மூட்டு வலி
பெரும்பாலானோர் மூட்டு வலி பாதிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மூட்டு வலி என்பது நமது தினசரி வாழ்க்கையில் பெரும் பிரச்சனையாக அமைந்திருக்கிறது. ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் பலருக்கும் ஏற்படும் பாதிப்பாக அமைந்துள்ளது.
மூட்டுகளில் வலி உண்டானால் சமைப்பது, வீட்டு வேலைகளை செய்வது போன்ற அன்றாட வேலைகள் மிகவும் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. இந்த மூட்டு வலி பெரும்பாலும் 30 வயதிற்கு மேல் தான் வருகிறது. மூட்டு வலியை நம் வீட்டில் இருக்கும் எளிய பொருட்களை கொண்டு எப்படி சரி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.
மூட்டு வலி நீங்க சில எளிய குறிப்புகள்
கஸ்தூரி மஞ்சள்
கஸ்தூரி மஞ்சள், சாம்பிராணி, கடுகு ஆகியவற்றை சமஅளவு எடுத்து தண்ணீர் விட்டு அரைத்து சூடுபடுத்தி அதை இளம் சூட்டில் சிறிது கற்பூரம் கலந்து வீக்கம், வலி உள்ள இடங்களில் தடவி வந்தால் மூட்டு வீக்கம், மூட்டு வலி குறையும்.
விளக்கெண்ணைய்
விளக்கெண்ணையை அடுப்பில் வைத்து சூடேற்றி ஒரு கப் ஆரஞ்சுப் பழச்சாற்றில் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் மூட்டுவலி குறையும்.
பூண்டு
பூண்டின் இலைகளை எடுத்து வேப்ப எண்ணெய் விட்டு நன்கு வதக்கி மூட்டில் கட்டினால் மூட்டுவலி குறையும்.
எருக்கு
எருக்கன் இலைகளை நெருப்பில் வாட்டி மூட்டு வீக்கங்களின் மீது சிறிது நேரத்திற்கு கட்டி வைத்தால் வீக்கம் குறையும்.
இஞ்சி
250 கிராம் இஞ்சி சாறில், 150 கிராம் நல்லெண்ணெய்யை கலந்து வலி, வீக்கம் உள்ள இடத்தில் நன்றாக அழுத்தி தேய்த்து வந்தால் மூட்டு வீக்கம் மற்றும் மூட்டு வலி குறையும்.
கொய்யா இலை
கொய்யா இலைகளை நன்றாக விழுது போல அரைத்து மூட்டு வீக்கத்தின் மீது பூசி வந்தால் மூட்டு வலி மற்றும் மூட்டு வீக்கம் குறையும்.
பால்
சூடான பாலில் 3 ஏலக்காயை உடைத்துப் போட்டு, சிறிதளவு மஞ்சள் பொடி சேர்த்து தினமும் இரவில் குடித்து வந்தால் மூட்டு வலி குறையும்.
உருளைக்கிழங்கு சாறு
உருளைக்கிழங்கை நன்கு மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு டம்ளர் குளிர்ந்த நீரில் இரவு முழுவதும் போட்டு வைத்து காலை வெறும் வயிற்றில் குடித்து வந்தால் மூட்டு வலி குணமாகும்.
கருப்பு எள்
ஒரு தேக்கரண்டி கருப்பு எள்ளை இரவு முழுவதும் ஊறவைத்து காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் விரைவில் மூட்டு வலி பிரச்சனைகள் குணமாகும்.
எலுமிச்சை சாறு
தினமும் காலை வெறும் வயிற்றில் இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாறு மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் இரண்டையும் ஒன்றாக கலந்து ஒரு டம்ளர் வெதுவெதுப்பான தண்ணீரில் இவற்றை கலந்து இரண்டு முறை குடித்து வர வேண்டும். இவ்வாறு தினமும் குடித்து வந்தால் மூட்டு வலி குறையும்.
பாசிப்பருப்பு
இந்த மூட்டு வலி பிரச்சனைக்கு ஒரு டேபிள் ஸ்பூன் பாசிப்பருப்பு மற்றம் இரண்டு பூண்டு பற்களுடன் நன்றாக வேகவைத்து தினமும் இரண்டு முறை சாப்பிடலாம்.