தலப்பாகட்டு மட்டன் பிரியாணி
தேவையான பொருட்கள்
- சீரக சம்பா அரிசி (அல்லது) பாஸ்மதி அரிசி – ½ கிலோ
- மட்டன் கறி – ½ கிலோ
- பெரிய வெங்காயம் – 3 ( பெரியது )
- தக்காளி – 2 ( பெரியது )
- பச்சை மிளகாய் – 2
- இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன்
- தயிர் – 1 கப்
- தனி மிளகாய்த்தூள் – 4 ஸ்பூன்
- மல்லித் தூள் – 2 ஸ்பூன்
- பட்டை – 3 துண்டு
- கிராம்பு – 2
- ஏலக்காய் – 2
- எலுமிச்சை சாறு – 2 ஸ்பூன்
- எண்ணெய் – தேவையான அளவு
- நெய் – தேவையான அளவு
- உப்பு – தேவையான அளவு
- புதினா – சிறிதளவு
- கொத்தமல்லி தழை – சிறிதளவு
செய்முறை
- மட்டனை பெரிய துண்டுகளாக வெட்டி நன்கு சுத்தம் செய்து வைத்துக் கொள்ளவும்.
- பின் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் நீள வாக்கில் மெல்லியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- அரிசியை 2 முறை கழுவிய பின் அரைமணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.
- பின்னர் ஒரு பெரிய அகன்ற பாத்திரத்தில் எண்ணெய், நெய் இரண்டையும் சம அளவில் சேர்த்துக் கொள்ளவும்.
- எண்ணெய் சூடானவுடன் அதில் பட்டை, கிராம்பு, ஏலக்காய் போட்டு தாளிக்கவும்.
- தாளித்த பின் நீளமாக நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்க்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக சிவந்து வதங்கியதும் நீளமாக நறுக்கி வைத்துள்ள தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும்.
- தக்காளி நன்கு கரைந்து வதங்கியவுடன் 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ளவும்.
- இத்துடன் 4 ஸ்பூன் தனி மிளகாய் தூள், 2 ஸ்பூன் மல்லி தூள் சேர்த்து நன்கு வதக்கவும். மசாலாவின் பச்சை வாசனை போன பின் 1 கப் தயிர், 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும்.
- அத்துடன் சிறிதளவு புதினா, கொத்தமல்லி சேர்த்து வதக்கிக் கொள்ளவும்.
- இப்போது சுத்தம் செய்து வைத்துள்ள மட்டனை சேர்த்துக் கொள்ளவும். மட்டனை சேர்த்து ஒரு 5 நிமிடத்திற்கு நன்றாக கிளறி விடவும்.
- மசாலாவும் மட்டனும் இரண்டற கலக்கும் விதம் நன்கு கிளறி விடவும்.
- பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து ஒரு மூடி பொட்டு கொதிக்க விடவும்.
- நன்கு கொதிக்கும் நேரத்தில் ஊற வைத்துள்ள அரிசியை சேர்க்கவும்.
- இப்போது தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
- மிதமான தீயில் 20 நிமிடம் வேக விடவும்.
- 20 நிமிடத்திற்கு பின் மூடியை திறந்து சிறிதளவு கொத்தமல்லி தழை , கொஞ்சம் நெய் சேர்த்து இறக்கினால் சுவையான தலப்பாகட்டு மட்டன் பிரியாணி ரெடி.