சோமாஸ்
தேவையான பொருட்கள்
- மைதா – 1 கப்
- உப்பு – சிறிதளவு
- உருக்கிய டால்டா (அ) நெய் – 2 டேபிள் ஸ்பூன்
- எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு
பூரணம் செய்ய
- ரவை – 1/2 கப்
- மெல்லிய சேமியா – 1/2 கப்
- சர்க்கரை – 3/4 கப்
- தேங்காய்த் துறுவல் – 3/4 கப்
- பொடித்த ஏலக்காய் – 1/4 டீஸ்பூன்
- நெய் – 1 1/2 டேபிள் ஸ்பூன்
- முந்திரி, திராட்சை – தேவையான அளவு
செய்முறை:
- சோமாஸ் செய்வதற்கு முதலில் 1 கப் மைதா மாவில் உப்பு, நெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- பிசைந்த மாவினை 2 மணி நேரத்திற்கு ஊறவைக்கவும்.
- பின்னர் தேங்காய் துருவலை வெறும் சேர்த்து கடாயில் வாசனை வரும் வரை வதக்கி எடுத்துக் கொள்ளவும்.
- பின் அதே கடாயில் வதக்கிய தேங்காய் மற்றும் ஏலக்காய்த் தூள், ரவை, சேமியா, முந்திரி, திராட்சை, சர்க்கரை அனைத்தையும் ஒன்றாக கலக்கவும். அவ்வளவுதான் பூரணம் தயார்.
- மைதா மாவை நன்கு பிசைந்து சிறு சிறு உருண்டைகளாக்கி மெல்லியதாக பூரி போல் தேய்க்கவும்.
- தேய்த்த பூரியில் பூரணத்தை வைத்து நன்றாக ஓரங்களை மடித்து அல்லது சோமாஸ் கட்டரில் வெட்டி எடுக்கவும்.
- பிறகு மிதமான சூட்டில் இருக்கும் எண்ணெயில் சேர்த்து பொறித்து எடுத்தால் சுவையான சோமாஸ் ரெடி.