மகர லக்னத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்
மகர லக்னத்தின் அதிபதி சனி பகவனாவார். மகர லக்கினத்தில் பிறந்தவர்கள் சாமர்த்தியசாலிகளாகவும், புத்திசாலிகளாகவும் இருப்பார்கள். மனதிடம் அதிகம் உள்ளவர்கள். கடினமாக உழைக்ககூடியவர்கள். எப்போதும் கம்பீரமும் புன்னகையுமாக வலம் வருவார்கள். போதும் என்ற மனதுக்கு சொந்தகாரர்களாக இருப்பார்கள். பாடுபட்டு பணத்தை சேர்க்க கூடியவர்கள். சுயநலம் அதிகம் கொண்டவர்கள். இவர்கள் எப்போதும் எதையாவது சிந்தித்து கொண்ட இருப்பார்கள். மனதில் தேவையில்லாத ஒன்றை போட்டு குழப்பி கொள்வார்கள். சிறு விஷயத்தையும் ஊதி பெரிதாக்குவார்கள்.
மகர லக்னத்தில் பிறந்தவர்கள் உடலில் ஏதாவது ஒரு ஆராக்கிய பிரச்சனை இருந்து கொண்டே இருக்கும். இவர்கள் பெரும்பாலும் ஒல்லியான உடல் அமைப்பை கொண்டிருப்பார்கள். இவர்கள் தனிமை விரும்பிகள் மற்றும் அமைதியான வாழ்க்கை விரும்புவார்கள். பிடிவாத குணம் அதிகம் கொண்டவர்கள். கொண்ட கொள்கையில் ஊக்கம் குறையாமலும், ஒரு விஷயத்தில் தோற்றால் நம்பிக்கை இழக்காமலும் எடுத்த காரியத்தை தொடர்ந்து முடித்து காட்டுவார்கள். சகோதர, சகோதரிகளிடம் பாசம் அதிகம் இருக்கும். ஆனால் அதை வெளிகாட்ட மாட்டார்கள்.
இவர்கள் பேச்சில் வல்லவர்கள். எதையும் நிதானமாகவும், தெளிவாகவும். அழுத்தம் திருத்தமாகவும் பேசுவார்கள். எதையும், எளிதில் மனதில் பதியவைத்துக்கொள்வார்கள். இரக்க சுபாவம் கொண்டவர்கள். பிறர் துன்பத்தைக் கண்டால் மனம் இறங்கி தன்னால் இயன்ற உதவியைச் அவர்களுக்கு செய்வார்கள். அதே சமயம் பண விஷயத்தில் கெட்டியானவர்கள். வீண் செலவு செய்வது இவர்களுக்கு பிடிக்காது. சின்ன மீனைப் போட்டு பெரிய மீனை பிடிப்பதில் வல்லவர்கள்.
கல்வியில் உயர்வு பெற்று உயர்தர கல்வி சிறப்பையும் பெற்று எடுத்த உடனேயே நல்ல உத்தியோகப் பதவியில் அமரும் பாக்கியம் பூர்வ புண்ணியத்தால் ஏற்படும். இவர்களுக்கு கல்வியறிவு குறைவாக இருந்தாலும் அனுபவ அறிவு அதிகம் இருக்கும். பெரியோர்களுக்கு மரியாதை கொடுக்க கூடியவர்கள். இவர்களுக்கு மதப்பற்றைவிட கலைப்பற்றில் அதிக விருப்பம் இருக்கும். ஆனால் அதை வெளி காட்ட மாட்டார்கள். வசதி வாய்ப்புகளுடன் வாழ்வதில் அதிக விருப்பம் கொண்டவர்கள். இவர்கள் தந்திரமானவர், சாமர்த்தியசாலி மற்றும் கலைகளில் ஆர்வமிக்கவர்கள்.
இவர்கள் எந்த வேலையில் இருந்தாலும் அதில் தலைமை பொறுப்பை விரைவில் அடைவார்கள். இவர்கள் வாழ்வின் முற்பகுதியை விட பிற்பகுதியில் தான் சுகமான வாழ்வு அமையும். இவர்கள் எந்த வேலையையும் பொறுமையாகவே செய்வார்கள், ஆனால் சரியாக செய்வார்கள். ரகசியம் காப்பதில் கெட்டிகாரர்கள். தனது மனதுக்கு சரியென பட்டதை செய்வார்கள். இவர்கள் மிகவும் முன் ஜாக்கிரதைகாரர்களாக விளங்குவார்கள். வருங்காலத்திற்க்கு தேவையானவற்றில் மிகவும் கவனமாக இருப்பார்கள்.
எந்த விதமான சோதனைகள் வந்தாலும் அவற்றை கண்டு இவர்கள் அஞ்சுவதில்லை. இவர்கள் அனுபவ அறிவாளி. இவர்கள் தங்கள் திட்டங்களை சாமர்த்தியமாக செயல்படுத்துவார்கள். இவர்கள் அபாரமான நினைவாற்றல் கொண்டவர்கள். தன் கஷ்ட காலங்களில் உதவியவரை ஒருநாளும் மறக்க மாட்டார்கள். கடவுள் நம்பிக்கை குறைவாக கொண்டவர்கள். இவர்களுக்கு செய்யும் தொழிலே தெய்வம். எந்த துறையில் ஈடுபட்டாலும் அதில் முன்னேற்றமும், வெற்றியும் பெறுவார்கள். இவர்களுக்கு மதப்பற்றைவிட கலைப்பற்றில் அதிக நாட்டம் ஏற்படும்.
இவர்களுக்கு வரக்கூடிய வாழ்க்கை துணை வடக்கு மற்றும் மேற்கு திசையிலிருந்து அமையும். இவர்களின் வாழ்க்கைத் துணை அழகாக இருப்பார். இவர்களுடைய வாழ்வில் மிகப்பெரிய மாற்றம் மற்றும் முன்னேற்றம் என்பது திருமணத்திற்குப் பிறகு தான் ஏற்படும். எந்த ஒரு முடிவு எடுத்தாலும் இருந்தாலும் வாழ்க்கைத்துணையுடன் கலந்து ஆலோசித்து தான் எடுப்பார்கள். திருமண தடை நீங்க அம்மனை வழிபாடு செய்து வரலாம்.
மற்ற லக்னங்களுக்கான பலன்கள் பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.