ஜாதக யோகங்கள்
இந்த பூமியில் ஒவ்வொரு மனிதன் பிறக்கும்போதும், அவன் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் எழுதப்படுகிறது. அந்த ஜாதகத்தில் தோஷங்களும், யோகங்களும் கோள்கள் இருக்கும் நிலையை வைத்து நிர்ணயிக்கபடுகிறது. அதன்படி, கிரகங்கள் ஜாதகத்தில் எந்த இடத்தில் இருந்தால் என்னென்ன மாதிரியான யோகங்கள் ஏற்படும் என்பதை நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனர். அதன்படி பல்வேறு யோகங்கள் மற்றும் அதன் பலன்கள் பற்றி பார்த்து வருகிறோம். இந்த பகுதியில் அவற்றில் சிலவற்றை பார்ப்போம்,
ஸ்ரீகட யோகம் :
அனைத்து கிரகங்களும் 1,5,9 போன்ற திரிகோண வீடுகளில் இருப்பது ஸ்ரீ கட யோகமாகும்.
ஸ்ரீகட யோகத்தின் பலன்கள் :
இவர்கள் சண்டையில் விருப்பம் உடையவர்கள். அரசு தொடர்பான பணி செய்வார்கள். மனதில் எண்ணிய இல்வாழ்க்கை அமையும். இவர்கள் அன்பான மனைவி அமைவார்கள்.
விஷ கன்னிகா யோகம் :
பெண் குழந்தையானது சனி, ஞாயிறு மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் பிறந்து ஆயில்யம், சதயம் மற்றும் கிருத்திகை போன்ற நட்சத்திரத்தில் பிறந்தவர்களாக இருந்தால் விஷ கன்னிகா யோகம் உண்டாகும்.
விஷ கன்னிகா யோகத்தின் பலன்கள் :
இந்த யோகம் உடைய பெண்ணுடன் உறவு வைத்து கொண்டால் ஆணின் உடல் நலம் பாதிக்கபடும். இவர்களுக்கு மாங்கல்ய பலம் குறைவாக இருக்கும்.
ரோககிரகஸ்தா யோகம் :
லக்னாதிபதி பலம் இழந்து ஆறு, எட்டு மற்றும் பனிரெண்டாம் வீடுகளில் இருந்தாலும் அல்லது 6, 8, 12 அதிபதிகள் லக்னத்தில் இருந்தாலும் ரோககிரகஸ்தா யோகம் உண்டாகும்.
ரோககிரகஸ்தா யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
இவர்களுக்கு இயற்கையாகவே ஒல்லியான, மெலிந்த தேகம் இருக்கும்.
அரச கேந்திர யோகம் :
லக்னத்திற்கு கேந்திர வீடுகளாகிய 1,4,7,1௦ வீடுகளில் உள்ள அதிபதிகள் யாவும் உச்சம் பெற்று அமைவதால் உண்டாவது அரச கேந்திர யோகமாகும்.
அரச கேந்திர யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
இவர்களுக்கு மக்கள் சக்தியின் மூலம் மகத்தான ஆதரவை பெரும் யோகம் உண்டாகும்.
வீனா யோகம் :
நவகிரகங்களில் ராகு-கேதுவை தவிர மற்ற 7 அதிபதிகள் 7 ராசிகளில் இருப்பது போன்ற அமைப்பு இருந்தால் வீனா யோகம் உண்டாகிறது.
வீனா யோகத்தின் பலன்கள்
இவர்கள் வாழ்கையில் எல்லா வசதி வாய்ப்புகளையும் பெற்றவர்களாக இருப்பார்கள். இவர்கள் சமுதாயத்தில் மதிப்பு மிக்க தலைவராக இருப்பார்கள. மேலும் இவர்களிடம் அறிவாற்றல் மிகுந்திருக்கும்.
கேதரா யோகம் :
நவகிரகங்களில் ராகு-கேதுவை தவிர மற்ற 7 அதிபதிகள் 4 ராசிகளில் இருப்பது போன்ற அமைப்பு கேதரா யோகம் கொண்ட அமைப்பாகும்.
கேதரா யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
இவர்கள் விவசாய துறையில் மிகுந்த ஞானம் உடையவர்கள். பிறருக்கு உதவிகள் செய்து அதன் மூலம் மகிழ்ச்சி அடைவார்கள்.
அன்னதான யோகம் :
லக்னத்திற்கு 2ம் அதிபதி பலம் பெற்று குரு அல்லது புதன் சம்பந்தம் பெற்று இருந்தால் அன்னதான யோகம் உண்டாகிறது.
அன்னதான யோகத்தின் பலன்கள் :
எல்லோருக்கும் உதவுவதில் விருப்பம் உடையவர்கள். அன்னதான உதவிகள் புரிவதில் சிறந்தவர்கள்.
விமலா யோகம் :
லக்னத்திற்கு 12ம் வீட்டில் உள்ள அதிபதி 12ம் வீட்டில் இருப்பது விமலா யோகம் ஆகும்.
விமலா யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
தொண்டு செய்யும் மனப்பான்மை உடையவர்கள். சுதந்திர எண்ணம் உடையவர்கள்.
சதுஸ்ர யோகம் :
லக்னத்திற்கு 1,4,7,1௦ வீடுகளில் அதிபதிகள் இருந்தால் சதுஸ்ர யோகம் உண்டாகிறது.
சதுஸ்ர யோகத்தின் பலன்கள் :
நல்ல குடும்ப வாழ்க்கை அமையும். புத்திர பாக்கியம் கிட்டும். செல்வ சேர்க்கை உண்டாகும்.
ராஜ யோகம் :
1,4,7,1௦ ஆகிய வீடுகளுக்கு அதிபதிகள் கேந்திரபதிகள் எனபடுவர். கேந்திர அதிபதிகள் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனை பெற்று இருப்பதால் உண்டாவது ராஜ யோகம் ஆகும்.
ராஜ யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
இவர்களுக்கு நல்ல வாழக்கை துணை அமையும். மனை யோகம் நன்மை தரும். செய்யும் தொழிலில் முன்னேற்றம் உண்டாகும். செல்வாக்கு அதிகரிக்கும்.
சாங்கியா யோகம் :
லக்னம் மற்றும் 9ம் வீடுகளில் ராகு, கேதுகளை தவிர மற்ற 7 கிரகங்களும் அமைந்து இருந்தால் சாங்கியா யோகம் உண்டாகிறது.
சாங்கியா யோகத்தின் பலன்கள் :
இவர்கள் உயர்ந்த குணம் உடையவர்கள் மற்றும் அமைதியானவர்கள். எல்லா செல்வங்களும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வார்கள்.
உபஜய யோகம் :
உபஜய ஸ்தானங்களான 3,6,10,11ம் வீடுகளில் குரு, சுக்கிரன், புதன் மற்றும் சந்திரன் ஆகிய சுப கிரகங்கள் இருந்தால் உபஜய யோகம் உண்டாகிறது.
உபஜய யோகத்தால் உண்டாகும் பலன்கள் :
வசதி மற்றும் சுகபோக வாழ்க்கை வாழ்வார். எண்ணிய மற்றும் எடுக்கும் காரியங்களில் வெற்றி பெறுவார்கள்.
உங்கள் ஜாதகத்தில் உள்ள யோகங்கங்களை பற்றி தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்.