மன அழுத்தத்திலிருந்து விடுபட சில வழிகள்
இயந்திரமயமான நவீன வாழ்க்கை சூழலில் அனைவரும் அதிக அளவில் பணம் ஈட்டுவதையும், அந்த பணத்தை வைத்து வசதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்ற எண்ணத்திலும் ஓடிக்கொண்டிருக்கிறோம். பணத்திற்கான இந்த தேடலில் உடல் நலனை கவனிக்க தவறிவிடுகிறோம்.
மன அழுத்தம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக இருந்தாலும் அதை நீண்ட நாட்கள் கவனிக்காமல் விடக்கூடாது. நாளடைவில் அது மோசமான சூழ்நிலையை உருவாக்கக்கூடும். இதனால் நம் உள்ளம் மற்றும் உடல் இரண்டுமே பாதிக்கப்படும்.
வாழ்க்கையில் அன்றாடம் கிடைக்கக் கூடிய சின்ன சின்ன சந்தோஷங்களை நாம் தொலைத்துவிடுகிறோம். உறவினர்களின் வருகை, திருவிழாக்களுக்கு செல்வது, குழந்தைகளுடன் நேரம் செலவிடுவது, பெரயவர்க்ளுடன் அமர்ந்து பேசவது , அவர்களோடு சேர்ந்து நாமும் குழந்தையாக மாறி விளையாடுவது போன்றவற்றை நாம் இழந்து வருகிறோம்.
இதனால் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் மன சோர்வுக்கு ஆளாகிறோம். இதனால் நாளைடைவில் உடலில் பல்வேறு நோய்கள் வர தொடங்குகிறது. சர்க்கரை, நோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவை ஏற்படுகிறது. இதனால் மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம்.
மன அழுத்தத்தில் இருந்து விடுபட சில வழிகள்
- அதிகாலையில் எழுங்கள்
- இன்று என்ன செய்ய வேண்டும் என்பதை காலை வேளையிலேயே மனதில் ஒரு காட்சியாக ஓட விடுங்கள். இது உங்களை நாள் முழுவதும் பதட்டம் இல்லாமல் இயங்க உதவியாக இருக்கும்.
- உங்களுக்கு வசதியாக இருக்கும் துணிகளை அணியுங்கள்.
- மற்றவர்களை எப்போதும் சார்ந்திருக்காதீர்கள்.
- கடந்த காலத்தை மறந்து விடுங்கள்.
- உடற்பயிற்சி செய்ய நேரம் ஒதுக்குங்கள்.
- உங்கள் முன்னுரிமைகளுக்கு மதிப்பீடு கொடுங்கள்.
- தீயவர்கள் என்று தெரிந்தால் அவர்களை விட்டு விலகி இருங்கள்.
- உங்கள் நேரத்தை நிர்வகியுங்கள்.
- நீங்கள் எதை கட்டுப்படுத்த முடியுமோ அதன் மீது கவனம் செலுத்துங்கள்.
- வாழ்க்கையின் சவால்களில் உங்களுக்கான வாய்ப்பை தேடுங்கள்.
- உங்களுக்கு விருப்பமான நல்ல புத்தகத்தை வாசியுங்கள்.
- நகைச்சுவை படம் அல்லது தொலைக்காட்சி நிகழ்ச்சியை காணுங்கள்.
- நீங்கள் விரும்புவோருடன் மனம் திறந்து பேசுங்கள்.
- உடற்பயிற்சி மற்றும் தியானம் மற்றும் ஆழ்ந்த சுவாசம் போன்ற செயல்கள்மனஅழுத்தத்தை போக்க உதவியாக இருக்கும்.
- சந்தோஷமான தருணங்களை நினைவு கூறுங்கள்.
- ஆரோக்கியமான உணவினை உட்கொள்ளுங்கள்.
- உங்களுக்கு பிடித்த சில விஷயங்களை எழுதி பின் படித்து பாருங்கள் . இது உங்களுக்கு மன அமைதியையும் , சந்தோஷத்தையும் கொடுக்கும்.
- இயற்கையான சூழலில் இருப்பது மனதிற்கு அமைதியை கொடுக்கும்.
- யார் இடத்தில் உங்களுக்கு அன்பும் , அரவணைப்பும் கிடைக்குமோ அவர்களிடத்தில் அதிக நேரம் செலவிடுங்கள். இவ்வாறு செய்வதால் நீங்கள் பாதுகாப்பாகவும்,மன அழுத்தம் இல்லாமலும் உணர்வீர்கள்.