தந்தூரி சிக்கன் பிரியாணி
எளிமையான முறையில் வீட்டிலேயே மிகவும் சுவையாக தந்தூரி சிக்கன் பிரியாணி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சிக்கன் தொடை பகுதி – 4
- தயிர் – ஒரு கப்
- இஞ்சி பூண்டு விழுது – 50 கிராம்
- கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
- எலுமிச்சை சாரு – சிரிதளவு
- மிளகாய்த்தூள் – 1 ஸ்பூன்
- கரம் மசாலா – 1 ஸ்பூன்
- மிளகு தூள் – 1 ஸ்பூன்
- சீரகத்தூள் – 1 ஸ்பூன்
- கஸ்துரி மேத்தி – ½ ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
பிரியாணி செய்ய
- பாஸ்மதி அரிசி – ½ கிலோ
- வெங்காயம் – 4
- தக்காளி – 4
- இஞ்சி பூண்டு விழுது – 2 தேக்கரண்டி
- பச்சை மிளகாய் – 2
- மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
- கரம் மசாலா – 1 ஸ்பூன்
- புதினா – 1 கைப்பிடி
- கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
- பட்டை – 1 பெரிய துண்டு
- பிரிஞ்சு இலை – 2
- இலவங்கம் – 3
- ஏலக்காய் – 2
- அண்ணாசிப்பூ – 2
செய்முறை
- சிக்கனை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
- பாஸ்மதி அரிசியை ½ மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
- ஒரு மிக்சி ஜாரில் தயிர், கொத்தமல்லி , இஞ்சி பூண்டு விழுது, எலுமிச்சை சாரு , மிளகாய் தூள், கரம் மசாலா, மிளகு தூள், சீரக தூள், கஸ்துரி மேத்தி, சிறிதளவு உப்பு சேர்த்து அரைத்து அதில் சிக்கனுடன் நன்கு கலந்து ஊற வைக்கவும்.
- சிக்கன் 1 மணி நேரம் ஊறிய பின் எண்ணெய் சேர்த்து பொறித்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் பிரியாணி செய்ய ஒரு அகன்ற பாத்திரத்தை எடுத்துக் கொள்ளவும்.
- பிரியாணிக்கு தேவையான அளவு எண்ணெய் சேர்த்து கொள்ளவும்.
- எண்ணெய் சூடானதும் பட்டை, பிரிஞ்சி இலை, இலவங்கம், ஏலக்காய் அன்னாசி பூ சேர்த்து தாளிக்கவும்.
- தாளித்தவுடன் வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும்.
- வெங்காயம் வதங்கியதும் புதினா, கொத்தமல்லி, பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.
- பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- மிளகாய் தூள், கரம் மசாலா தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கவும்.
- மசாலா பச்சை வாசனை போனவுடன் பொறித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து வதக்கவும்.
- 1 கப் அரிசிக்கு 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- நன்கு கொதித்தவுடன் ஊற வைத்த அரிசியை கலந்து, சிறிதளவு எலுமிச்சை சாறு, கேசரி கலர் சேர்த்து வேக விடவும்.
- அடுப்பை மிதமான தீயில் வைத்து 10 முதல் 15 நிமிடம் தம்மில் போடவும்.
- பின்னர் அடுப்பை அனைத்து ½ மணி நேரம் கழித்து பரிமாறினால் சுவையான தந்தூரி சிக்கன் பிரியாணி தயார்.