கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்
கிருத்திகை நட்சத்திரம் நட்சத்திரத்தின் இராசி: மேஷம் 1ம் பாதம், ரிஷபம் 2, 3 மற்றும் 4 ம் பாதம்.
கிருத்திகை நட்சத்திரத்தின் அதிபதி : சூரியன்.
கிருத்திகை நட்சத்திரத்தின் முதல் பாதத்திற்கான இராசி அதிபதி : செவ்வாய்.
கிருத்திகை நட்சத்திரத்தின் 2 முதல் 4 பாதத்திற்கான இராசி அதிபதி : சுக்கிரன்.
கிருத்திகை நட்சத்திரத்தின் அதிதேவதை – அக்னி
கிருத்திகை நட்சத்திரத்தின் பரிகார தெய்வம் – சிவன்
கிருத்திகை நட்சத்திரத்தின் நட்சத்திர கணம்(குணம்) – ராட்சஸகணம்
கிருத்திகை நட்சத்திரத்தின் விருட்சம் – அத்தி
கிருத்திகை நட்சத்திரத்தின் மிருகம் – பெண் ஆடு
கிருத்திகை நட்சத்திரத்தின் பட்சி – மயில்
கிருத்திகை நட்சத்திரத்தின் கோத்திரம் – அகத்தியர்
கிருத்திகை நட்சத்திரத்தின் வடிவம்
கிருத்திகை நட்சத்திரம் ‘கார்த்திகை’ எனவும் அழைக்கபடுகிறது. இது நட்சத்திரங்களின் வரிசையில் 3ம் இடத்தை பிடிக்கிறது. இதற்கு ‘ஆரல்’ என்ற பெயரும் உண்டு. கிருத்திகை நட்சத்திரம் வான் மண்டலத்தில் கத்தி, நெருப்பு ஜ்வாலை போன்ற வடிவத்தை கொண்டது.
கிருத்திகை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் நேர்மையானவர்கள். தெய்வபக்தி அதிகம் கொண்டவர்கள். சுத்தமாக இருக்க வேண்டும் என விரும்புபவர்கள். சாமர்த்தியசாலிகள். வந்தாரை வரவேற்கும் விருந்தோம்பல் பண்பு இவர்களிடம் மிகுந்து இருக்கும். தர்ம சிந்தனையும், இரக்க குணமும் கொண்டவர்கள். அழகாகவும், கவர்ச்சியாகவும் இருக்க வேண்டும் என விரும்புபவர்கள். முன் கோபம் மற்றும் பிடிவாத குணம் கொண்டவர்கள். இவர்கள் மிகவும் இளகிய குணம் கொண்டவர்கள்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறிது கஞ்சத்தனமாக நடந்து கொள்வர்கள். இவர்கள் எப்போதுமே பதட்டமும், மனக் கவலையுடையவராகவும் காட்சி அளிப்பார்கள். இவர்கள் நல்ல உடல் வலிமையுடனும், புத்திசாலிதனத்துடனும் இருப்பார்கள். இவர்களின் பண நிலைமை சிறப்பாக இருக்காது. நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் இவர்களுக்கு நல்ல உறவு அமைவது கடினம். இவர்கள் தாங்கள் எடுத்து கொண்ட வேலைகளை எப்பேற்பட்டாவது முடித்துக் கொடுக்கும் திறமை, இவர்களிடம் காணப்படும்.
இவர்கள் எதையும் திறம்பட முடிக்கும் ஆற்றல் மிக்கவர்கள். சுயகவுரவம் பார்ப்பவர்கள். தாய்ப்பாசம் மிக்கவர்கள். சுயமுயற்சியல் வாழ்க்கையில் முன்னேற்றம் காண்பார்கள். பழமையான விஷயங்களில் இவர்களுக்கு நம்பிக்கை உண்டு. இவர்களிடம் சுறுசுறுப்பாக செயல்படும் ஆற்றலும், எதையும் வெளிப்படையாக பேசும் குணமும் உண்டு.
இவர்கள் ஆடம்பரத்திற்காக செலவழிக்க விரும்ப மாட்டார்கள். தனக்கு பிடித்தது போல வாழ்க்கையையே வாழ விரும்புவர்கள். தன்னுடைய சக்திக்கு ஏற்ற வேலையை செய்து முடிப்பார்கள். இவர்கள் யாரிடமும் விட்டு கொடுத்து போக மாட்டார்கள். இவர்களுக்கு கடவுள் நம்பிக்கை அதிகம் இருக்கும். யாரையும் சட்டை செய்யாமல் தனக்கென்று ஒரு பாதையை அமைத்துக் கொண்டு தனி வாழ்க்கையை வாழ்வார்கள். யாரிடமும் அடிமை வேலை செய்ய மாட்டார்கள்.
இவர்களிடம் ஆணவமும், கர்வமும் அதிகம் இருக்கும். மிக உயரிய கொள்கையை உடையவர்கள். பயணங்கள் செய்வதில் அதிக ஆர்வம் இருக்கும். சேமிப்பில் அதிக ஆர்வம் இருக்கும். கலைகளை கற்பதில் ஆர்வம் அதிகம் இருக்கும். பெண்களிடம் நட்புடன் பழகுவார்கள்.
கிருத்திகை நட்சத்திரம் முதல் பாதம் :
இவர்களிடம் கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். பூமி, வீடு மற்றும் கால்நடை போன்ற செல்வத்தை உடையவர்கள். நல்ல ஞானம் உள்ளவர்கள். திறமைகளுடன் இருப்பார்கள். எதிரிகளை தந்திரத்தால் வெற்றி கொள்ளக் கூடியவர்கள். உடல் பலவீனம் உடையவர்கள். புகழை விரும்புபவர்கள். இவர்கள் பொன், பொருளை அதிகம் விரும்புவார்கள். நல்ல ஞானம் உள்ளவர்கள். எதையும் தந்திரத்தால் வெல்ல கூடியவர்கள்.
கிருத்திகை நட்சத்திரம் இரண்டாம் பாதம் :
இவர்களிடம் கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். அதிக பாசத்துடன் இருப்பார்கள். போராட்ட குணம் உடையவர்கள். வீரம் மிக்கவர்கள், தற்பெருமை கொள்பவர்கள். கலைகளை பயிலுபவர்கள். சோம்பேறித்தனமும், மந்தத்தன்மையும் உடையவர்கள். இவர்கள் அதிக ஆசை, மற்றும் பற்றுள்ளவர்கள். மிக உயரிய நோக்கம் இவர்களிடம் இருக்கும். இவர்களிடம் வீரம் அதிகம் இருக்கும். இவர்கள் தற்புகழ்ச்சி அதிகம் உடையவர்கள்.
கிருத்திகை நட்சத்திரம் மூன்றாம் பாதம் :
இவர்களிடம் கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மேலும் கீழ்க்கண்ட சில குணங்களும் இருக்கும். நல்ல உழைப்பாளிகள். கல்வியில் அதிக பிடிப்பு இருக்காது. கெட்டவர்களின் சகவாசம் உடையவர்கள். விடாமுயற்சி, கோபம், பொறாமை, பழிவாங்கும் இயல்பு போன்றவை இருக்கும். இவர்களிடம் பேராசை அதிகம் இருக்கும். இவர்கள் விடாமுயற்சி அதிகம் உடையவர்கள். இவர்களிடம் கோபம், பொறாமை, பழி வாங்கும் குணம் அதிகம் இருக்கும்.
கிருத்திகை நட்சத்திரம் நான்காம் பாதம் :
இவர்களிடம் கிருத்திகை நட்சத்திரத்திற்குரிய பொதுவான குணங்கள் இருக்கும். மன உறுதி கொண்டவராகவும் இருப்பார்கள். நீதி நேர்மை கொண்டவராகவும் இருப்பார்கள். பெண் போகத்தில் விருப்பம் உடையவர். ஆடம்பர வாழ்க்கை வேண்டும் என்ற ஆசை உடையவராகவும் இருப்பார்கள். பல நல்ல பண்புகளை இவர்கள் கொண்டிருப்பார்கள். தானம், தர்மம் செய்வதில் அதிக விருப்பம் இருக்கும். தெய்வ பக்தியும், இரக்க குணமும் இவர்களிடம் இயல்பாகவே இருக்கும்.
மற்ற நட்சத்திரங்களின் பொதுவான குணங்கள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.