சிறுநீரகத்தில் கல் வர என்ன காரணம்?
முறையற்ற உணவுப்பழக்க வழக்கத்தாலும் மாறிவரும் வாழ்வியலாலும் மனித உடலின் கழிவுகள் வெளியேறும் பாதையில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சிறுநீரகக் கல் பிரச்னை இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப் பாதையில் அளவுக்கு அதிகமான யூரிக் அமிலம், கால்சியம் போன்ற தாது உப்புகள் தேங்குவதால் உருவாகும் கற்களுக்கு சிறுநீரகக்கற்கள் என்று பெயர். சிறுநீரக பிரச்சனை என்பது இன்றைய சூழலில் சிறியவர் பெரியவர் என அனைவருக்குமே இருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.
ஆனால் இது உருவாவதற்கான காரணங்களை உறுதியாகக் கூறமுடியாவிட்டாலும், அதிகபட்ச வெப்பநிலை, அதிகப்படியான குளிர்ச்சி, இயல்பாக உடல் பலவீனம் கொண்டவர்கள், தவறான உணவுப் பழக்கம், போதுமான நீர் அருந்தாமை போன்ற காரணங்களாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
நாம் உண்ணும் உணவில் இருந்து தேவையான கால்சியம் நமக்கு கிடைக்கிறது. அதிகப்படியாக கால்சியம் நாம் மாத்திரைகளாகவோ, உணவாகவோ எடுக்கும்போது அவை சிறுநீரில் கழிவு பொருளாக வெளியேறுகிறது. இப்படிப்பட்ட சமயங்களில் கால்சியம் மூலகங்கள் ஆக்சலேட் மற்றும் பாஸ்பேட் உடன் சேர்ந்து சிறுநீர் தாரைகளில் படிகங்களாக படிந்து பின் கற்களாக மாறுகின்றன. சில சிறுநீர் பெருக்கி மருந்துகள் கால்சியம் கலந்த மருந்துகள் கல் உருவாகக்கூடிய வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
சிறுநீரகத்தில் இருந்து கல் வெளியேறி குறுகிய சிறுநீர்க் குழாயில் நுழைந்து வெளியேற முடியாமல் தடைபடும்போது இடுப்பைச் சுற்றி தாங்க முடியாத வலி ஏற்பட்டு, கடுமையான வியர்வை ஏற்படும். சிறுநீர் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும். ஒருவருக்கு ஒருமுறை சிறுநீரகத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கற்கள் வந்துவிட்டால், அடுத்தடுத்து கற்கள் உருவாவதற்கான வாய்ப்பு அதிகம் உண்டு.
நமது வாழ்க்கை முறை காரணமாக அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்படலாம். அல்லது உரிய நேரத்தில் சிறுநீர் கழிக்காமல் சிறுநீர் பையில் அதிக நேரம் தங்கினாலும் கல் உருவாகும். அதிக உடலுறவு அல்லது தடைபட்ட உடலுறவு போன்றவற்றால் மன உளைச்சல் ஏற்பட்டு அதனாலும் கல் ஏற்படலாம்.
சிறுநீரகத்தில் கல் இருப்பதற்கான அறிகுறிகள்
- பின்பக்க விலாவில் வலி அல்லது முதுகுவலி, ஒரு பக்கம் அல்லது இரண்டு பக்கத்திலும் அதிகரிக்கும் வலி
- குமட்டல், வாந்தி
- அடிக்கடி சிறுநீர் கழித்தல்
- சிறுநீர் அளவு அதிகரித்தல்
- சிறுநீரில் இரத்தம் காணப்படுதல்
- அடிவயிற்றில் வலி
- வலியோடு கூட சிறுநீர் கழித்தல்
- இரவு நேரத்தில் அதிக அளவு சிறுநீர் கழித்தல்
- ஆணின் முதன்மை இனப்பெருக்க உறுப்பில் (டெஸ்டிகல்) வலி
- சிறுநீரின் நிறம் இயற்க்கைக்கு மாறாக காணப்படுதல்
- உடல் எடை இழப்பு
- வாந்தி
- உடல்நலக்குறைவு
- சோர்வு
- தலைவலி
- அடிக்கடி ஏற்படும் விக்கல்
- உடலில் ஏற்படும் அரிப்பு
சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் செய்ய வேண்டியவை
- சிறுநீரக கற்களைத் தடுக்க ஒருநாளைக்கு குறைந்தது 8 கிளாஸ் தண்ணீர் குடிக்க வேண்டும்.சிறுநீரகத்தில் கல் இருந்தால், நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்ள வேண்டும்.
- தண்ணீர் அதிகம் அருந்தினால் சிறுநீர் கல் தானாகவே கரைந்து வெளியேறும்.
- தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில் அறுவை சிகிச்சை மூலம் கல்லை வெளியேற்ற வேண்டிய அவசியம் ஏற்படும்.
- தர்பூசணி, திராட்சை போன்ற பழங்களில் ஏராளமான அளவில் நீர்ச்சத்துள்ளது. சிறுநீரக கல் பிரச்சனை இருப்பவர்கள், இந்த பழத்தை தினமும் உட்கொண்டு வந்தால் மிகவும் நல்லது.
- அதிகமான பழங்கள், காய்கறி, பருப்பு ஆகியவை உட்கொள்வதின் மூலம் சிறுநீரகத்தில் கற்கள் உருவாவதை தடுக்க முடியும்.
- அதிக தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தபட்சம் 3 முதல் 5 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும்.
- பாலில் தயாரிக்கப்பட்ட உணவு வகைகளில் கால்சியம் அதிகம் இருப்பதால் அவற்றை குறைவாக சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- வைட்டமின் டி சத்துள்ள உணவு வகைகளைத் தவிர்க்க வேண்டும்.
- எண்ணெயில் பொரிக்கப்பட்ட மற்றும் மசாலா சேர்த்த உணவுப் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.
- சிறுநீரகத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, வைட்டமின் சி அதிகம் நிறைந்த ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களை அதிகம் எடுத்துக் கொள்வது நல்லது.
- சர்க்கரை வள்ளி கிழங்குகளில் வைட்டமின்கள் மற்றும் அதிக அளவு நார் சத்து உள்ளது. இது எடை குறைப்பதற்கு உதவுவதுடன், சிறுநீரகத்திற்கும் ஆரோக்கியமான உணவாக பரிசீலிக்கப்படுகிறது.
சிறுநீரகத்தில் கல் இருப்பவர்கள் சாப்பிடகூடாதவை
- கால்சியம் மற்றும் வைட்டமின் டி இருக்கும் உணவுகளை கட்டாயமாக தவிர்க்க வேண்டும். சிறுநீரக கற்களைத் தவிர்க்க தக்காளி, ஆப்பிள், கீரை போன்ற அதிக ஆக்சலேட் பழங்கள் மற்றும் காய்கறிகளைத் தவிர்க்கவும்.
- புரதம் அதிகம் உள்ள உணவுகளான, இறைச்சி மற்றும் மீன் போன்றவற்றை மிதமான அளவு எடுத்துக் கொள்வது நல்ல பலனை தரும்.
- கொழுப்பு அதிகம் சேர்க்கப்பட்ட, பாலில் இருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகளான சீஸ், தயிர், வெண்ணெய் போன்றவற்றை குறைவாக சாப்பிட வேண்டும்.
- பூண்டு, வெங்காயம், முள்ளங்கி, கேரட் ஆகியவற்றில் சோடியம் மற்றும் ஆக்சலேட் அதிக அளவில் உள்ளது. எனவே, இவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.