சுவையான சுறா புட்டு செய்வது எப்படி

சுவையான சுறா புட்டு செய்வது எப்படி

கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு சுறா புட்டு மிக சிறந்த உணாவாகும். குழந்தை பெற்ற தாய்மார்கள் சுறா புட்டை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொண்டால் நன்கு பால் சுரக்கும். சுறா மீனுக்கு பால் பெருக்கி என்ற ஒரு சிறப்பு பெயரும் உண்டு. சுவையான சுறா புட்டு எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்.

சுறா புட்டு செய்வது எப்படி

தேவையான பொருட்கள்

  1. சுறா மீன் – 1/2 கிலோ
  2. வெங்காயம் – 4 ( பொடியாக நறுக்கியது )
  3. பூண்டு – 20 பல் பெரியது ( பொடியாக நறுக்கியது )
  4. இஞ்சி – 1 பெரிய துண்டு ( பொடியாக நறுக்கியது )
  5. பச்சை மிளகாய் – 3 ( பொடியாக நறுக்கியது )
  6. மஞ்சள் தூள் – ½ ஸ்பூன்
  7. தனி மிளகாய் தூள் – 1 ஸ்பூன்
  8. மல்லி தூள் – ½ ஸ்பூன்
  9. மிளகு தூள் – 1 ஸ்பூன்
  10. உப்பு – தேவையான அளவு
  11. எண்ணெய் – தேவையான அளவு
  12. கறிவேப்பிலை – சிறிதளவு
  13. கொத்தமல்லி தழை – சிறிதளவு
  14. கடுகு – ½ ஸ்பூன்

செய்முறை

  1. முதலில் சுறா மீனை ஆய்ந்து சுத்தம் செய்து குடல்களை நீக்கி கழுவி பின் இரண்டாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்.
  2. சுத்தம் செய்த சுறா மீனை நன்கு கொதித்த வெந்நீரில் 5 முதல் 8 நிமிடம் வரை பொட்டு வைக்கவும்.
  3. இப்போது சுறா மீனை வெந்நீரில் இருந்து எடுத்து மீனின் மேல் உள்ள தோலை எடுத்து விடவும்.
  4. மீனின் தோலை நன்கு சுத்தம் செய்து எடுத்து விட்டு மீனை 2 முறை நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
  5. மீனில் சிறிதும் தண்ணீர் இல்லாமல் நன்கு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்.
  6. பிழிந்து எடுத்த மீனை நன்கு உதிர்த்துக் கொள்ளவும்.
  7. மீனை நன்கு உதிர்த்த பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், மிளகு தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு பிசறி விடவும்.
  8. மசாலா மீன் முழுவதும் கலக்குமாறு நன்கு கலந்து விடவும்.
  9. இதை ஒரு ½ மணி நேரம் அப்படியே மூடி பொட்டு மூடி வைக்கவும்.
  10. அரை மணி நேரம் ஆன பின் ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றவும்.
  11. எண்ணெய் காய்ந்ததும்  கடுகு கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
  12. பின் இதில் பொடியாக நறுக்கிய பூண்டு, பச்சை மிளகாய், இஞ்சி சேர்த்து வதக்கவும்.
  13. வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
  14. வெங்காயம் நன்கு வதங்கியதும் ஊற வைத்துள்ள மீன் மசாலாவை சேர்த்து நன்கு கிளறவும்.
  15. 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து நன்கு கிளறி விட வேண்டும்.
  16. 10 நிமிடத்திற்கு பிறகு சுறா புட்டு நன்கு உதிர் உதிராக வந்திருக்கும்.
  17. இப்போது சிறிதளவு கொத்தமல்லி தழை சேர்த்து கிளறி இறக்கினால் சுவையான சுறா புட்டு தயார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles

7ம் எண் குணநலன்கள்

7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள்

7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணநலன்கள் 7ம் எண் கேது பகவானுக்குரிய எண்ணாகும். 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் கேதுவின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் ஆவார்கள். 7ம் எண்ணில் பிறந்தவர்களின் குணங்கள் மற்றவர்கள் செல்லும் வழியை தவிர்த்து...
how to make prawn 65 recipe

ஹோட்டல் ஸ்டைல் இறால் 65

இறால் 65 தேவையான பொருட்கள் இறால் – ½ கிலோ சோளமாவு - 1 ஸ்பூன் மைதா மாவு - 1 ஸ்பூன் முட்டை – 1 தயிர் – 2 ஸ்பூன் இஞ்சி,...
நரை முடி வராமல் தடுக்க

நரை முடி கருமையாக வளர சில டிப்ஸ்

நரை முடி கருமையாக வளர சில டிப்ஸ் நமது வாழ்வியல் மாற்றங்களும் முடி நரைப்பதற்கு ஒரு முக்கிய காரணமாக உள்ளது. முடி நரைப்பதற்கு ஊட்டச்சத்து குறைபாடும் ஒரு முக்கிய காரணமாகும். உணவு பழக்க வழக்கத்தில் சில...
கன்னி ராசி குணங்கள்

கன்னி ராசி பொது பலன்கள் – கன்னி ராசி குணங்கள்

கன்னி ராசி குணங்கள் கன்னி ராசியின் அதிபதி புதன் பகவான் ஆவார். கன்னி ராசியில் உத்திரம் நட்சத்திரத்தின் 2,3,4 ஆம் பாதம், ஹஸ்தம் நட்சத்திரத்தின் அனைத்து பாதங்களும் மற்றும் சித்திரை நட்சத்திரத்தின் 1, 2...
coconut barfi preperation

எளிமையான முறையில் தேங்காய் பர்ஃபி செய்வது எப்படி ?

தேங்காய் பர்ஃபி தேவையான பொருட்கள் துருவிய தேங்காய் - 1 கப் சர்க்கரை - 1 கப் தண்ணீர் - 1/4 கப் முந்திரி - 1 டேபிள் ஸ்பூன் நெய் - 4...
brinjal uses in tamil

கத்திரிக்காய் மருத்துவ குணங்கள் | Brinjal Benefits in Tamil

கத்திரிக்காய் கத்தரிக்காய் செடியின் அறிவியல் பெயர் சொலனும் மெலோங்கெனா ஆகும். கத்தரிச் செடிகள் பூக்கும் செடி கொடிகளைச் சேர்ந்த சொலானனேசியே என்னும் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு செடிவகையாகும். சொலான்னேசியேக் குடும்பத்தில் தக்காளி, உருளைக்கிழங்கு போன்ற...
பூக்கள் கனவு பலன்கள்

மரங்கள் அல்லது செடிகள் கனவில் வந்தால் ஏற்படும் பலன்கள்

மரங்கள் அல்லது செடிகள் கனவில் வந்தால் பலருக்கும் பலவிதமான வித்தியாசமான கனவுகள் ஒவ்வொரு நாளும் வரும். அதில் ஒரு சில விசித்திரமான கனவுகள் அவர்களை மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தும். ஏன் இந்த கனவு வந்தது,...

Follow by Mail

Get all latest content delivered straight to your inbox.