உழைப்பாளிகள். நுண்ணிய அறிவு படைத்த சாமர்த்தியசாலிகள். குற்றங்களை மன்னிக்கும் கருணை மனமும் உண்டு. ஆன்மிக வாழ்க்கையிலும், பொது வாழ்க்கையிலும், அரசியலிலும் நிலையான இடத்தைப் பிடித்து விடுவார்கள். இவர்கள் வறுமையான குடும்பத்தில் பிறந்தாலும், தங்கள் உழைப்பினால் பெரும் செல்வத்தைச் சம்பாதிக்கும் யோகமும் உண்டு. பணம் சேர்ப்பதில் சமர்த்தர். இவர்களே பெருந் திட்டங்களைத் தீட்டி, அவற்றைச் செயல்படுத்துவார்கள்.

26-ஆம் தேதி பிறந்தவர்கள்

பொருளாதார விஷயத்தில் குறைபாடு உடையவர்கள். முன்னோர் சேர்த்து வைத்த சொத்துகள் விரயமாகும். பண விரயங்களும் அதிகம் உண்டு. இவர்கள் அடுத்தவர்களால் அடிக்கடி ஏமாற்றம் அடைவார்கள். இருப்பினும் மனோ தைரியம் மிக்கவர்கள். எப்போதும் உயர்வான சிந்தனைகள் நிறைந்தவர்கள். எப்படியும் உயர்ந்த பதவி, தொழிலை அடைய வேண்டும் என்று கடுமையாக உழைப்பவர்கள் இவர்கள்தான். கற்பனைச் சக்தியும், கூர்மையான அறிவும் உண்டு. விதியின் சதியால் அடிக்கடி தோல்விகளைச் சந்திப்பார்கள். இருப்பினும் இறுதிக் காலத்தில் பொன்னும், பொருளும், கீர்த்தியும் கிடைத்து விடும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

மட்டன் குருமா குழம்பு வைப்பது எப்படி

மட்டன் குருமா செய்வது எப்படி

மட்டன் குருமா ஆட்டுக்கறி உடலுக்கு குளிர்ச்சி தரக்கூடியது, கூடவே ஆரோக்கியமும் நிறைந்தது. மட்டனை வைத்து விதவிதமான உணவுகள் செய்யப்படுகிறது. அதில் ஒன்றுதான் மட்டன் குருமா. இந்த மட்டன் குருமா செய்வதற்கு மணமானது மற்றும் எளிதானது,...
பூர்வ ஜென்ம கர்மா

கர்மவினை எப்படி ஏற்படும்?

கர்மவினை எப்படி ஏற்படும்? நாம் முற்பிறவியில் செய்த பாவ , புண்ணியங்களை வைத்து தான் இப்பிறவியில் அதற்க்கான கர்ம பலன்களை அனுபவிக்கிறோம். உலகில் ஒரே நேரத்தில் பிறக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகளில் ஒரு சில குழந்தைகள்...
கருவளையம் வர காரணம் என்ன

கருவளையத்தை போக்க எளியமையான சில வழிமுறைகள் 

கருவளையத்தை போக்க எளியமையான சில வழிமுறைகள் நம் முகத்திற்கு அழகை கொடுப்பதே நம் கண்கள் தான். நம் முகத்தின் அழகை கெடுப்பது கண்ணீர்க்கு கீழ் ஏற்படும் கருவளையம் தான். அதிக நேரம் வெயிலில் அலைவதாலும்,...
கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்

கன்னி லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள் கன்னி லக்னத்தின் அதிபதி புதன் பகவானவார். கன்னி லக்னத்தில் பிறந்தவர்கள் அடக்கமான சுபாவம் கொண்டவர்களாக இருப்பார்கள். பெரும்பாலும் மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புவார்கள். எல்லாவற்றிலும் திறமைசாலியாக விளங்குவார்கள். படிப்பில் கெட்டிகாரர்கள்....
சிக்கன் மஞ்சூரியன் ரெசிபி

சிக்கன் மஞ்சூரியன் செய்வது எப்படி

சிக்கன் மஞ்சூரியன் அசைவ உணவுகளில் முக்கிய இடம் வகிப்பது சிக்கன். சிக்கன் ஆரோக்கியம் நிறைந்தது மட்டுமல்ல, மற்ற அசைவ உணவுகளை விட மலிவானது. சிக்கனை விதவிதமாக சமைத்து சாப்பிட அனைவரும் விரும்புவர். சிக்கனை பாரம்பரிய...
ஆரோக்கியமான நகங்கள்

நீங்கள் ஆரோக்கியமாக இருக்கிறீர்களா என்பதை உங்கள் நகத்தை வைத்தே சொல்லிவிடலாம்.

ஆரோக்கியமான நகங்கள் நம் உடலில் ரத்த ஓட்டம் இல்லாத பகுதிகளில் ஒன்று நகம். ' ஆல்ஃபா கெரட்டின் ' என்னும் புரதப் பொருளால் ஆனது. டென்ஷனாக இருக்கும்போது நகத்தைக் கடித்துத் துப்புவதும், மகிழ்ச்சியாக இருக்கும்போது...
முதலுதவியின் பயன்கள்

முதலுதவி என்றால் என்ன? முதலுதவியின் வரலாறு

முதலுதவி என்றால் என்ன முதலுதவி என்பது ஒரு நோய் அல்லது காயத்திற்குக் கொடுக்கும் முதற்கட்டக் சிகிச்சையாகும். தேவையான முழு மருத்துவ சிகிச்சை கிடைக்கும் வரை இம்முதலுதவி ஒரு நோய்வாய்ப்பட்ட அல்லது காயம்பட்ட நபர்க்கு கொடுக்கபடும்....

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.