கனவுகள் பலிக்குமா
நாம் உறக்கத்தில் காணும் ஒவ்வொரு கனவிற்கும் ஒவ்வொரு விதமான பலன்கள் உண்டு. சிலர் கனவுகள் என்பது நினைவுகளின் கற்பனை வடிவம் என்றும் இன்னும் சிலர் மனிதர்களின் ஆழ் மனதில் இருக்கும் நினைவுகளே கனவுகளாக வெளிபடுகின்றன என்றும் கூறுகின்றனர். கனவுகள் பெரும்பாலும் நாம் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கும்போதே வருகின்றன. உண்மையில் உறக்கத்தில் வரும் கனவுகள் பலிக்குமா, பலிக்காதா என்ற சந்தேகம் பலருக்கும் உண்டு. ‘சொப்பன சாஸ்திரம்’ என்னும் நூல் கனவுகள் பலிக்கும் என்று கூறுகிறது. ஒரு குறிப்பிட்ட நேரத்தில் காணும் கனவுக்கு நிச்சயம் பலனுண்டு என்று கூறுகிறது. இவற்றை பற்றி விரிவாக காணலாம்.
எந்த நேரத்தில் வரும் கனவு பலிக்கும்
நாம் காணும் கனவுகளின் நேரத்தை பொருத்து அதன் பயன்கள் அமையுமாம். மாலை 6 மணிமுதல் 8.24 மணிக்குள் வரும் கனவு ஒரு வருடத்திலும் இரவு 8.24 மணிமுதல் 10.48 மணிக்குள் வரும் கனவு 3 மாதத்திலும், இரவு10.48 மணிமுதல் நள்ளிரவு 1.12 மணிக்குள் வரும் கனவு 1 மாதத்திலும், நள்ளிரவு 1.12 மணி முதல் அதிகாலை 3.36 மணிக்கு வரும் கனவு 10 நாளிலும், அதிகாலை 3.36 மணிமுதல் விடியல் காலை 6.00 மணிக்குள் வரும் கனவுகள் உடனடியாக பலிக்கும் என பஞ்சாங்க சாஸ்திரங்களில் குறிபிடப்பட்டுள்ளன. பகலில் காணும் கனவுகள் பெரும்பாலும் பலிப்பதில்லையாம்.
எவ்வாறான கனவுகள்
நாம் காணும் எல்லா கனவுகளும் நிச்சயம் பலிப்பதில்லை. மாறாக சில கனவுகள் வந்த உடனே மறைந்து விடும். மேலும் ஒரு சில கனவுகளை நம்மால் ஞாபகம் வைத்து கொள்ள முடியாது. மேலும் ஒரு சில கனவுகள் பசுமரத்தாணி போல் நம் மனதில் நீண்ட காலத்திற்கு நினைவில் நிற்கும். நாம் ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கும்போது ஒரு சில பயங்கர கனவுகள் வந்து திடுக்கிட்டு எழுவோம். அவை இது போன்ற கனவுகளாகும்.
மேலும் ஒரு சிலருக்கு எதிர்காலத்தில் நடக்க இருக்கும் சம்பவங்கள் மற்றும் அது தொடர்பான விஷயங்கள் அவர்களுக்கு கனவுகள் மூலம் முன்னதாகவே காட்டி கொடுக்கும். கனவின் பலன்கள் நிறைய உண்டு. மனிதர்கள், விலங்குகள், பறவைகள், அமானுஷ்யங்கள், பூச்சிகள், முன்னோர்கள், பூக்கள், பழங்கள், பரிகாரங்கள் என அவற்றில் சில கனவுகள் நமக்கு வந்து போகின்றன. அந்த கனவின் அர்த்தம் தெரியாமல் தவிப்போம். அவற்றிற்கான அர்த்தம் தெரியவே இந்த தொகுப்பு.