லக்ஷ்மி குபேர பூஜையின் சிறப்புகள் மற்றும் பலன்கள்

லக்ஷ்மி குபேர பூஜையின் சிறப்புகள் மற்றும் பலன்கள்

தீபாவளியும் அமாவாசையும் சேர்ந்து வரும் நாளில் நாம் லக்ஷ்மி குபேர பூஜை செய்து மகாலக்ஷ்மியை வழிபடுவதின் மூலம் சகல சௌபாக்கியங்களையும்  நாம் பெற முடியும்.

தீபாவளி அன்று கேதார கெளரி விரதம், அமாவாசை, தீபாவளி பண்டிகை, லட்சுமி குபேர பூஜை, அதைத் தொடர்ந்து கந்த சஷ்டியும் வருகிறது.

லக்ஷ்மி குபேர பூஜை பலன்கள் இந்த ஆண்டு  தீபாவளி பண்டிகையானது அக்டோபர் 24 ம் தேதி திங்கட்கிழமை வருகிறது. அன்றைய தினம் காலையிலேயே கேதார கெளரி விரதத்தை துவக்க வேண்டும். தீபாவளியன்று மாலை நேரத்தில் தான் அமாவாசை திதி துவங்குகிறது. இதனால் மாலையில் தான் லட்சுமி குபேர பூஜையை செய்ய வேண்டும்.

லக்ஷ்மி குபேர பூஜை என்றால் என்ன?

லட்சுமி குபேர பூஜை என்பது செல்வத்திற்கு அதிபதியான குபேரரையும், அதை அவருக்கு அருளிய லட்சுமி தேவியையும் வழிபடுவதாகும். ஆரம்பத்திலேயே குபேரர் செல்வ வளத்தை பெற்றிருக்கவில்லை. தான் பெரும் செல்வ வளத்தை பெற என்ன செய்ய வேண்டும் என குபேரர், தனது நண்பரான சிவ பெருமானிடம் சென்ற ஆலோசனை கேட்டார்.

சிவ பெருமான் குபேரனிடம் ஐப்பசி மாதம் தீபாவளி திருநாள் அன்று அமாவாசையும் சேர்ந்து வரும் நாளில் மாலை நேரத்தில் மகாலக்ஷ்மியை மனதார நினைத்து வழிபடுமாறு அறிவுரை கூறினார்.

 

குபேர எந்திரம் சிவ பெருமானின் யோசனையை ஏற்று குபேரனும் மகாலட்சுமியை பூஜை செய்து வணங்கி சகல செல்வங்களையும் பெற்று செல்வங்களுக்கு அதிபதியாக இருக்கும் வரத்தை பெற்றார். இந்த நாளில்  நாமும் லக்ஷ்மி குபேர பூஜை செய்து மகாலக்ஷ்மியை வணங்கினால் நமக்கும் அந்த வரம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

எப்படி பூஜை செய்ய வேண்டும்?

லட்சுமி குபேர பூஜை செய்பவர்கள் மகாலக்ஷ்மியின் படம் அல்லது லட்சுமி குபேரரின் படத்தை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

கலசம் வைத்து வழிபடுபவர்கள் எவர்சில்வர் தவிர மற்ற உலோகங்களால் ஆன கலசத்தில் தண்ணீர் ஊற்றி, அதோடு பன்னீர், வாசனை பொருட்கள், மஞ்சள், எலுமிச்சை கலந்து, அதன் மீது மட்டை தேங்காய், மாவிலை வைக்க வேண்டும்.

கலசத்தின் மீது மஞ்சள், குங்குமம், சந்தனம் ஆகியவற்றை வைக்க வேண்டும். இந்த கலசத்தை வாழை இலை அல்லது தாம்பாலத்தில் பச்சரிசி பரப்பி அதன் மீது வைக்க வேண்டும்.

கலசம் வைக்காதவர்கள் படத்தை வைத்து வாசனை மலர்களால் அலங்கரிக்க வேண்டும்.

மகாலக்ஷ்மி பூஜை இந்த படத்திற்கு முன் குபேர யந்திரத்தை வைக்க வேண்டும்.

மகாலட்சுமிக்கு உரிய தாமரை, துளசி ஆகியவற்றையும் வைக்க வேண்டும்.

அதோடு வெற்றிலை பாக்கு, பழங்கள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்ய வேண்டும்.

நெய்வேத்தியமாக பால் பாயாசம், கற்கண்டு சாதம், அவல் பாயாசம் செய்து படைக்கலாம்.

மகாலட்சுமிக்கு குங்குமத்தாலும், குபேரருக்கு நாணயங்களைக் கொண்டும் அர்ச்சனை செய்ய வேண்டும்.

நாணயங்கள் வைக்கும் போது ஒரே மாதிரியான 9 நாணயங்களை வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.

பூஜைக்கு இரண்டு குத்துவிளக்குகள் எடுத்துக் கொள்ள வேண்டும். இதில் நெய்யினால் விளக்கேற்றி, முதலில் விநாயகர் பூஜை, பிறகு குலதெய்வ வழிபாடு, அதற்கு பிறகு மகாலட்சுமிக்கு குங்குமத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு குபேரனுக்கு அவருக்கான மந்திரம் சொல்லி நாணயத்தால் ஆர்ச்சனை செய்ய வேண்டும். ஒரு தாமரை இதழ் எடுத்து அதன் மீது ஒர நாணயத்தை வைத்து, குங்குமம் வைத்து

“ஓம் குபேராய நம:

ஓம் தனபதியே நம:”

என்ற மந்திரத்தை சொல்லி மகாலட்சுமியின் பாதத்தில் வைக்க வேண்டும். பிறகு மகாலட்சுமி, குபேரர், குபேர யந்திரம் ஆகியவற்றிற்கு தூப தீபம் காட்டி வழிபட வேண்டும். நெய்வேத்தியத்தை மற்றவர்களுக்கு கொடுத்து பூஜையை நிறைவு செய்ய வேண்டும்.

பூஜை செய்ய ஏற்ற நேரம்

தீபாவளி அன்று மாலையில் அமாவாசை திதி துவங்குகிறது. இதனால் மாலை 6 மணிக்கு மேல் இரவு 9 மணி வரை லட்சுமி குபேர பூஜை செய்ய உகந்த நேரம் ஆகும். இந்த சமயத்தில் லட்சுமி குபேர பூஜை செய்தால் மகாலட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

coconut barfi preperation

எளிமையான முறையில் தேங்காய் பர்ஃபி செய்வது எப்படி ?

தேங்காய் பர்ஃபி தேவையான பொருட்கள் துருவிய தேங்காய் - 1 கப் சர்க்கரை - 1 கப் தண்ணீர் - 1/4 கப் முந்திரி - 1 டேபிள் ஸ்பூன் நெய் - 4...
பந்தக்கால் நடுதல்

திருமணத்தில் பந்தக்கால் அல்லது முகூர்த்தகால் நடுவது ஏன்?

பந்தக்கால் அல்லது மூகூர்த்தகால் நடுவது ஏன்? பெரும்பாலான இந்து திருமணங்களில் திருமணதிற்கு ஐந்து நாட்களுக்கு முன்பு பந்தக்கால் அல்லது மூகூர்த்தகால் நடுவார்கள். எதற்கு இந்த பந்தக்கால் நடுகிறார்கள் என்பது நம்மில் பலபேருக்கு தெரியாது. நம்...
மணமக்களின் ஏழு அடி பிரார்த்தனை

திருமணத்தில் ஏழு அடி பிரார்த்தனை ஏன் செய்யபடுகிறது?

மணமக்களின் ஏழு அடி பிரார்த்தனை திருமணத்தில் பல விதமான சடங்குகள் செய்யபட்டாலும் அதன் முழுமையான அர்த்தம் பலருக்கும் தெரிவதில்லை. அவற்றில் ஒன்று தான் மணமக்களின் ஏழு அடி பிரார்த்தனை. ஏழு அடி பிரார்த்தனை என்றால்...

திருமண தடை நீங்க செய்ய வேண்டிய பரிகாரங்கள்

திருமண தடை  நீங்க செய்ய வேண்டிய பரிகாரம் இரு வீட்டாரின் சம்மதத்துடன் இரு மணங்கள் இணையும் வைபவமே திருமணமாகும். அந்த திருமணம் சரியான காலத்திலும் சரியான வயதிலும் நடைபெறுவது முக்கியமானதாகும்.  சிலரது ஜாதகத்தில் இருக்கும்...
எண்ணெய் குளியல் எப்படி செய்ய வேண்டும்

எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பலன்?

எண்ணெய் குளியலால் ஜோதிடப்படி என்ன பயன்? நாம் எல்லோரும் தினமும் குளிக்கிறோம். வாரத்தில் இரு நாட்கள் தலைக்கு குளிக்க வேண்டும். விசேஷ நாட்களிலும், பூஜையில் கலந்து கொள்ளும் போதும் தலைக்கு குளிக்க வேண்டும். இது...
பாம்பு கடிக்கு செய்ய வேண்டிய முதலுதவி

பாம்பு கடிக்கான முதலுதவி சிகிச்சைகளை எவ்வாறு மேற்கொள்வது

பாம்பு கடிக்கான முதலுதவி அதிகரித்து வரும் மக்கள் தொகை பெருக்கத்தால் நாம் காடுகளை அழித்து வீடுகளாகவும், விவசாய நிலங்களாகவும் மாற்றி வருகிறோம். காடுகள் அழிக்கப்பட்டு வரும் இந்தக் காலத்தில் காட்டில் உள்ள விலங்குகள், பூச்சிகள்,...
முசுமுசுக்கை கீரை பயன்கள்

சுவாச பிரச்சனைகளை நீக்கும் அற்புத சக்தி கொண்ட முசுமுசுக்கை கீரை

முசுமுசுக்கை கீரை முசுமுசுக்கை கொடி வகையை சார்ந்த ஒரு மூலிகை செடியாகும். கொடி வகையைச் சேர்ந்த முசுமுசுக்கை கீரை, சுவர்களிலும், தரைகளிலும் தானாக படர்ந்து வளர்ந்திருக்கும். முசுமுசுக்கை செடியின் இலை, மற்றும் தண்டுகளில் சிறிய...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.